Namakkal

News September 24, 2025

நாமக்கல்: தொழில் தொடங்க ரூ.6 லட்சம் மானியம்!

image

நாமக்கல்: முதலமைச்சரின் உழவர் நல சேவை மையங்கள் அமைப்பதற்கு வேளாண் பட்டதாரிகள் (ம) பட்டயதாரர்களுக்கு ரூ.3 லட்சம் – ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது. எனவே, சுயதொழில் தொடங்க நினைப்போர் முதலில் விரிவான திட்ட அறிக்கையுடன் வங்கியில் கடன் பெற்று, பிறகு https://www.tnagrisnet.tn.gov.in/ என்ற இணையதளத்தில் மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

News September 23, 2025

நாமக்கல்: நான்கு சக்கர போலீசார் விவரம் வெளியீடு!

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.23 நாமக்கல்-(தங்கராஜ்-9498110895) ,வேலூர் -(சுகுமாரன் -8754002021), ராசிபுரம் -(சின்னப்பன் -9498169092), திம்மநாயக்கன்பட்டி -(ஞானசேகரன்- 9498169073) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

News September 23, 2025

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (23.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News September 23, 2025

நாமக்கல்: குண்டர் சட்டத்தில் 2 பேர் கைது!

image

நாமக்கல்: திருச்செங்கோடு, அணிமூர் பகுதியில் சாராயம் விற்ற சுப்பிரமணி, தங்கவேல் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்யப்பட்டு, சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில், இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி. விமலா, கூடுதல் எஸ்.பி. தனராசு (மதுவிலக்கு) ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதையடுத்து, கலெக்டர் துர்காமூர்த்தி குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.

News September 23, 2025

நாமக்கல்: DRIVING தெரிந்தால் அரசு வேலை!

image

நாமக்கல் மக்களே, உங்களுக்கு Driving தெரியுமா? 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ஊரக வளர்ச்சி (ம) ஊராட்சித்துறையின் கீழ் மாவட்ட வாரியாக ஓட்டுநர், அலுவலக உதவியாளர், எழுத்தர் மற்றும் இரவு காவலர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் <<>>பண்ணுங்க. கடைசி தேதி 30.09.2025 ஆகும். SHARE பண்ணுங்க.. ஒருவருக்காவது உதவும்!

News September 23, 2025

BREAKING: நாமக்கல்லில் ஐ.டி. ரெய்டு!

image

நாமக்கல்லில் முட்டை கோழி பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சங்கத் தலைவர் வாங்கிலி சுப்பிரமணி வீட்டில் ஐ.டி. சோதனை நடைபெற்று வருகிறது. கோவையிலிருந்து வந்த 15க்கும் மேற்பட்ட வருமானவரித் துறை அதிகாரிகள் குழுவினர் சோதனை நடத்தி வருகின்றனர். வாங்கிலி சுப்பிரமணி வீடு, அலுவலகம். நிதி நிறுவனம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.

News September 23, 2025

நாமக்கல்லில் நகை மதிப்பீட்டாளர் பயிற்சி APPLY NOW

image

நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாட்களான சனி(ம)ஞாயிற்றுகளில் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி அக்.15ல் தொடங்க உள்ளது. பயிற்சிக்கான விண்ணப்பத்தை பயிற்சி நிலையத்தில் ரூ.118 செலுத்தி பெற்று கொள்ளலாம். கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல்-சேலம் சாலை முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தை தொடர்பு கொள்ளலாம். SHARE IT

News September 23, 2025

நாமக்கல்: B.E/B.Tech முடித்தவர்களுக்கு வங்கி வேலை!

image

நாமக்கல் மக்களே, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கியில் உதவி பொது மேலாளர், டேட்டா அனலிஸ்ட், ஐடி செக்யூரிட்டி, ஐடி இன்பிராஸ்ட்ரக்சர் என 41 வகையான பதவிகளில் 349 பணியிடங்கள் உள்ளன. B.E/B.Tech, MCA, M.Sc உள்ளிட்ட படிப்புகள் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தது ரூ.1.40 லட்சம் சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <>இங்கு கிளிக்<<>> பண்ணுங்க. வரும் 30.09.2025 கடைசி நாளாகும். SHARE IT!

News September 23, 2025

நாமக்கல்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நாமக்கல் மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 23, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்று (23-09-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோவுக்கு ரூ.108- ஆகவும், முட்டை கோழி விலை கிலோவுக்கு ரூ. 107- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ. 5.25 ஆக நீடித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!