India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (24.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நாளை வியாழக்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் நாமக்கல் மாநகராட்சி வசந்தபுரம் அரசு நடுநிலைப்பள்ளி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அண்ணா வெள்ளிவாரச்சந்தை சமுதாயக்கூடம், எலச்சிபாளையம் வட்டாரம் சத்திநாயக்கன்பாளையம், மற்றும் கபிலர்மலை வட்டாரம் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறை தீர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அண்ணாதுரை தலைமையில், நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்தனர். மனுக்கம் மீது உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்ற நிகழ்ச்சி நாளை செப்டம்பர்-25ந் தேதி வியாழக்கிழமை அனைத்து அரசு, தனியார் பள்ளி கல்லூரிகளில் நடைபெற உள்ளது. மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சி இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறந்த மாணாக்கர்கள், ஆசிரியர்கள், மற்றும் கல்வி செயல்பாட்டாளா்களுக்கு, பாராட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

தவெக தலைவர் விஜய் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நாமக்கல்லில் வரும் செப்.27ம் தேதி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். இவர் காலை 10 மணிக்கு நாமக்கல் பொய்யேரி கரை சாலையில் பரப்புரை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நாமக்கல்லில் பரப்புரை செய்ய 20க்கும் அதிக நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் முக்கிய பிரச்சனைகள் குறித்து பேசுவார் என எதிர்பார்ப்பு!

நாமக்கல் மக்களே.. தொடர்ந்து வேலை தேடுபவரா நீங்கள்? வங்கியில் பணி புரிய ஆசையா..? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. பேங் ஆஃப் பரோடா வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. மாதம் ரூ.64,820 முதல் சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே, மத்திய அரசு நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் காலியாக உள்ள 119 Junior Executive பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதற்கு ரூ.35,000/-முதல் சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் 26.09.2025 தேதிக்குள் <

நாமக்கல் மக்களே, மத்திய பணியாளர் தேர்வாணயம் (SSC), காலியாக உள்ள 7565 கான்ஸ்டபிள் பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு 12வது படித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.21,700 – ரூ.69,100 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே, வாட்ஸ்அப் மூலம் சமையல் சிலிண்டரை எளிதாக புக்கிங் செய்யலாம். இண்டேன் (75888 88824), எச்.பி. (92222 01122) பாரத் கியாஸ் (18002 24344) சிலிண்டர் நிறுவனத்தின் எண்ணை உங்கள் மொபைலில் சேமித்து, அந்த எண்ணுக்கு ‘Hi’ என மெசேஜ் அனுப்புங்கள். அதன்பின், மெனுவில் இருக்கும் ‘Book Cylinder’ ஆப்ஷனை தேர்ந்தெடுத்து, உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து சிலிண்டரை ஈசியாக புக் செய்யலாம். SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே பிறப்பு, இறப்பு சான்றிதழ் தொடர்பான சேவைகள், சொத்து வரி செலுத்துதல் , பொதுமக்கள் குறைதீர்க்கும் சேவைகள் என 32 வகையான சேவைகளுக்கு இனி எங்கும் அலைய வேண்டாம். உங்கள் பகுதிக்கான அனைத்து சேவைகளுக்கும் 9445061913 எனும் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஒரு ‘HI’ அல்லது ‘வணக்கம்’ மெசேஜை அனுப்பினால் போதும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.