India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1.நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தில் நிலம் வாங்க ரூ.5 லட்சம் மானியம் வழங்கப்படுகிறது
2.குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்
3.2.5 ஏக்கர் நஞ்சை நிலம் அல்லது 5 ஏக்கர் புஞ்சை நிலம் வாங்கலாம்
4.100 சதவித முத்திரைத்தாள்,பதிவுக்கட்டணம் இலவசம்
5.newscheme.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும்
6.மேலும் விவரங்களுக்கு உங்கள் மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகலாம்.SHARE பண்ணுங்க!

நாமக்கல் மக்களே பிரதம மந்திரியின் PM YASASVI கல்வி உதவித்தொகை பெற பிற்படுத்தப்பட்டோர் (BC/MBC/DNC), பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள். சீர்மரபினர் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்த விவரங்களுக்கு <

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் 24ம் தேதி முதல் 25 நாட்களுக்கு சிறப்பு பயிற்சி நடைபெற உள்ளது அதன்படி வெள்ளாடு வளர்ப்பு, பால் உற்பத்தி செய்யும் தொழில், செம்மறியாடு வளர்ப்பு, ஜப்பானிய காடை வளர்ப்பு, நாட்டுக்கோழி வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது மேலும் கூடுதல் விபரங்களுக்கு 04286-266345, 266650, 9943008802 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில், செப்டம்பர்-27அன்று காலை 6.30 மணியளவில் மிதிவண்டி போட்டிகள் மற்றும் செப்டம்பர்-28அன்று காலை 6.30 மணியளவில் மாரத்தான் ஓட்டப்போட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவுவாயில் முன் துவங்கி நடைபெற உள்ளது. மேலும், முன்பதிவு மற்றும் கூடுதல் தகவல் தொடர்புக்கு 82203-10446 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் ஏஎஸ்பி ஆகாஷ் ஜோசி மற்றும் போலீசார் இரவு நகரில் உள்ள மசாஜ் சென்டர்களில் திடீர் சோதனை செய்தனர். அதில் சேலம் ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் 2 பெண்கள், திருச்சி ரோட்டில் உள்ள ஒரு மசாஜ் சென்டரில் 3 பெண்கள் வைத்து விபசாரம் செய்த மசாஜ் சென்டர் மேலாளர்கள் ஆனந்தி (33), தமிழ்செல்வன் (28) ஆகியோரை கைது செய்து, மொத்தம் 5 மசாஜ் சென்டர்களில் 19 பெண்கள் மீட்கப்பட்டனர்.

நாமக்கல், கொசவம்பட்டியை சேர்ந்தவர் வீரக்குமாரன், 38; இவர் மது விற்ற வழக்கில், மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். சேந்தமங்கலம் நீதிமன்றத்தில் இந்த வழக்கில் ஆஜராக, நேற்று முன்தினம் நீதிமன்றத்துக்கு வந்த வீரக்குமாரன், அங்கிருந்த மதுவிலக்கு போலீஸ் கார்த்திக் என்பவருக்கு, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து புகார்படி, வீரக்குமாரன் மீது சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (செப்.25) ‘உங்களுடன் ஸ்டாலின்’ மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் நாமக்கல் மாநகராட்சி வசந்தபுரம் அரசு நடுநிலைப்பள்ளி, நாமகிரிப்பேட்டை பேரூராட்சி அண்ணா வெள்ளிவாரச்சந்தை சமுதாயக்கூடம், எலச்சிபாளையம் வட்டாரம் சத்திநாயக்கன்பாளையம், மற்றும் கபிலர்மலை வட்டாரம் மகளிர் சுய உதவிக் குழு கட்டிடத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாமக்கல்லைச் சேர்ந்த கிளாரினெட் இசைக் கலைஞர் பிரபு. தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில், மாவட்ட விருதான கலை சுடர்மணி விருதும், தனியார் அமைப்புகள் சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது. தற்போது தமிழக அரசு நாமக்கல் கிளாரினெட் இசைக் கலைஞரின் இசை சேவையைப் பாராட்டி அவருக்கு கலைமாமணி விருது அறிவித்துள்ளது. வரும் அக்டோபர் மாதம் சென்னையில் நடைபெறும் விழாவில் தமிழக முதல்வர் வழங்க உள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று (செப்.24) நாமக்கல் – (தேசிங்கன்- 8668105073) ,வேலூர் – (ரவி- 9498168482), ராசிபுரம் -(சின்னப்பன்- 9498169092 ), திம்மநாயக்கன்பட்டி – (ரவி -9498168665) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (24.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.