India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகர் விஜய், திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி சுப்புராயனுக்கு மணிமண்டபம் கட்டப்படவில்லை எனக் குற்றம் சாட்டினார். இதற்குப் பதிலளித்த எம்.பி. ராஜேஷ்குமார், சுப்புராயன் பிறந்த ஊரான புதுச்சத்திரத்தில் மணிமண்டபம் கட்டும் பணி 90% முடிந்துவிட்டது என்றும், அது விரைவில் திறப்பு விழா காண உள்ளது என்றும் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (27.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் இன்று செப்.27ம் தேதி தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 காசுகள் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டது. மழை குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் நுகர்வு அதிகரித்த போதிலும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரு.5.05 ஆகவே நீடிக்கிறது.

’திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான ஒரு மருத்துவக் கல்லூரியில் நடந்த கிட்னி திருட்டு நாடறிந்த விஷயம். இதில் நாமக்கல்லை சார்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். குறிப்பாக விசைத்தறியில் பணிபுரியும் ஏழைப் பெண்களை குறிவைத்து கிட்னி திருட்டு நடந்ததாக சொல்கிரார்கள். இதில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தவெக ஆட்சி அமைந்ததும் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்” என நாமக்கல்லில் விஜய் பேச்சு.

தமிழக அரசின் TNRights திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 1,096 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிக்கு 10, 12th , டிகிரி முடித்தவர்கள், உரிய பணி அனுபவம் உள்ளவர்கள் என பலரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.35,000 வரை வழங்கப்படும். அக். 14க்குள் <

நாமக்கல் மக்களே மத்திய அரசு உளவுத்துறையில் காலியாகவுள்ள 455 காவல் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. மாத சம்பளமாக ரூ.21,700 முதல் ரூ.69,100 வழங்கப்படுகிறது. இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே.., தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில்(TNSTC) காலியாக உள்ள அப்பரண்டீஸ் பணிகளுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு டிப்ளமோ, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 1588 காலிப் பணியிடங்கள் உள்ளன. ஆன்லைனில் விண்ணப்பிக்க <

நாமக்கல் மக்களே.., வருகிற அக்.1ஆம் தேதி முதல் உங்கள் ஆதார் கார்டில் பெயர், பிறந்த தேதி, மொபைல் எண், ஆவணங்கள் திருத்தம் செய்ய ரூ.75, தொலைந்த ஆதாரை கண்டுபிடித்தல், கலர் பிரிண்ட் அவுட்டிற்கு ரூ.40, பையோ மெட்ரிக் அப்டேட் செய்ய ரூ.125 வசூலிக்கப்படவுள்ளது. மேலும், ஆதார் சேவையில் முறைகேடு, சந்தேகங்கள், புகார்கள் போன்றவைகளுக்கு 1947 என்ற எண்ணை அழைக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE!

நாமக்கல்: கே.எஸ் தியேட்டர் மெயின் ரோடு பகுதியில் இன்று(செப்.27) காலை 8:45 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பிரச்சாரம் செய்ய வருகை தருகிறார். அதை முன்னிட்டு அப்பகுதியில் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், ரசிகர்கள் பல்வேறு முன்னேற்பாடு பணிகளை செய்துள்ளனர். இந்நிலையில், அவர் நாமக்கல்லின் எந்தப் பிரச்னை குறித்து பேசுவார் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. எதை பேசலாம் என COMMENT பண்ணுங்க!

நாமக்கல் மண்டலத்தில் இன்று(செப்.27) கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோவுக்கு ரூ.111 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கறிக்கோழி விலை ரூ.123 ஆக இருந்த நிலையில், நேற்று(செப்.26) நடந்த கூட்டத்தில் ரூ.12 குறைக்கப்பட்டது. சந்தையில் இதன் விலை ரூ.130 முதல் ரூ.170 வரை விற்பனையாகிறது. இதனால், பொதுமக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முட்டைக் கோழி விலை ரூ.107 ஆக உள்ளது.
Sorry, no posts matched your criteria.