India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல்: நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள திம்மநாய்க்கன்பட்டியைச் சேர்ந்தவர் குணசேகரன்(58). தொழிலாளியான இவர், தனது பைக்கில் வேப்பிலைபட்டிக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிரே சைக்கிளில் சென்ற முதியவர் ராமன்(70) என்பவர் மீது அவர் பைக் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் கிளைக் கூட்டம் நேற்று (செப்டம்பர் 28) நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 ஆக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக நிலவி வரும் மழை மற்றும் குளிர் காரணமாக முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. நாளை (செப்டம்பர் 29) முதல் முட்டையின் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.28 நாமக்கல் – (தேசிங்கன் -8668105073) ,வேலூர் – ( ரவி -9498168482), ராசிபுரம் -(கோவிந்தசாமி -9498169110), திம்மநாயக்கன்பட்டி -(ரவி- 9498168665) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (28.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல்லில் நேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பரப்புரை மேற்கொண்டார். இந்த நிலையில் அனுமதியின்றி பிளக்ஸ், பேனர் வைத்ததாக தவெக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் சதீஷ் மற்றும் 7 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். போக்குவரத்துக்கு இடையூறாக பிளக்ஸ், பேனர் வைத்த காரணத்தால் 2 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாமக்கல் மக்களே, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாக உள்ள Specialist Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு B.E/B.Tech, MBA, M.Sc, MCA, M.E/M.Tech படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாதம் Rs.64,820 முதல் Rs.1,05,280 வரை சம்பளம் வழங்கப்படும். கடைசி தேதி 03.10.2025 ஆகும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்?, என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார்.(ஷேர் பண்ணுங்க)

நாமக்கல் மக்களே பாரத ஸ்டேட் வங்கியில் (SBI), மேலாளர் (Credit Analyst), மேலாளர் மற்றும் துணை மேலாளர் (Products – Digital Platforms) ஆகிய 122 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க கடைசி தேதி அக்.2 ஆகும். மேலும் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 39க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து கரூர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனார். இவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நாமக்கல்லிருந்து 9 பேர் கொண்ட மருத்துவக் குழு கரூர் மருத்துவமனையில் மருத்துவ பணி மேற்கொள்கின்றனர் என துணை முதல்வர் உதயநிதி தகவல் தெரிவித்துள்ளார்.

நாமக்கல்லில் சொந்தமாக வீடு அல்லது வீட்டு மனை வாங்குபவர்கள், அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்வது அவசியம். முன்பெல்லாம் பட்டா வாங்க வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் செல்ல வேண்டியது இருந்த நிலையில் தற்போது ஆன்லைனில் வந்துவிட்டது. https://tamilnilam.tn.gov.in/citizen/ வெப்சைட்டில் போன் நம்பர், வீட்டு முகவரி போன்ற விவரங்களை பதிவிட்டு LOGIN செய்ய வேண்டும். விரைவாக பட்டா ரெடியாகும். SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.