Namakkal

News July 5, 2025

நாமக்கல்லின் அடையாளமான ஜோதி தியேட்டர்

image

ஒவ்வொரு ஊர் மக்களின் சந்தோஷம், துக்கம், கொண்டாட்டம் என அனைத்து உணர்ச்சிகளையும் தாங்கி நிற்பவை அங்குள்ள திரையரங்கங்கள். அந்த வகையில், ஜோதி தியேட்டர் சுமார் 71 ஆண்டுகளாக 70 அடி உயரத்தில் நாமக்கல்லின் அடையாளமாகத் திகழ்ந்து சில ஆண்டுகளுக்கு முன் இடிக்கப்பட்டது. என்.எஸ்.கே காலம் முதல் அஜித் – விஜய் காலம் வரை பல தலைமுறைகளைக் கடந்த இந்தத் தியேட்டரில் உங்களது நினைவுகளை கமெண்ட் பண்ணுங்க!(SHARE IT)

News July 5, 2025

பள்ளி, கல்லூரி கட்டடங்கள் அனுமதி பெற விண்ணப்பிக்கலாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி மற்றும் கல்லூரி கட்டடங்கள் அனுமதி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் https://www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார்.

News July 5, 2025

நாமக்கலில் தனியார் வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல்: மல்லசமுத்திரத்தில் உள்ள மகேந்திரா இன்ஜினியரிங் கல்லூரியில் இன்று (ஜூலை 5) மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 150க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 10ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை பங்கேற்கலாம். நேரடி நியமனம் நடைபெறும்.

News July 5, 2025

நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கவனத்திற்கு

image

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2025-26 ஆம் ஆண்டுக்கான காரீப் பருவ பயிா்களை காப்பீடு செய்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி அறிவுறுத்துள்ளாா். இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும்போது கிராம நிா்வாக அலுவலா் வழங்கும் நடப்பு பசலிக்கான அடங்கல், இ-அடங்கல், வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல், ஆதாா் அட்டை நகல் இணைத்த கட்டணத் தொகையை செலுத்தலாம்.

News July 5, 2025

கூட்டுறவு வங்கியில் ஹோம் லோன் பெறுவது எப்படி?

image

▶️நீங்கள் அரசு வேலையிலோ, அரசு சார்ந்த நிறுவனத்திலோ, அல்லது அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திலோ பணிபுரிபவராக இருத்தல் வேண்டும்.
▶️நிலையான வருவாய் ஈட்டும் தொழில் செய்பவராக இருந்தாலும் விண்ணப்பிக்கலாம்
▶️நீங்கள் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவராக இருந்தால் form 16 அல்லது சம்பள சான்றிதழ் அவசியம்.
உரிய ஆவணங்களுடன் அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளுங்கள்.(SHARE IT)

News July 5, 2025

நாமக்கல்: வீடு வாங்க ரூ.75 லட்சம் கடனுதவி!

image

தமிழ்நாடு கூட்டுறவு வங்கி மூலம் வீடு வாங்க, கட்ட, நீட்டிக்க, பராமத்துப் பணிகள் செய்ய கடனுதவி வழங்கப்படுகிறது. ரூ.75,00,000 வரை வழங்கப்படும் இந்தக் கடன் தொகையை 20 ஆண்டுகளுக்குள் செலுத்தி முடிக்கலாம். உங்களின் CIBIL score அடிப்படையில் வட்டி விகீதம் நிர்ணயிக்கப்படும். இதற்கு அருகில் உள்ள கூட்டுறவு வங்கியை அணுகி தெரிந்துகொள்ளலாம். மேலும், தெரிந்து கொள்ள<<16949706>> கிளிக்.<<>> (SHARE IT)

News July 5, 2025

இன்று இதை செய்தால் நன்மை உறுதி!

image

நாமக்கல்: நைனாமலை வரதராஜ பெருமாள் கோயிலில் இன்று(ஜூலை 5) சனிக்கிழமை பூஜையில் பங்கேற்று, துளசி மாலை அணிவித்து பெருமாளை தரிசித்தால், சனி தோஷம் நீங்கி வாழ்க்கையின் பெரும் சிக்கல்களுக்கும் தீர்வு கிடைக்குமாம். மேலும், இன்றைய நாளில் அருகேயுள்ள ஏதேனும் பெருமாள் கோயிலுக்குச் சென்று வழிபட்டால் வாழ்வின் குழப்பங்கள் நீங்கி நன்மை அடையலாம் என்கிறார் பக்தர்கள். உடனே நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!

News July 5, 2025

நாமக்கல் மாவட்ட இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் (ஜூலை 4) இன்று இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள்: நாமக்கல் – லஷ்மணதாஸ் (94432 86911), ராசிபுரம் – ஆனந்தகுமார் (94981 06533), திருச்செங்கோடு – சிவகுமார் (94981 77601), வேலூர் – கெங்காதரன் (63806 73283) ஆகியோர் tonight ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்கு இவர்களை தொடர்புகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News July 5, 2025

நாமக்கல்: சிறப்பு மண் பரிசோதனை முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேளாண்மை துறையின் சார்பில் சிறப்பு மண் பரிசோதனை முகாம் வரும் 9ம் தேதி பள்ளிபாளையத்திலும் 16ம் தேதி மோகனூரிலும் 25ம் தேதி புதுச்சத்திரத்திலும் 30ம் தேதி மல்லசமுத்திரத்திலும் நடைபெற உள்ளது முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் துர்காமூர்த்தி விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

News July 4, 2025

நாமக்கல்லில் வேலை வாய்ப்பு!

image

நாமக்கல்லில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனத்தில் உள்ள Insurance Advisor பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாத ஊதியமாக ரூ.15,000 – ரூ.25,000 வழங்கபடும். +2 முடித்தவர்கள் இங்கே<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். இதை வேலைதேடும் உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும்.

error: Content is protected !!