India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே.., இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 8850 டிக்கெட் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், சீனியர் கிளர்க் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 12th,ஏதேனும் ஓர் டிகிரி என அந்தந்த பணிகளுக்கேற்ப கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அக்.21ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்த அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு <

நாமக்கலில் இருந்து நாளை (செப்.30 ) செவ்வாய் மாலை 3:52 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லவும், 06054 நாகர்கோவில் – சென்னை சென்ட்ரல் ரயிலிலும், இரவு 11:40 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை போன்ற பகுதிகளுக்கு செல்லவும் 06152 கன்னியாகுமரி – சென்னை சென்ட்ரல் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் மக்கள் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

நாமக்கல்லில் இன்று(செப்.29) தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்தக் குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 ஆகவே நீடிக்கிறது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் அக்.2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தினை முன்னிட்டு அன்றைய தினத்தில் இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் FL 1/ FL2/FL3 FL 3A, FL 3AA மற்றும் FL 11 வரையிலான உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசால் உத்திரவிடப்பட்டுள்ளது. இதை மீறி திறந்தால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் துர்காமூர்த்தி தெரிவித்துள்ளார்

நாமக்கல் மாவட்டத்தில் இன்று செவ்வாய்கிழமை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் நாமக்கல் மாநகராட்சி ஆர்.பி புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, இராசிபுரம் நகராட்சி இராமலிங்கம் சௌடேஸ்வரி மண்டபம், திருச்செங்கோடு நகராட்சி வேலவன் திருமண மண்டபம், கொல்லப்பட்டி, வெண்ணந்தூர் வட்டாரம் புனித மரிய மதலேனாள் திருத்தலம் மண்டபத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று செப்.29 நாமக்கல்-( தங்கராஜ்- 9498110895 ) ,வேலூர் -( சுகுமாரன்- 8754002021 ), ராசிபுரம் -( சின்னப்பன்- 9498169092 ), திம்மநாயக்கன்பட்டி -( ஞானசேகரன்- 9498169073 ) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (29.09.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மக்களே, மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பொறியியலில் பட்டப்படிப்பு, டிப்ளமோ முடித்தவரா நீங்கள்? தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாதம் ரூ.9,000 உதவித்தொகையுடன் 1 வருட பயிற்சி அளிக்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <

நாமக்கல்லில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மோட்டார் வாகன பராமரிப்பு துறையில் (TNMVMD) 79 தொழிற்பயிற்சி இடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாத உதவித்தொகையுடன் 1 வருடம் பயிற்சி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாதம் 8,000 முதல் 9,000 வரை உதவித்தொகை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மற்றும் விண்ணப்பிக்க<
Sorry, no posts matched your criteria.