India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கலில் இருந்து நாளை (அக்.10) காலை 6:15 மணிக்கு 22498 ஶ்ரீ கங்காநகர் ஹம்சாஃபர் ரயிலில் பெங்களூரூ, துமகூரு, அர்சிகெரே, தாவங்கரே, ஹூப்ளி, பெலகாவி, புனே, மும்பை, சூரத், அகமதாபாத், அபு ரோடு, மார்வார், ஜோத்பூர், பிகானீர் ஆகிய பகுதிகளுக்கு செல்லவும் காலை 8:30 மணிக்கு 20,671 மதுரை – பெங்களூரூ வந்தே பாரத் ரயிலில் கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ ஆகிய பகுதிகளுக்கு செல்லும் மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

நாமக்கல்லில் நேற்று (அக்.8) தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 5.05 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டையின் தேவை அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்தவிதமான மாற்றமும் இன்றி, தொடர்ந்து ரூ. 5.05 ஆகவே நீடிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் வரும் அக்.12ந் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெறவுள்ளது. மொத்தம் 30 தேர்வு மையங்களில் 8193 தேர்வர்கள் தேர்வெழுத உள்ளனர். தேர்வு மையத்தில் காலை 8.30 முதல் 9.30 மணி வரை மட்டுமே தேர்வர்கள் அனுமதிக்கப்படுவர். 9.30 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தால் அனுமதி இல்லை என்பதால், உரிய நேரத்தில் வருகை தருமாறு ஆட்சியர் துர்காமூர்த்தி கேட்டு கொண்டுள்ளார்

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 6 காவல் அலுவலர்கள் இரவு நான்கு சக்கர வாகன ரோந்து பணிக்காக நியமிக்கப்படுகின்றனர். அதன்படி இன்று அக்டோபர்.08 நாமக்கல்-(தேசிங்கன்- 8668105073) ,வேலூர் -(ரவி- 9498168482), ராசிபுரம் -(சின்னப்பன்- 9498169092), குமாரபாளையம் -(செல்வராஜு -9994497140) ஆகியோர் இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (08.10.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரச்சார பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்த பிரச்சார பயணத்திற்காக அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் விளம்பர பதாகைகள் வைத்து வருகின்றனர். அதேபோல, கூட்டணி கட்சியான பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு கட்-அவுட்டுகள் வைத்து வரவேற்புக்கு தயாராகி வருகின்றனர்.

திருச்செங்கோடு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி நிவேதா, “என் பள்ளி என் பெருமை” என்ற தமிழ்நாடு அரசு நடத்திய போட்டியில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் அவர் தமிழக அளவில் மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். மாணவி நிவேதாவிற்கு, திருச்செங்கோடு நகராட்சி சார்பில், வழக்கறிஞரும், நகர்மன்ற தலைவரின் கணவருமான சுரேஷ்பாபு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு நடைபெறவிருந்த கிராம சபைக் கூட்டத்தின் தேதி மாற்றப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 310 கிராம ஊராட்சிகளிலும் வரும் அக்.11 அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை தெரிவித்த ஆட்சியர் துர்கா மூர்த்தி, பொதுமக்கள் தங்கள் பகுதியில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மக்களே, தேசிய அறிவியல் அருங்காட்சியக கவுன்சிலின் கீழ் இயங்கும் விஸ்வேஸ்வரய்யா தொழிற்துறை, தொழில்நுட்ப அருங்காட்சியகத்தில் அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 12 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு 12வது படித்தவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம். சம்பளமமாக மாதம் ரூ.38,908/- வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நாமக்கலில் இருந்து நாளை(அக்.9) இரவு 9:25 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர், சென்னை செல்ல 22652 பாலக்காடு – சென்னை சென்ட்ரல் ரயிலிலும், அக்.9 அதிகாலை 4:55 மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை செல்ல 06122 செங்கோட்டை – சென்னை சென்ட்ரல் ரயிலிலும் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் பகுதி மக்கள் இந்த ரயில்களை முன்பதிவு செய்து பயன்படுத்தி கொள்ளலாம்.
Sorry, no posts matched your criteria.