India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்ளுக்கான வானிலையில் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும். புதன் மற்றும் வியாழக்கிழமை கனமழையும், மற்ற நாட்களில் லேசானது முதல் மிதமான மழையும் மாவட்டத்தின் பல இடங்களில் எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 82.4 டிகிரியாகவும், இரவு வெப்பம் 66.2 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல், மோகனூர் சாலையில் அமைந்துள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் அக்.24ஆம் தேதி ஒருங்கிணைந்த மீன் பண்ணை அமைப்பது குறித்து ஒரு நாள் கருத்தரங்கம் மற்றும் இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இந்த பயிற்சி வகுப்பில் விவசாயிகள், கல்லூரி மாணவ மாணவிகள், மகளிர் சுய உதவி குழுவினர் மற்றும் மீன் பண்ணை அமைக்க விருப்பமுள்ளவர்கள் இதில் கலந்து கொள்ளலாம் என வேளாண் அறிவியல் நிலைய மேலாளர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 32 திருக்கோயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட விருப்பமுள்ள 62 வயதுக்கு உட்பட்ட முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு தொகுப்பூதியமாக மாதம் ரூ.6500 வீதம் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரில் அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செல்லப்பம்பட்டி அருகே அமைந்துள்ள புதன் சந்தை பகுதியில் குன்றின் மேல் அமைந்துள்ள சிவன் கோயிலில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சுமார் 50 லிட்டர் பால் அபிஷேகம் செய்யப்பட்டு அதனை தொடர்ந்து சிவனுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இதை காண செல்லப்பம்பட்டி நவனி புதன் சந்தை ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / சிறுபான்மையினர் நலத்துறை இயக்குநர் ஆசியா மரியம், இன்று (15.10.2024) திருச்செங்கோடு நகராட்சி, வேளாளர் காலனி, தெரு எண்:1 பகுதியில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். உடன் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா உட்பட பலர் உள்ளனர்.
நாமக்கல் வருவாய் மாவட்ட அரிமா சங்கங்கள்
இணைந்து நடத்தும் 11,12,13 வயதுடைய பள்ளி மாணவ-மாணவியர்களுக்கான உலக அமைதி ஓவியப்போட்டி திருவிழா நாளை மறுநாள் (அக்.17) காலை 9.30 மணியளவில் நாமக்கல் திருச்செங்கோடு ஸ்பைரோ பிரைம் பப்ளிக் ஸ்கூலில் நடைபெற உள்ளது. எல்லையில்லா அமைதி என்ற தலைப்பில் இப்போட்டி நடைபெறும் என உலக அமைதி போட்டிக்கான மாவட்ட தலைவர் மணி வெளியிட்டுள்ள அழைப்பிதழில் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் தேசிய நல்வாழ்வு குழுமத்தின் கீழ் பல்வேறு திட்டங்களில் ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது. மேலும் விபரங்களை namakkal.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளுங்கள். பணிக்கு தகுதியானவர்கள் அக்.28ஆம் தேதி மாவட்ட சுகாதார அலுவலர், நல்வாழ்வு சங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பிக்க ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நாமக்கல்லில் தொடர் மழை பெய்து வருவதால் விவசாயிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். மழையின் போது தோட்டக்கலை பயிர்களை விவசாயிகள் கவனமுடன் பாதுகாக்க வேண்டும். பல ஆண்டுகளாக சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் பட்டுப்போன மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழு உரம் இட வேண்டும். ஓடைகளை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி, என் புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட சில பகுதியில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதியினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதனிடையே இன்று 14ஆம் தேதி வளையப்பட்டியில் சிப்காட் எதிர்ப்பாளர்கள் 156 வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாய தொழிலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் ஆட்சியர் அலுவல கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இன்று மனுக்கள் இலவச வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி, சாலை வசதி, முதியோர் உதவித்தொகை போன்ற 381 மனுக்கள் மாவட்ட ஆட்சியர் அவர்கள் பெற்றுக் கொண்டு அவர்களின் மனுக்களை பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Sorry, no posts matched your criteria.