Namakkal

News April 9, 2025

நாமக்கல்லில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (09-04-2025) புதன்கிழமை நிலவரப்படி, கறிக்கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.89 ஆகவும், முட்டை கோழி விலை (உயிருடன்) கிலோ ரூ.85 ஆகவும், முட்டை விலை ரூ.4.35 ஆகவும் நீடித்து வருகிறது. மேலும் கறிக்கோழி விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பண்ணையாளர்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

News April 9, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் நிலவும் வானிலையில், இன்றும், நாளை மறுநாளும் (வெள்ளிக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இல்லை. நாளை (வியாழக்கிழமை) லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும், அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News April 9, 2025

நாமக்கல்: வெப்பத்தில் இருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

image

கோடைகாலத்தில் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான நெறிமுறைகள் நாமக்கல் மாவட்ட நிா்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளன. ▶️வெளிர் நிறமுடைய தளர்வான பருத்தி ஆடைகளை அணியவும் ▶️நீர்ச்சத்து அதிகம் கொண்ட பழங்களான தர்பூசணி, முலாம்பழம், வெள்ளரிக்காய், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி ஆகியவற்றை உட்கொள்ளவும் ▶️ பகல் 12 மணி முதல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.(ஷேர் பண்ணுங்க)

News April 9, 2025

அரசு கால்நடை மருத்துவ கல்லூரி வேலை வாய்ப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் திட்ட உதவியாளர் பணியிடத்தை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இப்பணியானது  தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், திறமையும் உள்ளோர் வரும் ஏப்ரல் 22 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கபட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு கிளிக் பண்ணுங்க 

News April 9, 2025

குழந்தையை பாலியல் தொல்லை; வளர்ப்பு தந்தை கைது!

image

பள்ளிபாளையம், திருச்செங்கோடு சாலையில் செயல்பட்டு வரும், ஆட்டோலூம் விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக பணியாற்றி வந்த சம்மர்தாஸ். ஒரிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் தான் இரண்டாவதாகத் திருமணம் செய்த பெண் ஒருவரின் ஒரு வயது மூன்று மாத பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார்  வளர்ப்புத் தந்தையான சம்மர்தாசை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

News April 8, 2025

தமிழக முதல்வருக்கு நாமக்கல் எம்பி நன்றி

image

நாமக்கல் மாவட்டம்மோகனூர் ஆண்டாபுரம் கிராமத்தில் ஒரு மூதாட்டி உள்பட இரண்டு குழந்தைகள் மின் விபத்தில் உயிரிழந்த பரிதாப நிலையில் நேற்று உயிரிழந்தவுடன் அவர்களின் குடும்பத்தினருக்கு அரசு சார்பில் நிதியுதவி கேட்ட நிலையில் தமிழக முதல்வர் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு லட்சம் அறிவித்துள்ளார்.நிதி உதவி அறிவித்த தமிழக முதல்வர் அவர்களுக்கு நாமக்கல் எம்.பி.மாதேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.

News April 8, 2025

நாமக்கலில் தங்கம் சவரனுக்கு 480 குறைவு!

image

நாமக்கல் நகர நகை வியாபாரிகள் சங்கம் நிர்ணயித்த  இன்றைய (08.04.2025) ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.480 குறைவு ஒரு கிராம் விலை ரூ.8,225-க்கும், ஆபரண தங்கம் 1 பவுன் ரூ.65,800-க்கும், முத்திரை காசு 1 பவுன் ரூ. 66,400-க்கும், முத்திரை காசு 1 கிராம் ரூ.8300-க்கும், விற்பனை  வெள்ளி ஒரு கிராம் ரூ.98-க்கு விற்பனையாகிறது.

News April 8, 2025

நாமக்கல்: உயிரிழந்தவர்களுக்கு முதலமைச்சர் நிதியுதவி 

image

மோகனூர் ஆண்டியாபுரம் செல்வம் மனைவி இளஞ்சியம் தனது பேரக்குழந்தைகள் ஐவி (வயது 3), சுஜீத் (வயது 5) ஆகியோர் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது நேற்று எதிர்பாராத விதமாக மூவரும் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். அவர்களுக்கும், அவரது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

News April 8, 2025

முன்னாள் படைவீரர்களுக்கு ரூ. ஒரு கோடி வரை கடனுதவி

image

தமிழக முதல்வரின் ‘காக்கும் கரங்கள்’ திட்டத்தின் கீழ் முன்னாள் படைவீரா், விதவையா் வயது உச்சவரம்பின்றி தொழில் தொடங்க அதிகபட்சம் ரூ. ஒரு கோடி வரை வங்கிக் கடனுதவி வழங்கப்படுகிறது. மேலும், அந்த தொகையில் 30 சதவீதம் மூலதன மானியம் மற்றும் 3 சதவீதம் வட்டி மானிய சலுகை பெறலாம். மேலும் விவரங்களுக்கு, நாமக்கல் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை நேரிலோ அல்லது 04286-233079 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம்

News April 8, 2025

நாமக்கல் கடைகளில் தமிழ் பெயர் பலகை; ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்துவிதமான கடைகள், வணிக நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள் தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் வருகின்ற மே-15 ந் தேதிக்குள் தமிழில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திட வேண்டும். இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா உத்தரவிட்டுள்ளார்

error: Content is protected !!