India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயிலில் இன்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று 2 மி.மீட்டரும், நாளை 1 மி.மீட்டரும், நாளை மறுநாள் 6 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மேலும் 18-ந் தேதி 5 மி.மீட்டரும், 19-ந் தேதி 3 மி.மீட்டரும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மக்களே EB கட்டணம் அதிகமா வருதா? கவலை வேண்டாம்.. மின்வாரிய அலுவலகம் செல்லாமல், TANGEDCO செயலி அல்லது 94987 94987 என்ற எண்ணை தொடர்புகொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். மேலும், இந்தச் செயலி மூலம் மின் கட்டணத்தையும் செலுத்தலாம்.இந்த பயனுள்ள தகவலை உங்கள் நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.
சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. நாமக்கல் மக்களே நிலத்தின் மீது உள்ள நீதிமன்ற வழக்கு பற்றி அறிய https://services.ecourts.gov என்ற இணையதளத்திற்கு சென்று நிலத்தின் உரிமையாளரின் பெயர் அல்லது சர்வே நம்பர் கொடுத்து உடனே தெரிந்து கொள்ளலாம்.
நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் (NECC) கூட்டம் இன்று (ஆகஸ்ட் 15) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4.90 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை மற்றும் குளிர் போன்ற பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்த போதிலும், முட்டை விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், ஒரு முட்டையின் விலை தொடர்ந்து ரூ.4.90 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 75 உதவியாளர், எழுத்தர் பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு சம்பளமாக ரூ.10,900 முதல் ரூ.76,380 வரை வழக்கப்படுகிறது. இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க <
சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு காவல்துறையின் 24 அலுவலர்களுக்கு இந்திய குடியரசு தலைவரின் தகைசால் பணி மற்றும் மெச்சத்தக்க பணிக்கான விருது பட்டியலில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா சிறந்தசேவையை, பாராட்டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாக மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் துர்காமூர்த்தி பங்கேற்று மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும், விதமாக வெள்ளை புறாக்களை பறக்க விட்டார். தொடர்ந்து திறந்த ஜீப்பில் இன்று காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியர் ஏற்றுக்கொண்டார்.
நாமக்கல் அரசு ஐ.டி.ஐ -யில் நேரடிச் சேர்க்கை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது, என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். எனவே அரசு ஐ.டி.ஐ -யில் நேரடி சேர்க்கை பெற 31-08-2025 வரையிலும் விண்ணப்பிக்கலாம். பயிற்சியில் சேர தகுதியும், விருப்பமும் உள்ள மாணவர்கள் நாமக்கல் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை நேரில் அணுகி தொடர்பு கொள்ளலாம்.
நாமக்கல்: நபார்டு வங்கியில் (NABCONS) காலியாக உள்ள 63 Junior Technical Supervisors பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு B.E/B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சம்பளமாக ரூ.1,15,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் வரும் 26 தேதிக்குள் இந்த லிங்கை <
Sorry, no posts matched your criteria.