Namakkal

News July 13, 2024

நாமக்கல்: 1000 ஏக்கரில் மண்ணுயிர் காப்போம் திட்டம்

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெண்ணந்தூர் பகுதியில் பல்வேறு அரசியல் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றன. இதில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார். அப்போது பேசுகையில், “நாமக்கல் மாவட்டத்தில் 1000 ஏக்கர் பரப்பளவில் முதலமைச்சரின் “மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்” திட்டம் செயல்படுத்தப்படுகிறது” என தெரிவித்தார். மேலும், நிகழ்வில் விவசாயிகளுக்கு பசுந்தாள் உர விதைகளை வழங்கினார்.

News July 13, 2024

நாமக்கல்: 5 நாட்களுக்கான வானிலை வெளியீடு

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த ஐந்து நாள்களுக்கான வானிலையில், வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் மழை பெய்யும். பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். மேற்கிலிருந்து மணிக்கு 19 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News July 12, 2024

காவலர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

image

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் உத்தரவின் படி இன்று காவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இங்கு மாவட்டத்தில் உள்ள காவல் உதவி ஆய்வாளர்கள் முதல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வரை உள்ள அதிகாரிகளுக்கு அனைவருக்கும் ஆயுதப்படை கவாத்து மைதானத்தில் கை துப்பாக்கியை கையாளுவது மற்றும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற்றது.

News July 12, 2024

ஆசிரியர்களுக்கு கையடக்க கணினிகளை வழங்கிய அமைச்சர்

image

நாமக்கலில், அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கலையரங்கில் ஆட்சியர் உமா தலைமையில் அமைச்சர் மா.மதிவேந்தன் முன்னிலையில் நேற்று கையடக்க கணினிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் 2,220 தொடக்க கல்வி ஆசிரியர்களுக்கு ரூ 2.83 கோடி அமைப்பில் கையடக்க கணினிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார் மற்றும் எம்.எல்.ஏ.இராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

News July 12, 2024

நாமக்கல் ஆட்சியர் அதிரடி உத்தரவு

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா நேற்று இரவுசெய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார். அதில், இன்று கமலஹாசன் நடித்து வெளியாகும் இந்தியன் 2 திரைப்படம் நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 10க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. திரையரங்குகளில் 5 காட்சிகள் மட்டுமே வெளியிட வேண்டும். மேலும், அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்யகூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

News July 11, 2024

மாற்றுத்திறனாளிக்கு வீடு வழங்கிய அமைச்சர்

image

நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் வள்ளிபுரம் தோக்கம்பாளையத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி செல்வராஜ் என்பவருக்கு 2.50 லட்சத்தில் கட்டப்பட்ட வீட்டினை அமைச்சர் மா.மதிவேந்தன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் உமா, மாநிலங்களவை எம்.பி ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ ராமலிங்கம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

News July 11, 2024

அரசு பள்ளியை நிர்வகிக்க கருத்துரு வரவேற்பு

image

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் 10-14 வயதுடைய பள்ளிசெல்லா இடைநின்ற பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் கொல்லிமலையில் உறைவிடப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரியூர் கிழக்கு வலவு கேஜிபிவி உண்டு உறைவிடப்பள்ளி மையத்தை நிர்வகிக்க, பெண் கல்வியில் ஆர்வம் உள்ள பதிவு செய்யப்பட்ட அரசு சாரா தொண்டு நிறுவனங்களிடமிருந்து கருத்துரு வரவேற்கப்படுகிறது என ஆட்சியர் ச.உமா கூறியுள்ளார்.

News July 11, 2024

நாமக்கலில் வேலைவாய்ப்பு முகாம்

image

இராசிபுரம் அடுத்த மெட்டாலாவில் உள்ள இலயோலா கல்லூரி மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து நடத்தும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் நாமக்கல் மற்றும் சேலம் மாவட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இம்முகாம் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை நடைபெற உள்ளது.

News July 11, 2024

“முதல்வரின் சிறந்த நடைமுறை விருது” விண்ணப்பிக்க அழைப்பு 

image

தமிழக முதல்வரின் சிறந்த நடைமுறை விருதுக்கு நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. புதுமையான திட்டங்களைச் செயல்படுத்துதல்,  நிறுவன அமைப்பை உருவாக்குதல், பொது விநியோக அமைப்புகளை திறமையான நெறிமுறையாக மாற்றுதல், பேரிடரில் சிறந்த செயல்திறன் போன்ற பன்முகத் திறமை புரிந்தவர்கள் இவ்விருதுக்கு ஜீலை12 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அழைப்புவிடுத்துள்ளார்.

News July 11, 2024

நாமக்கல் மாணவர் 3 ஆவது இடம் பிடித்து சாதனை

image

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், ராசிபுரம் அருகே தொட்டியம்ப்பட்டியை சேர்ந்த கோகுல் என்ற மாணவன் பொது தரவரிசை பட்டியலில் தமிழக அளவில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இதுகுறித்து அவர், “பல்வேறு நோய்களினால் மக்கள் அவதியடைந்து வருவதை பார்க்கிறேன். இதனால் அத்தகைய நோய்களை தீர்க்கும் வகையில் ஆராய்ச்சியாளராக வேண்டும் என்பது எனது ஆசை” என தெரிவித்தார்.

error: Content is protected !!