Namakkal

News July 15, 2024

நாமக்கல்; பாஜகவில் இணைந்த திமுக கவுன்சிலர்

image

தமிழக அரசியல் களத்தில் திமுக மற்றும் பாஜகவினரிடையே கடும் போட்டி நிலவிவருகிறது. சமீபத்தில் நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பாஜக கூட்டணியை திமுக படுதோல்வியடைய செய்தது. இந்நிலையில், நாமக்கல் சேந்தமங்கலம் 12 ஆவது வார்டு திமுக கவுன்சிலர் ராமச்சந்திரன் தனது ஆதரவாளர்களுடன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். இது நாமக்கல் திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News July 15, 2024

காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்த எம்பி

image

தமிழகம் முழுவதும் இன்று முதல் காலை உணவுத்திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் விரிவுப்படுத்தப்படுகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள பாரதி அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில் இன்று மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார் குழந்தைகளுக்கு உணவு வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

News July 15, 2024

நாமக்கல் இளைஞர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் உதவித்தொகை பெற தகுதியானவர்கள் <>www.tnvelaivaaippu.gov.in<<>> என்ற தளத்தில் விண்ணப்பித்தை பதிவிறக்கி மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில் நெறிவழி காட்டும் மையத்திற்கு அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நேரில் செல்ல வேண்டும் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

சிப்காட் எதிர்ப்பாளர்கள்; புதிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி, என். புதுப்பட்டி, பரளி உள்ளிட்ட பகுதிகளில் சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனிடையே நாளை 15ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிப்காட்டை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என சிப்காட் எதிர்ப்பு நிர்வாகி பாலசுப்ரமணியன் விடுத்துள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

News July 14, 2024

காளான் வளர்ப்பு பயிற்சி தேதி மாற்றம்

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகின்ற 16.07.24 முதல் 21.08.2024 வரை 25 நாட்கள் நடக்கவிருந்த சிறப்பு பயிற்சியானது ஜூலை மாதம் இறுதி வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சியானது, “காளான் வளர்ப்பு மற்றும் காளான் விதை உற்பத்தி தொழில்நுட்பங்கள்” என்ற தலைப்பில் இந்திய தேசிய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் நிதியுதவியுடன் நடைபெற உள்ளது.

News July 14, 2024

ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பசுந்தாள் உர விதைகள் 

image

இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள நாமகிரிப்பேட்டை ஒன்றியம் முள்ளுகுறிச்சியில் “மண்ணுயிர் காத்து, மன்னுயிர் காப்போம்” திட்டத்தின் மூலம் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் பசுந்தாள் உர விதைகள் விவசாயிகளுக்கு நேற்று வழங்கப்பட்டது. நிகழ்வில், அமைச்சர் ம.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், ஆட்சியர் S. உமா ஆகியோர் கலந்துகொண்டனர். உடன், அரசு துறை அதிகாரிகள், தி.மு.க நிர்வாகிகள் இருந்தனர்.

News July 14, 2024

நாமக்கல் குரூப்-1 தேர்வு நிலவரம்

image

தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 தேர்வு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வை எழுத 5,768 பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த நிலையில், நேற்று நடந்த போட்டி தேர்வை 18 தேர்வு மையங்களில் மொத்தம் 4,188 பேர் எழுதினர். சுமார் 1,580 பேர் தேர்வு எழுத வரவில்லை. தொடர்ந்து, பொரசப்பாளையம் ஸ்ரீ விநாயகா மேல்நிலைப்பள்ளியில் நடந்த போட்டித்தேர்வை மாவட்ட கலெக்டர் உமா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

News July 13, 2024

நாமக்கல்லில் சாலை பாதுக்காப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

image

நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ் கண்ணன் தலைமையில் இன்று 13ஆம் தேதி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வகுப்பு நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி வகுப்பில் நாமக்கல் மாவட்ட அனைத்து உட்கோட்ட காவல் அதிகாரிகள் காவல் ஆளிநர்கள் மற்றும் ஆயுதப்படை காவல் ஆளிநர்கள் சுமார் 500 காவலர்கள் 100 ஊர்க்காவல் படையினர் என மொத்தம் சுமார் 600 பேர் கலந்து கொண்டனர்.

News July 13, 2024

நாமக்கல்லில் தற்காலிக கருத்தடை செய்ய ஏற்பாடு

image

நாமக்கல் மாவட்டத்தில் ஜுலை.11 முதல் 24 ஆம் தேதி வரை அனைத்து வகை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நிரந்தர கருத்தடை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், ஆண் கருத்தடை சிகிச்சை, பெண்களுக்கு குடும்பநல கருத்தடை சிகிச்சை, கருத்தடை வளையம் பொருத்துதல், அந்தாரா கருத்தடை ஊசி, சாயா கருத்தடை மாத்திரைகள் வழங்குதல் போன்றவை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

News July 13, 2024

நாமக்கல்: மாசுகட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை

image

எருமப்பட்டி ஒன்றியம் தூசூரில் மிகப்பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு, கொல்லிமலையில் இருந்து வரும் தண்ணிரால் நிரம்பி வந்தது. நாமக்கல் நகராட்சியில் இருந்து வரும் கழிவுநீரின் ஒரு பகுதி கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லாமல் அப்படியே வெளியேறுவதால் தூசூர்ஏரி மாசடைந்து வருவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!