Namakkal

News July 17, 2024

2,768 ஆசிரியர் பணி: வரும் 21ஆம் தேதி தேர்வு

image

தொடக்கப்பள்ளி இடைநிலை ஆசிரியர் பணிக்கு, கூடுதலாக 1,000 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் 2,768 பணியிடங்களுக்கு வரும் 21ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இந்த தேர்வானது நடைபெற உள்ளது. தேர்வு கூடங்கள் பற்றிய விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்படும். இன்னும் ஓரிரு நாட்களில் ஹால் டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

News July 16, 2024

கபடி போட்டியில் வென்ற சேலம் அணி

image

நாமக்கல் மாவட்டம் பெரிய செக்கடியில் மாநில அளவிலான கபடி போட்டி கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இன்று நடந்த இறுதிப்போட்டியில் சேலம் சாமி அகாடமி அணியும் வாழப்பாடி அணியும் மோதிய போட்டியில் முதல் பரிசினை சேலம் சாமி அகாடமி அணிபெற்றது. இரண்டாம் இடத்தை வாழப்பாடி அணியும், மூன்றாவது பரிசை கோவை காவல்துறை அணியும் பெற்றது.வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

News July 16, 2024

புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடக்கம்

image

நாமக்கல்லில் புறவழிச்சாலை திட்டத்தின் இரண்டாம் கட்ட பணியான மரூர்பட்டி முதல் வேட்டாம்பாடி வரை ரூ.47.65 கோடி மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகளை இன்று நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் தொடங்கி வைத்தார். அப்போது நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் இராஜேஸ்குமார் உடனிருந்தார்.

News July 16, 2024

கலைஞரின் கனவு இல்லம் கட்ட ஆணை வழங்கிய ஆட்சியர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு‌.க.ஸ்டாலின் அறிவித்த கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இன்று(ஜூலை 16) 69 பயனாளிகளுக்கு ரூ.2.42 கோடி மதிப்பீட்டில் புதிதாக வீடு கட்டுவதற்கான ஆணைகளை, மாவட்ட ஆட்சித்தலைவர் உமா மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி ஆகியோர் வழங்கினர். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

News July 16, 2024

அறிவுசார் மையம் சார்பில் தேர்வர்களுக்கு ஆலோசனை

image

நாமக்கல் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அறிவுசார் மையம் சார்பில் கீழ்க்கண்ட நாட்களில் ஆலோசனை வழங்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். நாமக்கல் நகராட்சி – ஜூலை 16,23, திருச்செங்கோடு நகராட்சி – ஜூலை 18 &19, குமாரபாளையம் நகராட்சி – ஆகஸ்ட் 13,14 , மோகனூர் பேரூராட்சி – ஆகஸ்ட் 24, 25, பட்டணம் பேரூராட்சி ஆகஸ்ட் 5, 8 ஆகிய தேதிகளில் பிற்பகல் 2.30 மணிக்கு ஆலோசனை நடைபெறும் என ஆட்சியர் கூறியுள்ளார்.

News July 16, 2024

நாமக்கல்லில் மத்திய அரசு வேலை வாய்ப்பு

image

இந்திய அஞ்சல் துறையில் 44228 GDS பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி நாமக்கல் மாவடத்திலும் காலிப்பணியடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு,18 வயது முதல் 40 வயதுக்கு உட்பட்ட 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆக.5ஆம் தேதிக்குள் https://indiapostgdsonline.gov.in/ என்ற தளத்தில் ம் விண்ணப்பிக்கலாம். இதற்கு சம்பளமாக மாதம் ரூ.12,000 முதல் ரூ.29,380 வரை வழங்கப்படவுள்ளது.

News July 16, 2024

நாமக்கல்லுக்கு வருகை தரும் எச் ராஜா

image

நாமக்கலில் பேருந்து நிலையம் அருகே வரும் 22ம் தேதி மாலை பாஜகவின் மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கிக் கூறும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச் ராஜா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார் . இந்நிகழ்வில் மாநிலத் துணைத் தலைவர்கள் ராமலிங்கம், மாவட்டத் தலைவர் சத்யமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

News July 16, 2024

நாமக்கல்லிற்கு 2500 டன் கோதுமை வருகை

image

நாமக்கல், சேந்தமங்கலம் சாலையில் உள்ள ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை மத்திய பிரதேசத்திலிருந்து 2500 டன் கோதுமை வந்தது. தொடர்ந்து, இவை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நியாய விலை கடைகளுக்கு வழங்குவதற்காக லாரிகள் மூலம் அனுப்பப்பட்டன. மேலும், நாமக்கல் ரயில் நிலையத்திற்கு கோழி தீவனம் மற்றும் ரேஷன் கடைக்கான அரிசி ஆகியவை வெளி மாநிலத்திலிருந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

News July 16, 2024

கலைஞரின் கனவு இல்லம் ஆணை வழங்கும் விழா

image

கலைஞர் அவர்களின் கனவான குடிசையில்லா தமிழ்நாடு என்ற இலக்கினை அடையும் வகையில்  முதலமைச்சர் கலைஞரின் கனவு இல்லம் என்ற திட்டத்தினை அறிவித்தார். இத்திட்டத்தின் கீழ் வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 62 பயனாளிகளுக்கு ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிதாக வீடு கட்டுவதற்கான ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த ஆணைகளை எம்.பி. கே.ஆர்.என்.இராஜேஷ்குமார் மற்றும் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் பயனாளிகளுக்கு  வழங்கினர்.

News July 15, 2024

கர்நாடகா செல்லும் தமிழக விவசாயிகள்

image

கர்நாடகா அணைகளில் முழு கொள்ளளவு தண்ணீர் உள்ளது. ஆனால் கர்நாடகா அரசு தமிழ்நாட்டிற்கு 8,000 கன அடி தண்ணீர் தான் காவிரியில் திறக்க முடியும் என்று அறிவித்துள்ளது. இந்நிலையில் தமிழக விவசாயிகளை ஒன்று திரட்டி கர்நாடகா சென்று அங்குள்ள அணைகளில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் தண்ணீர் திறப்போம் என மாநிலத் தலைவர் வேலுச்சாமி இன்று அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!