India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜேடர்பாளையம் ஆர் கே வி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நாளை 8/1/2026 வியாழக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெறுகிறது. எனவே முகாமில் அப்பகுதி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளனர்.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை ரூ. 6.00- ஆக விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் நாமக்கல்லில் இன்று நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையில் 20 காசுகள் குறைக்க முடிவு செய்யப்பட்டது. எனவே முட்டை கொள்முதல் விலை ரூ. 5.80- ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் தேவை குறைந்துள்ளதால், முட்டை விலை தொடர்ந்து சரிந்தது.

நாமக்கல் மக்களே.., பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசு பொருட்கள், ரூ.3,000 ரொக்கம் வழங்கப்படவுள்ள நிலையில் ரொக்கம்ரேஷன் கடையில் கைரேகை சரியாக வேலை செய்யாமல் போக வாய்ப்புண்டு. இந்த சிக்கலை தீர்க்க இப்பவே <

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த ஐந்து நாள்களுக்கான மாவட்ட வானிலையில், வானம் பெரும்பாலும் தெளிவாகக் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 86 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும். கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 8 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <

நாமக்கல், பெரிய சூரம்பாளையத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் நேற்று முன்தினம் மாலை 300 அடி பள்ளத்தில் இருந்து ஒரு டிப்பர் லாரி மண் கற்களை ஏற்றிக்கொண்டு மேலே வந்தது. அப்போது பாரம் தாங்காமல் அந்த லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் லோடு மேன் சுப்பிரமணி (வயது 64) உயிரிழந்தார். டரைவர் வேணுகோபால் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கலில் இருந்து நாளை ( ஜனவரி. 8 ) விடியற்காலை 1:20am மணிக்கு காட்பாடி, அரக்கோணம், சென்னை பெரம்பூர், குண்டூர், நெல்லூர், ஓங்கோல், தெனாலி, விஜயவாடா, விசாகப்பட்டினம், புவனேஸ்வர், கரக்பூர், கொல்கத்தா போன்ற பகுதிகளுக்கு செல்ல 06059 மதுரை – பரௌனி AC ரயிலில் டிக்கெட்டுகள் உள்ளன. நாமக்கல் மக்களே, மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல இந்த ரயிலில் முன்பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

நாமக்கல் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம்.இத்திட்டத்தைப் பெற, குடும்ப அட்டை, ஆதார்,வருமான சான்றிதழ் ஆகியவற்றுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து,அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.சந்தேகங்களுக்கு 1800425 3993 அழைக்கவும்.SHARE பண்ணுங்க

நாமக்கல் எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 15-வது வார்டு பகுதியில், மாற்றுக்கட்சிகளில் இருந்து விலகி ஏராளமானோர் அதிமுகவில் இணைந்தனர். நாமக்கல் மாநகர் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான பாஸ்கர் முன்னிலையில் இந்த இணைப்பு விழா நடைபெற்றது. இதில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.