India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பாக 21வது தமிழ்நாடு மாநில சிலம்பம் போட்டி கோயம்புத்தூர் கற்பகம் பல்கலைகழகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் நாமக்கல் மாவட்ட அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பாக 28 மாணவர்கள் கலந்து கொண்டு 7 தங்கப்பதக்கம், 13 வெள்ளி பதக்கமும், 24 வெண்கல பதக்கமும் பெற்றனர். இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமெச்சூர் சிலம்பம் சங்க நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவித்தனர்.
கொல்லிமலை பகுதியில் மதுவிலக்கு போலீசார், கடந்த 2 மதங்களாக சாராய வேட்டை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று மதுவிலக்கு பிரிவு ஏ.டி.எஸ்.பி. தனராசு தலைமையில் சேளுர்நாடு, குண்டுர்நாடு பகுதிகளில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, குண்டூர்நாட்டை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர், சாராயம் காய்ச்சுவதற்காக போட்டிருந்த 508 லிட்டர் ஊரலை கொட்டி அழித்தனர். மேலும் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் வேளாண் அறிவியில் நிலையத்தில் ஜூலை 23ஆம் தேதி நிலக்கடலை மற்றும் ஆமணக்கு சாகுபடி குறித்த இலவச பயிற்சி நடைபெறுகிறது. இதில் விவசாயிகள், விவசாய பெண்மணிகள், ஊரக இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொண்டு பயனடையலாம். விருப்பம் உள்ள விவசாயிகள் வேளாண் அறிவியில் நிலையத்தை நேரில் அனுகி அல்லது 04286-266345, 266650 என்ற தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முன்பதிவு செய்து கலந்துகொள்ளலாம்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா இன்று(ஜூலை 21) நாமக்கல் (தெற்கு) அரசினர் மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் இடைநிலை ஆசிரியர் தேர்வு நடைபெற்று வருவதை பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் கார், பைக் மோதி விபத்து ஏற்பட்டது. . இந்த விபத்தில் பைக்கில் சென்ற சின்னையன் அவரது மனைவி சாந்தி சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் காவல்துறையினர் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து, நீர் நிலைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் ஜூன் 1ஆம் தேதி முதல் இன்று வரை அதிகபட்சமாக 10 செ.மீ மழை பெய்துள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதே விலையில் விற்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாக உள்ளது. கறிக்கோழி கிலோ ரூ.117-க்கும், முட்டை கோழி கிலோ ரூ.87-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் நாட்டு கோழி பண்ணையாளர்களுக்கு வரும் 25ல் ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது. நாட்டு கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு என்ற தலைப்பில் இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள விரும்புவர்கள் 04286 233230 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் மோகனூர் வட்டம் வளையப்பட்டி, நா.புதுப்பட்டி, அரூர் உள்ளிட்ட கிராமங்களில் 195 ஏக்கரில் சிப்காட் தொழிற்பூங்கா நிலத் தேர்வு பணிக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நில எடுப்பு பணிக்காக 19 பணியாளர்களையும் அரசு நியமித்துள்ளது. பல்வேறு பகுதிகளில் சிப்காட் தொழிற்பூங்காவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இப்பணியானது நடந்து வருகிரது
திருச்செங்கோடு வட்டம் குமாரபாளையம் பகுதியில் உள்ள அனுபி டிசைனிங்க் இன்சுட்யூட் & ஜே.எஸ்.எஸ் மக்கள் கல்வி மத்திய அரசின் நிறுவனம் இணைந்து நடத்தும் டெக்ஸ்டைல் பிரின்டிங் மற்றும் பெயின்டிங் கோர்ஸ் இன்று(ஜூலை 20) தொடங்கியது. இதில் ஆண்கள், பெண்கள் என 18 முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு கற்றுக்கொடுத்து அதற்கான சான்றிதழும் வழங்கப்படும். மேலும், கோபிநாத் ஜே.எஸ்.எஸ்.டைரக்டர் சரவணன் கலந்துகொண்டார்.
Sorry, no posts matched your criteria.