India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகம் முழுவதும் மாவட்டத்தலைநகரங்களில் இன்று மின்சாரக்கட்டணம் உயர்த்தியதை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெறும் என தேமுதிக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று நாமக்கல் பூங்கா சாலையில் தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு தமிழக அரசிற்கு எதிராகவும் உடனடியாக மின்கட்டண உயர்வை ரத்து செய்திட வேண்டும் எனவும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாமக்கல் மாவட்டம் இராசிபுரம் அடுத்துள்ள பட்டணம் பேரூராட்சி ஏரிக்கரை பகுதியில் இன்று பாதி எரிந்த நிலையில் 20 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் இருந்தது. இதை நாமக்கல் மாவட்ட எஸ்.பி.இராஜேஸ்குமார் நேரில் சென்று தீவிர விசாரனை நடத்திவருகிறார். இது குடும்ப பிரச்சனை காரணமா அல்லது வேறு காரணமா என்று விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் காணப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து எண்ணெய் எரிவாயு நிறுவன மேலாளர்கள், முகவர்கள், விநியோகஸ்தர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் குறைதீர் கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் 30ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எரிவாயு நுகர்வு பயனாளர்கள் கலந்து கொண்டு, தங்களின் குறைகளை மனு கொடுத்து பயன்பெறலாம் என ஆட்சியர் ச.உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கறிக்கோழி கிலோ ரூ.117க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 குறைக்க முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.115 ஆக குறைந்துள்ளது. இதனால் முட்டை கொள்முதல் விலை 520 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.87 ஆகவும் நீடிக்கிறது. அவற்றின் விலைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
ராசிபுரம் அடுத்த கொல்லிமலை செல்லும் சாலையில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கொல்லிமலையை சுற்றிப் பார்க்க நேற்று வந்துள்ளனர். இவர்கள் கோவில் மற்றும் அருவிகளில் குளித்து விட்டு மீண்டும் நரியன் காடு வழியாக இரவு கீழே இறங்கும் போது வளைவில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த 10 பேர் படுகாயம் அடைந்தனர். உடனடியாக அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இராசிபுரம் வட்டம் அத்தனூர் பேரூராட்சி சிங்களாந்தபுரம் ஊராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று (ஜூலை 24) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா டெங்கு ஒழிப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொண்டார். நாமக்கல் மாவட்ட அரசு மருத்துவமனை காய்ச்சல் உள்நோயாளிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் வருகின்ற 26 ஆம் தேதி நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் காலை 10 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்கள் கலந்து கொண்டு பயனடைய வேண்டுமென நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா தெரிவித்துள்ளார்.
2024-25ஆம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டில், எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் பாரபட்சமாக புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று நடைப்பெற்ற ஆர்பாட்டத்தில் நாமக்கல் மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ் குமார், சக நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கருப்பு சட்டையுடன் பங்கேற்று கண்டனத்தை எழுப்பினார்.
திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம், வரகூராம்பட்டி ஊராட்சி, பட்டேல் நகரில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியத்தின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நேற்று மாவட்ட ஆட்சியர் ச.உமா, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் ஈ.ஆர்.ஈஸ்வரன் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டார்.
நாமக்கல் – சேந்தமங்கலம் சாலையில் உள்ள ரயில் நிலையத்திற்கு நேற்று மாலை மத்திய பிரதேசத்திலிருந்து 2800 டன் கோதுமை சரக்கு ரயில் மூலம் வந்தடைந்தது. இது நாமக்கல் சுற்று வட்டார பகுதியில் இருக்கும் உணவு பொருள் பாதுகாப்பு குடோன்களுக்கு லாரி மூலம் அனுப்பப்பட்டது. மேலும் அங்கிருந்து நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் கொண்டு செல்லபட உள்ளது. இதனால் ரேஷன் கடைகளில் கோதுமை பஞ்சம் இருக்காது.
Sorry, no posts matched your criteria.