Namakkal

News January 10, 2026

நாமக்கல்: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, தேவையான பொருட்களுக்கு பதிலாக மற்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) நாமக்கல் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க

News January 10, 2026

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

திருநெல்வேலி – ஷிமோகா (06103/06104) இடையேயான வாராந்திர சிறப்பு ரயில் நாளை (ஜனவரி 11) முதல் இயக்கப்பட உள்ளது. இந்த ரயில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 11:55 மணிக்கு நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தடையும். அங்கிருந்து புறப்பட்டு பங்காரபேட், கிருஷ்ணராஜபுரம், பெங்களூரூ, சிக்பானவர், டும்குரு, அரசிகெரே, பிரூர், பத்ராவதி வழியாக ஷிமோகா சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.

News January 10, 2026

நாமக்கல்லில் முடங்கியது போர்வெல் தொழில்!

image

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை தலைமை இடமாகக் கொண்டு ரிக் லாரி உரிமையாளர் சங்கம் செயல்பட்டு வருகிறது. இதனுடைய போர்வெல்ஸ் (ஆழ்துளை கிணறு) போட பயன்படும் உதிரிபாகங்கள் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் நாமக்கல் மாவட்டம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட போர்வெல் லாரிகள் உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

News January 10, 2026

நாமக்கல்: ஆன்லைனில் பணம் அனுப்புபவரா நீங்கள்?

image

தற்போது அனைவரும் UPI மூலமே பணத்தை அனுப்பி வருகின்றனர். இந்த சூழலில், தவறுதலாக மாற்றி தெரியாத நபர்களுக்கு பணத்தை அனுப்பி விட்டால் கவலை வேண்டாம். உடனடியாகப் பணம் பெற்றவரைத் தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) வாடிக்கையாளர் சேவை எண்களைத் தொடர்புகொண்டு புகார் தெரிவித்தால் உங்கள் பணத்தைத் திரும்பப் பெறலாம். SHARE பண்ணுங்க!

News January 10, 2026

பள்ளிப்பாளையத்தில் பதறும் மக்கள்!

image

நாமக்கல்|: பள்ளிப்பாளைய அருகே உள்ள வெப்படை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகத் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சவுதாபுரத்தில் ஆடுகள் திருட்டு, பூட்டியிருந்த நூற்பாலையில் காப்பர் ஒயர்கள் திருட்டு எனத் அடுத்தடுத்த தொடர் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் இப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். மேலும் இப்பகுதியில் இரவு நேரப் போலீஸ் ரோந்து பணியைத் தீவிரப்படுத்த கோரிக்கை!

News January 10, 2026

நாமக்கல் பெண் குழந்தைக்கு ரூ.50,000/-

image

பெண் குழந்தைகளுக்கு முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் 1 பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000-ம், அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு <>இங்கே<<>> கிளிக் (அ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். SHARE NOW!

News January 10, 2026

நாமக்கல்லில் போக்குவரத்து மாற்றம்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

நாமக்கல் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஜன.13 முதல் திருச்சி, துறையூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவு. பேருந்துகள் ‘சிங்கப்பூர் ஸ்டுடியோ’ நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து, நேரக்காப்பாளர் அறை வழியாக வெளியேற வேண்டும். பயணிகள் பேருந்து நிலையத்தின் உட்புறத்திலிருந்தே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News January 10, 2026

நாமக்கல்லில் போக்குவரத்து மாற்றம்: ஆட்சியர் அதிரடி உத்தரவு!

image

நாமக்கல் மாநகராட்சியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க, ஜன.13 முதல் திருச்சி, துறையூர் செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல ஆட்சியர் துர்காமூர்த்தி உத்தரவு. பேருந்துகள் ‘சிங்கப்பூர் ஸ்டுடியோ’ நுழைவாயில் வழியாக உள்ளே நுழைந்து, நேரக்காப்பாளர் அறை வழியாக வெளியேற வேண்டும். பயணிகள் பேருந்து நிலையத்தின் உட்புறத்திலிருந்தே பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

News January 10, 2026

நாமக்கல்லில் வசமாக சிக்கிய திருடன்!

image

நாமக்கல் அடுத்த செல்லப் பம்பட்டி மதுரை வீரன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜா (63). கட்டட மேஸ்திரியான இவரது பைக் நேற்று அதிகாலை திருடு போய் உள்ளது. இது குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்ட போலீசார் வேட்டாம்பாடியைச் சேர்ந்த சாந்தகுமார் (29) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த பைக்கை பறிமுதல் செய்தனர்.

News January 10, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று (09.01.2026) இரவு முதல் இன்று காலை வரை ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும். அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!