Namakkal

News September 11, 2024

மழை நீர் சேகரிப்பு முறைகள் குறித்து இலவச பயிற்சி

image

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி புதன்கிழமை அன்று காலை 10 மணி முதல் வரை மாலை 4 மணி வரை வேளாண் பயிர்களில் நீர் பாசன மேலாண்மை மற்றும் மழைநீர் சேகரிப்பு முறைகள் என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது இப்பயிற்சியில் கலந்து கொள்பவர்கள் 04286 266345, 9597746373 , 2010580683 என்ற தொலைபேசி எண்களை அணுகி பயன்பெற வேளாண் அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

News September 10, 2024

தாட்கோ மூலம் பயிற்சி – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி (ம)மேம்பாட்டு கழகத்தின் (தாட்கோ) முன்னெடுப்பாக அம்பேத்கார் அகாடமி(ம) சென்னையில் உள்ள முன்னனி பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து 100 ஆதிதிராவிடர்(ம) பழங்குடியினர் மாணக்கர்களுக்கு ஒரு வருட காலம் UPSC தேர்வுக்கான முதல் நிலை முதன்மை நிலை பயிற்சியினை வழங்கவுள்ளது. இப்பயிற்சி நிறுவனத்தில் சேர்வதற்கு www.tahdco.com என்ற முகவரியில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார்

News September 10, 2024

இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்.

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது . இதில் மாவட்ட இரவு ரோந்து அதிகாரி ஆகாஷ்ஜோஷி உதவி காவல் கண்காணிப்பாளர்- 9711043610. உட்கோட்டம் நாமக்கல்: வெங்கடாசலம், காவல் ஆய்வாளர்- 9445492164, இராசிபுரம்: சுரேஷ் காவல் உதவி ஆய்வாளர்- 9788015452, திருச்செங்கோடு: தவமணி, காவல் ஆய்வாளர்- 9443736199 வேலூர்: ரவிசந்திரன், காவல் உதவி ஆய்வாளர்- 9498169276.

News September 10, 2024

சிகிச்சை பலனின்றி தாயும் சேயும் பரிதாப பலி

image

நாமகிரி பேட்டை அருகே பிரசவத்தின் போது குழந்தையை தொடர்ந்து இளம்பெண்ணும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜே.ஜே. நகரை சேர்ந்த திவ்யா(21). இவருக்கு கடந்த 24 ஆம் தேதி பிரசவம் வலி ஏற்பட்டது. இதை அடுத்து அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கடந்த 29 ஆம் தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்து, இறந்தது. மேலும் திவ்யாவின் உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

News September 10, 2024

ஏபிடிஒ-க்களை இடம் மாற்றி ஆட்சியர் உத்தரவு

image

நாமக்கல் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களை நேற்று இடமாற்றம் செய்து கலெக்டர் உமா உத்தரவிட்டுள்ளார். கபிலர்மலை சங்கீதா, மல்லசமுத்திரம் கன்னியம்மாள், பள்ளிபாளையம் வெங்கடாஜலபதி, பரமத்தி பழனியம்மாள், இளங்கோவன் ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பணி இடங்களுக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

News September 10, 2024

குமாரபாளையத்தில் ஒரு வயது குழந்தை உயிரிழப்பு

image

குமாரபாளையம் தெற்கு காலனியில் வசிப்பவர் கார்த்திகா(23). நேற்று காலை தனது ஒரு வயது பெண் குழந்தையை வீட்டில் படுக்க வைத்திருந்தார். பெட்சீட் ஒன்று ஒரு வயது குழந்தை மீது மூடப்பட்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் ஏதும் கேட்காததால், குழந்தையின் தாய் கார்த்திகா பெட்சீட் எடுத்து பார்த்த போது ஒரு வயது குழந்தை பிரதிக்சா மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News September 10, 2024

வேலை வாய்ப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம்(ம) தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 21ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் 3 மணி வரை மல்லசமுத்திரம், மகேந்திரா கல்லூரியில் நடைபெறுகிறது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர் தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

News September 9, 2024

பொதுமக்கள் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று 09.09.2024 நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ச.உமா, தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய மனுக்களுக்கு உடனடி நடவடிக்கையும், பொதுமக்களுக்கும் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

News September 9, 2024

கலெக்டரிடம் மனு வழங்கிய மக்கள்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 468 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் வழங்கினர்.

News September 9, 2024

நாமக்கல்: ஆபரண தங்கம் ரூ 53,440க்கு விற்பனை

image

நாமக்கல் நகர ஷராப் மற்றும் நகை வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் இன்று 9ஆம் தேதி திங்கட்கிழமை தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்: ஆபரண தங்கம் 8 கிராம் ரூ.53,440, 1 கிராம் ரூ.6,680, முத்திரைக் காசு 8 கிராம் ரூ.54,440, 1 கிராம் ரூ.6,800, வெள்ளி ஒரு கிராம் ரூ.90 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது.

error: Content is protected !!