Namakkal

News September 21, 2024

நாமக்கல்லில் லாரி மீது கார் மோதி விபத்து

image

சேலம் மாவட்டத்தை சேர்ந்த 3 இளைஞர்கள் நேற்று நாமக்கல்லில் இருந்து, சேலத்தை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ராசிபுரம் அருகே வந்த லாரி ஒன்று காரின் மீது மோத வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன ஓட்டுநர் லாரியிடம் இருந்து தப்பிப்பதற்காக காரை இடது புறமாக திரும்பியபோது, லாரியின் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த 3 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News September 21, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மிக முக்கிய அறிவிப்பு

image

நாமக்கல் மாவட்டத்தில் கனமழை உள்ளிட்ட பேரிடர் தொடர்பான தகவல்களை, பொதுமக்கள் உடனுக்குடன் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இயங்கி வரும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மூலம் தெரிவிக்கலாம்.என
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்துள்ளார்.

News September 20, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவசம்

image

நாமக்கல் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புரட்டாசி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு இன்று ஆஞ்சநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டது. பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்றனர்.

News September 20, 2024

மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

image

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் (ம) தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை காலை 9 மணி முதல் 3 மணி வரை மல்லசமுத்திரம், மகேந்திரா கல்லூரியில் நடைபெறுகிறது. வேலை வேண்டி விண்ணப்பிப்போர் தங்களுடைய சுய விவரம், உரிய கல்விச்சான்றுகள் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் நேரில் கலந்து கொள்ளலாம்.

News September 20, 2024

நாமக்கல்: கிணற்றில் தவறி விழுந்து சிறுவன் உயிரிழப்பு

image

நாமக்கல்: எருமைப்பட்டி அருகே உள்ள சிங்கள கோம்பை கிணற்றில் நேற்று 8 வயது சிறுவன் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார். இந்த சிறுவன் கொல்லிமலை பகுதியை சேர்ந்த சுரேந்தர் என்பவரது மகன் ஆவார். தனது தந்தையை பார்க்க வந்த அந்த சிறுவன் அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து தீயணைப்பு வீரர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News September 19, 2024

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்ககவசம்

image

நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. புரட்டாசி மாத வியாழக்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.

News September 19, 2024

தேங்காய் நார் மில்லில் தீ விபத்து

image

நாமக்கல், பரமத்தி வேலூர் தாலுகா நல்லூர் கந்தம்பாளையம் அருகே உள்ள S.புதுப்பாளையம் பகுதியில் தனியார் தேங்காய் நார் கம்பெனி இயங்கி வருகின்றது. இதில் வடமாநில தொழிலாளர்கள் 15 பேர்கள் வேலை செய்து வருகின்றனர் கம்பெனியில் நேற்று இரவு மின் இணைப்பில் ஏற்பட்ட மின் கசிவில் திடீரென தீ பற்றி அருகில் இருந்த நார்களில் தீ பற்றி கம்பெனி முழுவதும் தீயில் எரிந்து சுமார் ரூ.3 கோடி மதிப்பு பொருட்கள் நாசம் ஆனது.

News September 19, 2024

நாமக்கல்லில் மின்சாரம் பாய்ந்து குழந்தை உயிரிழப்பு

image

நாமக்கல், கணவாய்பட்டி தங்கதுரை சோனியா தம்பதியின் ஒன்றரை வயது மகள் தனியாஸ்ரீ. சோனியா நாமக்கல் முல்லை நகரில் உள்ள அக்கா சுமதி வீட்டுக்கு சென்று இருந்தார். அங்கு நேற்று மின்சாரம் தடைபட்டது. அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த தனியாஸ்ரீ சுவிட்சை தொட்டதும் மின்சாரம் பாய்ந்தது. பின் தனியாஸ்ரீ சத்தம் கேட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News September 19, 2024

பதக்கம் வென்ற நாமக்கல் மாணவியை பாராட்டிய எம்பி

image

நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி – ஆராய்ச்சி நிலையத்தில் படித்து வரும் மாணவி துளசிமணி, சமீபத்தில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் வெள்ளிப் பதக்கம்‌ வென்று ‌சாதனை படைத்தார். இந்நிலையில் பதக்கம் வென்ற மாணவி துளசிமதிக்கு, பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் நேற்று சால்வை அணிவித்து கேடயம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

News September 18, 2024

நாமக்கல்லில் 500 புதிய ரேசன்கார்டுகள் தயார்

image

நாமக்கல் மாவட்டத்தில் 500 புதிய ரேஷன்கார்டுகள் தயார் நிலையில் இருப்பதாகவும், அவற்றை பயனாளிகளுக்கு விரைவில் வழங்க ஏற்பாடு நடந்து வருவாதாகவும் அதிகாரிகல் தெரிவித்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் புதிய ரேஷன்கார்டுகள் கேட்டு 6,161 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அந்த வகையில் இதுவரை ஏறத்தாழ 500 தகுதியான பயனாளிகள் அடையாளம் காணப்பட்டு புதிய ரேஷன் கார்டு அச்சிட தயார் நிலையில் உள்ளது.

error: Content is protected !!