India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நாமக்கலில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் அருகே மலையாம்பட்டியில் பொங்கலாயி அம்மன் கோயில் உள்ளது. 100 ஆண்டுகள் மேலாக ஆண்கள் மட்டும் கிடாவெட்டி கொண்டாடும் சமபந்தி திருவிழா ஆடி மாதங்களில் பொங்கலாயி அம்மன் கோயிலில் சிறப்பு வாய்ந்தது. இந்த நிகழ்வில் பெண்களுக்கு அனுமதி இல்லை. இங்கு 200க்கும் மேற்பட்ட ஆடுகளை வெட்டி சாதி பேதமின்றி இந்த கிடாவிருந்தில் கலந்து கொள்வார்கள். ஒரே கண்டிஷன் இந்த உணவை வீட்டிற்கு எடுத்து செல்லகூடாது .
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைப்படி மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தின் பின்புறம் புதிதாக மருத்துவமனை கட்டிடம் கடந்த நவம்பர் மாதத்தில் திறக்கப்பட்டது. இந்நிலையில் சிறப்பாக செயல்பட்டு வரும் மருத்துவமனை குறித்து, உண்மைக்கு மாறான தவறான தகவல்களை சமூக வலைத்தளங்களில் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு எதிராக உண்ணாவிரத போராட்டம் நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. உண்ணாவிரத போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து ராசிபுரம் நகர அதிமுக செயலாளர் பாலசுப்பிரமணியம் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மனுதாரர் கோரிக்கை ஏற்று அந்த இடத்தில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
இராசிபுரம் வட்டம் வையப்பமலை அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்று பள்ளிகளுக்கு இடையேயான 19 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான கோ-கோ போட்டியானது தொடங்கியது. இதில் வட்டார அளவிலான அரசு பள்ளியை சேர்ந்த மாணவிகள் பங்குபெற்றனர் . இதில் வெற்றிபெறும் அணிகள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெறுவர். இப்போட்டிகளை பள்ளியின் தலைமையாசிரியர் தொடங்கி வைத்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது, விவசாயிகள் நலனுக்காக சூரிய ஒளியினால் இயங்கும் சோலார் பம்புசெட்டுகள் அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது . எனவே மானிய விலையில் சோலார் பம்புசெட்டுகளை அமைத்துக் கொள்ள, விருப்பமுள்ள விவசாயிகள் தகுந்த ஆவணங்களுடன் தங்கள் வட்டாரத்துக்குட்பட்ட வேளாண்மை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சிறிய கூட்டரங்கில் இன்று மதியம் விவசாய சங்கங்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். இதில் மேட்டூர் அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரினை விவசாய பயன்பாட்டிற்கு எவ்வாறாக பயன்படுத்த வேண்டும் எனவும் நீரினை அனைத்து பகுதி விவசாயிகளுக்கும் பயனடைய வேண்டுமென ஆட்சியர் தெரிவித்தார்.
உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாதத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணியளவில் ஆஞ்சிநேயருக்கு பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் தரிசனம் பெற்று சென்றனர்
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கை பேரிடரில் உயிரிழந்தவர் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த சரவணன். இவரது குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் அறிவித்துள்ளார். இன்று காலை 9:45 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா செல்லப்பம்பட்டி கிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் வழங்குகிறார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் “காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, வெள்ள பாதிப்பு உள்ள பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் இயற்கை பேரிடர்கள் குறித்து பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் மற்றும் 04286- 299137 ஆகிய கட்டுப்பாட்டு எண்ணைதொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.