Namakkal

News February 8, 2025

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (08-02-2025) நிலவரப்படி, முட்டை கொள்முதல் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.4.65 காசுகளாக நீடித்து வருகிறது. அதேபோல், கறிக்கோழி கிலோ ரூ.93 ஆகவும், முட்டை கோழி கிலோ ரூ.77 ஆகவும் நீடித்து வருகிறது. தைப்பூச விழா நெருங்கி வருவதையொட்டி, முட்டை மற்றும் இறைச்சி நிகழ்வு குறைந்துள்ளது. இதனால் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

News February 8, 2025

மது பிரியர்கள் அதிர்ச்சி: பிப்.11ம் தேதி மதுக்கடை விடுமுறை

image

நாமக்கல் ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பில், நாமக்கல் மாவட்டத்தில் வள்ளலாா் நினைவு தினத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அரசு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

News February 8, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இந்த குழுக்கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ. 4.65 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பனி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.65க்கு விற்பனை செய்யப்பட்டது.

News February 7, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அலுவலர்கள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (07/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கபிலன் (9498178628), ராசிபுரம் – கோமளவல்லி (8610270472), திருச்செங்கோடு – முருகேசன் (9498133890), வேலூர் – பிரபாவதி (9842735374) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 7, 2025

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ச.உமா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை (8.2.2025)ல் இராசிபுரம், நாமக்கல், சேந்தமங்கலம், கொல்லிமலை , திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் பிரிவில், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், ரேஷன் குறைதீர் கூட்டம், காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News February 7, 2025

நாமக்கல்லில் இன்று முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம், நாமக்கல்லில் இன்று நடைபெற்றது இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4. 65 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. குளிர், பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.65 விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது

News February 6, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (06/02/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – தீபா (9443656999), வேலூர் – சரண்யா (8778582088) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News February 6, 2025

நாமக்கல்: நீங்களும் Way2News-இல் நிருபர் ஆகலாம்!

image

உங்கள் பகுதியில் நிலவும் சாலை, குடிநீர், மின்சாரம், பேருந்து வசதி உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து யாரும் கண்டு கொள்ளவில்லையா? கவலை வேண்டாம், இப்போதே Way2News செயலியில் நிருபராக மாறி உங்கள் பகுதி மக்களின் கோரிக்கைகளை செய்திகளாக பதிவிட்டு அரசு அதிகாரிகள், மக்களின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். நிருபராக பதிவு செய்ய <>இங்கே கிளிக்<<>> செய்யவும். மேலும், 97915-60717 என்ற எண்ணுக்கு What’s App பண்ணுங்க.

News February 6, 2025

நாமக்கல்:  நானோ தொழில்நுட்பம் சார்ந்த சர்வதேச மாநாடு

image

திருச்செங்கோடு வட்டம் தோக்கவாடி பகுதியில் உள்ள KSR மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வேதியியல் துறை “நானோ தொழில்நுட்பம் மற்றும் பொருள் அறிவியல்” என்ற சர்வதேச மாநாட்டை ஏற்பாடு செய்தது. இதில் சிறப்பு விருந்தினராக தேசிய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பேராசிரியர் என்.விஜயன் கலந்து கொண்டார்.

News February 6, 2025

டெல்லி ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் எம்பி

image

UGC நெறிமுறைகள் திரும்ப பெற மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் திமுக மாணவர் அணி சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் எம்.பி. ராஜேஷ்குமார் கலந்து கொண்டார். அவருடன் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

error: Content is protected !!