India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு சங்கங்களில் கீழ் இயங்கி வரும் ரேஷன் கடைகளில், விற்பனையாளர் மற்றும் கட்டுநர்கள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் 109 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு தேர்வு கிடையாது. நேரடி நியமனம் மூலம் இப்பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
நாமக்கல் மாவட்டத்தில் 2024-25ஆம் ஆண்டு பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம், சிறப்பு மற்றும் ராபி பருவத்தில் அக்ரிகல்சர் இன்சுரன்ஸ் கம்பெனி இந்தியா லிட் என்ற காப்பீடு நிறுவனத்தால் செயல்படுத்தப்படவுள்ளது. விவசாயிகள் அறிவிக்கை செய்யப்பட்ட பயிர்களை காப்பீடு செய்வதற்கான கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்னதாகவே காப்பீடு செய்ய நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
நாமக்கல்லில் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.05 என்ற அளவில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புரட்டாசியில் முட்டை நுகர்வு சற்று குறைவு என்பதால், விலையும் சற்று குறைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக முட்டை விலையில் மாற்றம் இல்லாமல் தொடர்ந்து ரூ.5.05 என்று விற்பனை செய்யப்படுகிறது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், தேசிய தன்னார்வ ரத்த தான தினத்தை முன்னிட்டு,இரத்த கொடையாளர்களுக்கு கேடயம் வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார். இதில் சுகாதாரத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாமக்கல் மாவட்டத்தில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் தற்காலிகமாக உணவு கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள், வீடுகள் தயாரிக்கப்படும் இனிப்பு கார வகைகளுக்கு உணவு பாதுகாப்பு சட்ட விதிகளின்படி உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும். இது பற்றி பொதுமக்கள் புகார் தெரிவிக்க 9444042322 என்ற எண்ணை ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் பகுதியில் முதலமைச்சர் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வருகின்ற 15ஆம் தேதி வருவதாக இருந்தது. தற்போது தவிர்க்க முடியாத காரணத்தால் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் வரும் நாள் திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர் 16ஆம் தேதி நாமக்கல் வருகை புரிந்து முதலாவதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை திறப்பு விழா, அதனை தொடர்ந்து மதியம் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் இன்று (10.10.24) ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
வரும் பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் 33 இடங்கள் மழையால் பாதிக்கப்படும் என கணிக்கப்பட்டு, அவசர தேவைக்காக 330 பேர் அடங்கிய மீட்பு குழுவினர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், அவசர உதவிக்கு 1077 என்ற 24 மணி நேரமும் செயல்படும் எண்ணிலும், டிஎன் – ஸ்மார்ட் செயலியை பயன்படுத்த ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. புரட்டாசி புதன்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக சீரிளமைத் திறம் கொண்ட அன்னைத் தமிழுக்கு அருந்தொண்டாற்றி வரும் அகவை முதிர்ந்த தமிழர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. நாமக்கலில் இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 2024-2025 அம் ஆண்டுக்கான படிவத்தை நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரடியாக பெற்று 31/10/2024 க்குள் அளிக்கப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.