India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்நாட்டில் 24 காவல் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
24 ஏடிஎஸ்பிகள் எஸ்பிகளாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதன்படி நாமக்கல் மாவட்டத்தில்
ஏடிஎஸ்பியாக இருந்த கணகேஷ்வரி சென்னை பொருளாதார குற்றப்பிரிவு எஸ்பியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
நாமக்கல் திருச்செங்கோடு சாலையில் அமைந்துள்ள நுகர்வோர் நீதிமன்றத்தில், பரமத்தி பகுதியை சேர்ந்த செல்வி என்பவர் வழக்கு தொடர்ந்தார். அவரது கணவர் முருகன் சாலை விபத்தில் இறந்ததால், இன்சூரன்ஸ் பணம் ரிலையன்ஸ் தர மறுத்ததாக கூறி வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்றது. நேற்று மாலை விசாரணை முடிவில், முருகன் குடும்பத்தாருக்கு ரூ 22 லட்சம் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் சிறு ஜவுளி பூங்காக்கள் அமைப்பது தொடர்பாக உற்பத்தியாளர்கள், அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் உமா பேசியதாவது, ஜவுளி தொழில் கட்டமைப்பு வலுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஜவுளி பூங்கா அமைக்கவும், தொழில்முனைவோருக்கும் ரூ.2.50 கோடி வரை நிதியுதவி அரசால் வழங்கப்படவுள்ளது என்றார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று மாலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் முதலமைச்சரின் அறிவிப்பின்படி, கடந்த ஆண்டு முதல் “தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை” விளையாட்டுப் போட்டிகள் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டிகளுக்கு இணையாக சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொள்ள விருப்பமுள்ள கல்லூரி மாணவ, மாணவியர்கள் மாவட்ட விளையாட்டுதுறை அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைபூ 500 ரூபாய்க்கு விற்பனையானது. மேலும் ஜாதிமல்லி 360க்கும், முல்லைப்பூ 320க்கும், மஞ்சள் அரளி 200 ரூபாய் என பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.மேலும் நாளை ஆடி கடைசி வெள்ளிக்கிழமை என்பதால் இன்று மாலை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திருச்செங்கோட்டில் நேற்று தேசிய கைத்தறி தின விழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் முத்ரா கடன் திட்டத்தின் சார்பில் 73 நெசவாளர்களுக்கு ரூ.31.00 லட்சம் கடனுதவி மானியத்துடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 4 பயனாளிகளுக்கு ரூ.16.00 லட்சம் மதிப்பில் கடனுதவி உள்ளிட்ட 103 நெசவாளர்களுக்கு 52.25 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் உமா வழங்கினார்.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கல், பெயர் திருத்தம், புதிய குடும்ப அட்டை கோருதல் மற்றும் குடும்ப அட்டையில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் பொருட்டு, பொது விநியோக திட்ட மக்கள் குறைதீர் முகாம் வரும் 10ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே நாமக்கல்லில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாமக்கல்லில் 5செமீ மழை பெய்து இருப்பது குறிப்பிடதக்கது.
திருச்செங்கோடு அருள்மிகு ஸ்ரீ சின்ன ஓங்காளியம்மன் திருக்கோவிலில் இன்று காலை விசேஷ சிறப்பு பூஜை நடைபெற்றது. பூஜையில் கிரிக்கெட் வீரர் நடராஜன் சாமி தரிசனம் செய்தார். கோவில் தர்மகர்த்தா முத்துக்குமார், சாந்தி முத்துக்குமார் மற்றும் ராயல் ஃபுட்ஸ் சக்திவேல் அவர்கள் அவருக்கு வரவேற்பு அளித்தார். கோவிலில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் அவருடன் புகைப்படம் எடுத்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள், அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் 01.07.23 முதல் 30.06.24 வரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மருத்துவ செலவு தொகை மீள பெறுவதற்கான விண்ணப்பங்களுடன் கூடிய பட்டியல்கள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இதன் இறுதி நாளாக இந்த மாதம் 16ம் தேதி என்று நாமக்கல் மாவட்டஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.