India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற 15 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் பொது நிதி, செலவினம், அடிப்படை வசதிகள் உள்ளிட்ட் 12 தலைப்புகளில் விவாதம் நடைபெற்று பொதுமக்களுக்கு அலுவலர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் என ஆட்சியர் உமா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஆடி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று 11 மணியளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகமும் பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்க கவசம் சாற்றப்பட்டது. துளசியால் அர்ச்சனை செய்த பின் மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் பெற்றனர். வீட்டிலிருந்தே அனைவருக்கும் பகிருங்கள்.
நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலைக்கல்லூரியில் 2024- 2025-ம் கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்புகள் கணிதம், இயற்பியல், தாவரவியல், ஆங்கிலம், வரலாறு, பொருளியல் ஆகிய 6 பாடப்பிரிவுகளில் 175 காலியிடங்கள் உள்ளன. இந்நிலையில் பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் உடனடியாக கல்லூரிக்கு வந்து இணையதளம் மூலம் விண்ணப்பித்து சேர்ந்து கொள்ளலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மங்களபுரம் 42.40 மி.மீ, நாமக்கல் 4 மி.மீ, புதுச்சத்திரம் 1மி.மீ, ராசிபுரம் 9.60 மி.மீ, சேந்தமங்கலம் 6 மி.மீ, திருச்செங்கோடு 6.50 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் வளாகம் 1.60 மி.மீ, கொல்லிமலை 19 மி.மீ என மொத்தம் 90.10 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
நாமக்கல் அருகே என்.கொசவம்பட்டியை சேர்ந்த தம்பதியினர் வெங்கடேஷ் (25) – மோனிஷா (23). கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அண்மையில் கணவரிடம் கோபித்துக் கொண்டு மோனிஷா தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று மோனிஷா மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் கலெக்டர் உமா கூறியதாவது “சாலை விபத்தில் சிக்கியவர்களை உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று காப்பாற்ற உதவியர்களுக்கு நற்கருணை வீரர்கள் விருதும், மத்திய அரசால் ரூ.5,000, மாநில அரசால் ரூ. 5,000 என மொத்தம் ரூ.10,000 வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு உதவிய தகுதியானவர்களுக்கு விருதும், பரிசுத் தொகையும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் ஆகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மரவள்ளி பயிர்களுக்கேற்ற மேலாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவசப் பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286 266345, 266650 என்ற தொலைபேசி எண்களை அணுகவும் 12.08.24-ந் தேதி மாலை 5 மணிக்குள் முன்பதிவு செய்துக்கொள்ள வேண்டும் என துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உயிரிழப்பு ஏற்படக் கூடிய சாலை விபத்தினால் பாதிப்படைந்தவரை , பொன்னான நேரத்தில் (கோல்டன் ஹவர்) மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உயிரை காப்பாற்ற உதவி புரிந்த தகுதியான நபர்களுக்கு, நற்கருணை வீரர்கள் விருதும் மற்றும் பரிசுத் தொகையும் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் உமா, இன்று தெரிவித்துள்ளார்.
இன்று இராசிபுரம் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரியில் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் திட்டம் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் அமைச்சர்கள் ம.மதிவேந்தன், KRNராஜேஷ்குமார் மாணவர்களுக்கு பற்று அட்டை வழங்கினர்.
நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கதுரை, வெண்ணிலா தம்பதிகளுக்கு சேலம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. பிறந்து ஐந்து நாட்களே ஆன அந்த ஆண்குழந்தையை பெண் ஒருவர் அரசு மருத்துவமனையில் இருந்து எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் உள்ள சிசிடிவி காட்சி வீடியோக்களை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.