India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபை கூட்டதிற்கு தலைவர். அவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார். அவர் தலைமையில் தான் அன்றைய கிராம சபை கூட்டம் நடைபெறும். SHARE IT
கோவையில் மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று(14.8.24) பொறுப்பேற்று கொண்டார். மேற்கு மண்டல காவல்துறை தலைவராக பணியாற்றி வந்த பவானீஸ்வரி பணியிட மாறுதலில் சென்றார். இதையடுத்து புதிய மேற்கு மண்டல காவல்துறை தலைவராக செந்தில்குமார் இன்று பொறுப்பேற்று கொண்டார். இதையடுத்து மேற்கு மண்டலத்தில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் சன்னியாசி கரடு, குறுக்கபுரம், பட்டணம், ஆலேரிப்பட்டி, முள்ளுக்குறிச்சி ஆகிய பகுதிகளில் ரூ.1.19 கோடி மதிப்பீட்டில் வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 5 மரகதப் பூஞ்சோலைகளை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக இன்று திறந்து வைத்தார். சன்னியாசி கரடு பகுதியில் திறந்து வைக்கப்பட்ட மரகத பூஞ்சோலையை எம்பி ராஜேஷ்குமார் பார்வையிட்டார்
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் நாளை சுதந்திர தினவிழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியர் உமா தேசிய கொடியேற்றி வைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்கிறார். தொடர்ந்து தியாகிகளின் வாரிசுகள் கௌரவப்படுத்தப்பட்டு, சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ் வழங்குதல் மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவைகள் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விவரம்: எருமப்பட்டி 5 மி.மீ, மோகனூர் 14 மி.மீ, நாமக்கல் 11 மி.மீ, பரமத்திவேலூர் 45.50 மி.மீ, சேந்தமங்கலம் 1 மி.மீ, திருச்செங்கோடு 15 மி.மீ, ஆட்சியர் அலுவலக வளாகம் 16.30 மி.மீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 107.80 மி.மீ மழை பதிவாகி உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் அதிகபட்சமாக பரமத்தி வேலூர் 45.50 மில்லி மீட்டர் மழை அதிகமாக பதிவாகியுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாளை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூடி வைக்க வேண்டும். இந்த உத்தரவை மீறி நாளை சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் பயிற்சிக்கு சென்ற மாணவி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். ஹோட்டாலில் பயிற்சிக்கு சென்ற கேட்டரிங் மாணவி, கழிவறையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மாணவியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதால் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி கிலோ ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், நேற்று நடைபெற்ற கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே, கறிக்கோழி விலை கிலோ ரூ.92 ஆக அதிகரித்துள்ளது. முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாகவும், முட்டை கோழி விலை கிலோ ரூ.82 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 6 மி.மீ., நாளை (வியாழன்) 28 மி.மீ, நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 29 மி.மீ மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 93.2 டிகிரி ஆகவும், குறைந்தபட்சமாக 68 டிகிரி ஆகவும் இருக்கும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகள் அதிகரிக்கும். அதன்படி, நாமக்கல் நகரையொட்டி உள்ள வகுரம்பட்டி, வள்ளிபுரம், ரெட்டிப்பட்டி, வீசானம், மரூர்பட்டி, பாப்பிநாய்க்கன்பட்டி, சிலுவம்பட்டி, தொட்டிப்பட்டி, வசந்தபுரம், வேட்டம்பாடி, லத்துவாடி, காதப்பள்ளி ஆகிய 12 ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் இந்த கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.