Namakkal

News January 17, 2026

நாமக்கல்: கேஸ் சிலிண்டர் பயனாளர்கள் கவனத்திற்கு!

image

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்.

News January 17, 2026

நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்?

image

நாமக்கல்லில் வாடகை வீட்டில் குடியேறுபவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸ் தொகையாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்யப்பட வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 044-25268320) புகார் செய்யலாம். ஷேர்!

News January 17, 2026

நாமக்கல்: ரூ.5 லட்சம் மருத்துவக் காப்பீடு பெறுவது எப்படி?

image

நாமக்கல் மக்களே மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் (PMJAY) திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெறலாம்
1. விண்ணப்பிக்க்க அருகில் உள்ள இ-சேவை மையத்தை அணுகலாம்
2.அல்லது pmjay.gov.in இணையதளத்தில் ரேஷன்&ஆதார் கார்டு உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்
3.விண்ணப்பித்த 10 – 15 நாட்களில் அதிகாரிகள் சரிபார்ப்பிற்குப் பின் ‘கோல்டன் கார்டு’ வழங்கப்படும். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க

News January 17, 2026

நாமக்கல் மக்களே உடனே செக் செய்யவும்!

image

நாமக்கல் மக்களே, இறுதி வாக்காளர் பட்டியல் விரைவில் வெளியாக உள்ள நிலையில் SIR பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம்! அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், உடனே உங்களின் பெயர், வரிசை எண், தொகுதி என அனைத்தும் SMS-ல் வரும். இதனை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News January 17, 2026

நாமக்கல்: பதிவு செய்தால் பணம் கிடைக்கும்!

image

நாமக்கல்லில் படித்து முடித்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காமல் 5 ஆண்டுகளுக்கு மேலாக காத்திருக்கும் இளைஞர்கள், வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். மேலும், www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் தகவலுக்கு நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகலாம் என ஆட்சியர் தகவல் தெரிவிப்பு.

News January 17, 2026

நாமக்கல்லில் கோடிக்கணக்கில் மது விற்பனை!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 169 டாஸ்மாக் கடைகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மது விற்பனை இருமடங்காக அதிகரித்துள்ளது. வழக்கமாக ரூ.4 கோடி வரை இருக்கும் விற்பனை, கடந்த 15-ம் தேதி மட்டும் ரூ.7.70 கோடியாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், அரசு விழாவை முன்னிட்டு ஜேடர்பாளையம் பகுதியில் 11 மதுக்கடைகள் மூடப்பட்டிருந்த நிலையிலும் இந்த சாதனை விற்பனை நடைபெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News January 17, 2026

குமாரபாளையத்தில் துணிகர சம்பவம்!

image

குமாரபாளையம் ராஜராஜன் நகரைச் சேர்ந்த டெக்ஸ்டைல்ஸ் உரிமையாளர் செந்தில்குமார், குடும்பத்துடன் சுற்றுலா சென்றிருந்தபோது அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். வீடு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில், செந்தில்குமார் போலீசில் புகாரளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 17, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், குற்றச் செயல்களை தடுத்திடவும் இரவு நேர ரோந்து பணிக்காகப் பிரத்யேக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் சட்ட ஒழுங்கை பராமரிக்கவும், இரவு நேரங்களில் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தடுக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நேற்று ஜன.16 இரவு முதல் இன்று காலை வரை பணியில் ஈடுபடும் போலீசார் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!