Namakkal

News August 28, 2024

மாநில அரசின் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

image

“தேசிய பெண் குழந்தை தினமான ஜனவரி 24ல் மாநில அரசின் விருது” 2024-25ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான நபர்கள் தகுந்த ஆதாரங்களுடன் உடன் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். இவ்விருதுக்கு மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், அறை எண்.233, 234 கூடுதல் கட்டிடம். மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாமக்கல் தொலைபேசி 04286-299460 தொடர்பு கொள்ளலாம்.

News August 28, 2024

நாமக்கல்லில் உதவியாளா் பணி: விண்ணப்பிக்கலாம்

image

நாமக்கல் காலநிலை மாற்ற இயக்க குழுவில் தொழில்நுட்ப உதவியாளா் பணியிடத்துக்கு தகுதியானோா் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ச.உமா தெரிவித்துள்ளாா். விண்ணப்பதாரா் தங்களது சுயவிவரங்களை தமிழ், ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து மேலாளா், மாவட்ட முகமை, தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சமுதாயக் கூடம், அம்மா பூங்கா எதிரில், வகுரம்பட்டி, நாமக்கல்- 637001 முகவரிக்கு செப்.16 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News August 28, 2024

நாமக்கல் வானிலை நிலவரம் 5 நாளைக்கு இப்படித்தான்!

image

நாமக்கல் மாவட்டத்தில் மழை எங்கும் பதிவாகவில்லை. இனிவரும் ஐந்து நாள்களுக்கான வானிலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. பகல் வெப்பம் 95 டிகிரிக்கு மிகாமலும், இரவு வெப்பம் 71.6 டிகிரியாகவும் காணப்படும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News August 28, 2024

நாமக்கல்: தேதி அறிவித்தார் கலெக்டர்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் உமா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகின்ற 30ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும் எனவும், அதில் நாமக்கல் மாவட்ட விவசாயிகள் கலந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் அன்று மனுக்களை நேரடியாக வழங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2024

நாமக்கல்: கேஸ் சிலிண்டர் வெடித்து பெண் காயம்

image

நாமக்கல்: பள்ளிபாளையம் அடுத்துள்ள தோ.கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள். இவர் இன்று காலை சமையல் செய்வதற்காக, வீட்டின் மின் விளக்கை ஆன் செய்துள்ளார் .அப்போது எதிர்பாராதமாக சிலிண்டர் வெடித்து வீட்டின் மேல் இருந்த ஓடுகள் சேதம் அடைந்தது. இந்த விபத்தில் மாரியம்மாள் காயமடைந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

News August 27, 2024

நாமக்கல்: வேளாண்மை பொறியியல் துறை கண்காட்சி

image

நாமக்கல் வேளாண் துறை அலுவலர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “நாமக்கல் மாவட்ட வேளாண்மை பொறியியல் துறை மூலமாக வேளாண் இயந்திரங்கள், கருவிகளின் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பு தொடர்பான மாவட்ட அளவிலான கண்காட்சி, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில், வருகின்ற 30.08.2024 அன்று காலை 9.00 மணி முதல் 5.00 மணி வரை நடைபெற உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 27, 2024

மோகனூரில் பைக் விபத்து: ஒருவர் பலி

image

மோகனூர் அருகே அமைந்துள்ள ஒடுவந்தூரை சேர்ந்தவர் ரமேஷ். இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது தந்தை பழனியப்பன் ஒருவந்தூர் கணபதிபாளையத்தில் வசித்துவந்தார். நேற்றிரவு மோகனூரிலிருந்து நாமக்கல்லுக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது, பழனியப்பன் வந்த பைக் மீது மற்றொரு பைக் மோதியது. இதில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பழனியப்பன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

News August 27, 2024

நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் மாநில பேச்சுப் போட்டி

image

நாமக்கல் கம்பன் கழகம் சாா்பில் ஆக.31ஆம் தேதி மாநில பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில், அனைத்து வகை கல்லூரி மாணவ, மாணவிகளும் பங்கேற்கலாம். ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் 3 போ் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர். முதல் பரிசாக ரூ.10 ஆயிரம், 2ஆம் பரிசு ரூ.5 ஆயிரம், 3ஆம் பரிசாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். இந்த போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

News August 27, 2024

நாமக்கல் மாவட்ட செயலாளர் உதயநிதியுடன் சந்திப்பு

image

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில், நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் மதுரா செந்தில் நேரில் சந்தித்தார். அப்போது, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மதுராசெந்திலிடம் கேட்டறிந்து, உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழங்கினார்.

News August 26, 2024

நாமக்கல் மருத்துவ மருந்து வணிகர் சங்கம் எச்சரிக்கை

image

நாமக்கல் மாவட்ட மருத்துவ மருந்து வணிக சங்கம் இன்று எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருந்து கடைகளிலும் கட்டாயமாக கருக்கலைப்பு சம்பந்தமான மாத்திரைகளை விற்பனை செய்யக்கூடாது என்றும், இது குறித்து அனைத்து கடைகளிலும் எச்சரிக்கை நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!