India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்செங்கோட்டில் காந்தி ஆசிரமம் செயல்படுகிறது. நூற்றாண்டு விழா கண்ட இந்த காந்தி ஆசிரமத்தில் கதர் பவன் கட்டப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில துணைத்தலைவர் கே.பி.ராமலிங்கம், பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பள்ளிபாளையம் அடுத்துள்ள ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் சுஜாதா. இவர் அதே பகுதியை சேர்ந்த கவிதா என்பவரிடம் ரூ.30,000 கந்து வட்டிக்கு கடன் பெற்றார். கடனை திரும்ப செலுத்த முடியாத நிலை ஏற்பட்டதால், கவிதா ஆபாசமாக பேசியுள்ளார். இதனால் மனமுடைந்த சுஜாதா கடந்த 21ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த கவிதா நேற்று திருப்பூரில் கைது செய்யப்பட்டார்.
சேலம் – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை அருகே ராசிபுரம் அடுத்த ஆட்டையாம்பட்டி சாலையில் இன்று லாரி மீது மினி ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் ஆட்டோவில் இருந்த திருச்சி மாயனூரை சேர்ந்த 7 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும், ஆட்டோவை ஒட்டி வந்த ஓட்டுநர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படாத வகையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியான சூரிய சக்தியை பயன்படுத்திட அனைவரும் முன்வர வேண்டும் என எம்பியும், நாமக்கல் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தலைவருமான ராஜேஸ்குமார் தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின்னர் அவர் சிறப்புரையாற்றினார்.
நாமக்கல் – திருச்சி சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் மன்ற செயற்குழு கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. இதில் மாநில பொருளாளர் செல்வராசு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் செப்டம்பர் 10ஆம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
நாமக்கல் ரயில்வே நிலைய ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ரயில் நிலையத்தில் இருந்து நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளுக்கு ஆட்டோவுகான கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு அதற்காக விளம்பர போர்டு வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கல் ரயில் நிலையத்தில் இருந்து நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு ரூ.80 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதேபோல் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் செல்ல ஆட்டோ கட்டண நிர்ணயம் செய்யப்பட்டது.
நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஆவணி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரமாக முத்தங்கி சாற்றப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்று காலை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் “நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்கள், சிக்கன் சென்டர், சிறிய கடைகள் ஆகிய இடங்களில் மது அருந்த அனுமதி இல்லை. இதை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மேலும், இவ்வாறான குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எஸ்.பி. அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நாமக்கல் கோட்டை சாலையில் அமைந்துள்ள உழவர் சந்தையில் இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்: இஞ்சி 1 கிலோ ரூ.150க்கும், கேரட் ரூ.116க்கும், பீன்ஸ் ரூ.72க்கும், எலுமிச்சை பழம் ரூ.85க்கும், மாங்காய் ரூ.60க்கும், பீர்க்கங்காய் ரூ.40க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
திருச்செங்கோடு புதுப்பாளையத்தில் காந்தி ஆசிரமம் உள்ளது. இங்கு கதர் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆசிரமம் நூற்றாண்டு விழாவை கொண்டாடி வரும் நிலையில், கதர் பவன் கட்டடம் திறப்பு விழா 1ஆம் தேதி நடைபெற உள்ளது. விழாவில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார். இதில் கிராம தொழில்கள் ஆணைய தலைவர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.