India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் வரும் 10,11,12 ஆகிய நாட்களில் நடைபெறுகிறது. இதில் இறகுபந்து, கால்பந்து, கபடி, செஸ், கேரம் உள்ளிட்ட போட்டிகள் நாமக்கல் மாவட்ட விளையாட்டு திடலிலும், தடகளம் கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்களிலும் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ச.உமா நேற்று தெரிவித்துள்ளார்.
நாமக்கல்: எருமப்பட்டி பொட்டிரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நந்தினி. இவர் நாமக்கல் ராமலிங்கம் மகளிர் கல்லுாரியில் படித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவர் பூந்தோட்டத்திற்கு பூ பறிக்க சென்றபோது பாம்பு ஒன்று அவரை கடித்தது. இதையடுத்து நாமக்கல் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நந்தினி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாமக்கல்லை, மாநகராட்சியாக தரம் உயர்த்தி அறிப்பு வெளியிட்டார். இந்நிலையில் நாமக்கல் மாநகராட்சி நிர்வாக ஆணையாளர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மேயருக்கான அங்கி, 5 அடி உயர செங்கோல் தயாரிக்கும் பணியை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. நாமக்கல் மாநகராட்சியின் முதல் மாமன்றக் கூட்டம் வரும் 16 அல்லது 17-இல் மன்றக் கூட்டம் நடைபெற வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
வேளாண்மை துறையின் சார்பில் நடப்பு ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறவுள்ள சிறப்பு மண் பரிசோதனை முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் உமா விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாமக்கல் மாவட்டத்தில் வரும் 11ஆம் தேதி ராசிபுரம் நடுப்பட்டியிலும் 18ந் தேதி திருச்செங்கோடு ஏமப்பள்ளியிலும் 25ந் தேதி மோகனூர் வளையப்பட்டியிலும் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட இன்று இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது . மாவட்ட இரவு ரோந்து அதிகாரி விஜயகுமார், காவல் துணைக் கண்காணிப்பாளர்- 9498104763, உட்கோட்டம் நாமக்கல்:
கோவிந்தராசன், காவல் ஆய்வாளர்- 9498170004, இராசிபுரம்: கோமலவள்ளி, காவல் ஆய்வாளர்- 8610270472, திருச்செங்கோடு: வெங்கட்ராமன், காவல் ஆய்வாளர்- 94981 69273, வேலூர்: கங்காதரன், காவல் உதவி ஆய்வாளர்- 9498172040.
நாமக்கல் மாவட்டத்தில் தமிழ்நாடு வாழ்வாதார கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு பிரிவின் கீழ் நடைபெறும் இயக்கம் இரத்த சோகை இல்லாத கிராமம் குறித்த சிறப்பு பிரச்சாரம் சிறுதானியங்கள், பாரம்பரிய உணவு திருவிழா 322 ஊராட்சிகளிலும் வரும் 9 ந் தேதி முதல் 25 ந் தேதி வரை நடைபெற உள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்கள் கலந்துக் கொள்ளுமாறு மாவட்ட மருத்துவர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்.
நாமக்கல் நகர் மைய பகுதியில் உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. ஆவணி மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று காலை 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் என வாசனை திரவியம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்ககவச அலங்காரம் செய்யப்பட்டு துளசியால் அர்ச்சனை செய்த பின் மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் பெற்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில், மீனவர்கள், மீன் வளர்ப்போருக்கு கடன் அட்டை வழங்கும் முகாம் செப். 10ஆம் தேதி தொடங்குகிறது என ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார். 10ஆம் தேதி பள்ளிபாளையம் நகராட்சி, ஆவாரங்காடு சமுதாயக் கூடத்திலும், 11ஆம் தேதி பரமத்தி வேலூர் கவுண்டம்பாளையம் பேரூராட்சி சமுதாயக் கூடத்திலும் நடைபெறுகிறது. இதில், மீனவர்கள் மற்றும் மீன்வளர்ப்போர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய் கனி பூ விலை நிலவரம்: கத்தரி ரூ.52, தக்காளி ரூ.24, வெண்டை ரூ.18, அவரை ரூ.78, கொத்தவரை ரூ.28, முருங்கை ரூ.45, முள்ளங்கி ரூ.30, புடல் ரூ.20, பாகல் ரூ.44, பீர்க்கன் ரூ.38 மற்றும் வாழைக்காய் ரூ.30. இதனிடையே நேற்று ஒரு கிலோ எலுமிச்சை பழம் ரூ.90க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ.5 குறைந்து ரூ.85க்கு விற்பனை செய்யப்பட்டது.
நமக்கு மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாவட்டத்தின் சில இடங்களில் லேசான மழை எதிர்பார்க்கப்படுகிறது. பகல், இரவு வெப்பம் 95, 73.4 டிகிரியாக காணப்படும். காற்று மேற்கிலிருந்து மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.