India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் AAY மற்றும் PHH குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் கைரேகையை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யாதவர்கள் வரும் 31ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் அட்டையை இழக்க நேரிடும் என்றும் அண்மையில் எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒருவேளை நீங்கள் வெளி மாவட்டத்திலோ, வெளி மாநிலத்திலோ இருந்தால் அருகில் உள்ள ரேஷன் கடைகளுக்கு சென்று அங்கு ரேகையை பதிவு செய்து கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம பஞ்சாயத்துகளிலும் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கடந்த 22ம் தேதி நடைபெற வேண்டிய கிராம சபைக் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது. அந்தக் கூட்டம் வருகிற 29ம் தேதி காலை 11 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 310 கிராம பஞ்சாயத்துகளிலும் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கொண்டுவரப்படும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கலாம் கலெக்டர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (25/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – வெங்கட்ராமன் (9498172040) ,வேலூர் – சபிதா (9442215201) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

நாமக்கல் நகரத்திலிருந்து 10 கிமீ தொலைவிலுள்ள கிராமமான முத்துகாபட்டி கிராமத்திற்கு அருகில் வழியிலேயே அமைந்துள்ள கோவில் தத்தகிரி முருகன் கோவில். இந்த கோவில் ஒரு சிறிய மலையின் மீது அமைந்துள்ளது. புகழ் பெற்ற முருக பக்தரான கிருபானந்த வாரியார் இந்த கோவிலில் அமைதி மற்றும் சாந்தம் பெறுவதற்காக அடிக்கடி வந்து சென்றதாக சொல்லப்படுகிறது. ஷேர் செய்யவும்.

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <

மீண்டும் மஞ்சப்பை பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில் தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள், 3 வணிக நிறுவனங்களுக்கு முதல் பரிசாக ரூ.10 லட்சம், 2ஆம் பரிசாக ரூ.5 லட்சம், 3ஆம் பரிசாக ரூ.3 லட்சம் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. கூடுதல் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட அலுவலத்தில் தகவல் பெற்று விண்ணப்பிக்கலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது.

நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாள்களான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்குகிறது. பயிற்சிக்கான விண்ணப்பம் வருகிற 13ஆம் தேதி வரை பயிற்சி நிலையத்தில் ரூ.118 கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். விவரங்களுக்கு நாமக்கல் முருகன் கோவில் பஸ் நிறுத்தம் அருகில் கூட்டுறவு மேலாண் நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகளை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (24/03/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் – ஆனந்தகுமார் (9498106533), திருச்செங்கோடு – சிவகுமார் (9498176695) ,வேலூர் – மனோகரன் (9952376488) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கலில் இன்று 24ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை 4.15 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டையின் நுகர்வு சற்று அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முட்டையின் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.4.15 ஆகவே நீடிக்கிறது.

இந்திய அஞ்சல் துறையில் நாடு முழுவதும் நிரப்பப்படும் போஸ்ட் ஆபீஸ்களில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர் மற்றும் உதவி கிளை போஸ்ட் மாஸ்டர் பதவிகளுக்கு மொத்தம் 21,413 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் நாமக்கல் மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. <
Sorry, no posts matched your criteria.