India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம், புதியகுடும்ப அட்டை கோருதல், கைபேசிஎண் பதிவு உள்ளிட்டவைகள் மேற்கொள்ள பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்நாள் முகாம் இன்று (செப்-14) நாமக்கல் ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் செயல்பட்டு வரும் புதிய பஸ் நிலையத்தை 8.5 கிலோமீட்டர் தொலைவில் மாற்றி அமைக்க நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியதை கண்டித்து நில வணிக நிறுவனத்துக்கு சாதகமாக செயல்படும் நகராட்சியின் ஊழல் குறித்து முழு விசாரணை நடத்த பாமகவை சேர்ந்த அன்புமணி ராமதாசு அறிக்கை வெளியிட்டார்.
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 17.09.2024 அன்று மிலாடி நபியை முன்னிட்டு அரசு விடுமுறை நாள் ஆகும். மேலும், 16.09.2024 (திங்கள் கிழமை) கல்லூரி விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டு அதனை, ஈடுசெய்யும் வேலைநாள் பின்னர் தெரிவிக்கப்படும். விடுமுறைக்குப் பிறகு கல்லூரி 18.09.2024 (புதன் கிழமை) மீளத் திறக்கப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் கடைவீதி அருகே அமைந்துள்ள பலபட்டறை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் அரசியல் முக்கிய பிரமுகர்கள் வருகை புரிய உள்ளனர் இதனால் நாமக்கல் நகரப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சேலம் சாலை முதல் பேருந்து நிலையம் வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2024 தீபாவளி பண்டிகையினை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் வெடிபொருள் சட்டம் 1884 மற்றும் வெடிபொருள் விதிகள் 2008-ன்கீழ் தற்காலிக பட்டாசு கடைகள் வைக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம். விதி எண் 84 மற்றும் இதர விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை பின்பற்றி இ-சேவை மையங்கள் மூலம் இணையதளம் வழியாக வரும் 11.10.2024-குள் விண்ணப்பிக்குமாறு ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் தலைமையிடம் ஆக கொண்டுள்ள எல்பிஜி டேங்க் லாரி நிறுவன சங்க தலைவர் சுந்தர்ராஜன் இன்றைய வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கர்நாடகா மாநிலத்தில் எல்பிஜி டேங்கர் லாரிகளுக்கு நிலுவைத் தொகை வழங்காமல் இருக்கின்றனர். இதனை கண்டித்து எல்பிஜி டேங்கர் லாரிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் அறிவித்துள்ளனர். இதனால் சுமார் 200க்கும் மேற்பட்ட டேங்கர் லாரிகள் ஓடாத என தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா இன்று இரவு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நாளை உலக தற்கொலை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நாளை காலை மோகனூர் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவமனை வளாகத்தில் இருந்து மாபெரும் பேரணி நடைபெற உள்ளதாக மேலும் இந்த பேரணியில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் மாவட்ட நல்வாழ்வு சங்கம் வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது. இதில் மொத்தமாக 17 காலிபணியிடங்களை அறிவித்துள்ளது. இப்பணிக்கு மாத ஊதியமாக ரூ15000 – 40000 வரை கொடுக்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வலர்கள் BSMS, D.Pharm, Diploma, Literate, Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு https://namakkal.nic.in/notice_category/recruitment/ இந்த இணைய தளத்தை அணுகலாம்.
ராசிபுரம், மங்களபுரம் அருகே அமைந்துள்ள ஒண்டிக்கடை பகுதியில் சுற்றி திரிந்த வெறிநாய் ஒன்று அப்பகுதியில் நின்று கொண்டிருந்த சுமார் ஐந்து பேரை கடித்தது. இதில் காயமடைந்தவர்கள் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் பெற்று வருகின்றனர். மேலும் அப்பகுதியில் சுற்றித் திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், நீக்கல் பெயர் திருத்தம், புதியகுடும்ப அட்டை கோருதல், கைபேசிஎண் பதிவு உள்ளிட்டவைகள் மேற்கொள்ள பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர்நாள் முகாம் வரும் செப்14ம் தேதி நாமக்கல் ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் ஆகிய வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்
Sorry, no posts matched your criteria.