Namakkal

News March 28, 2025

சேந்தமங்கலம் அருகே வரும் 19-ந் தேதி ஜல்லிக்கட்டு

image

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே பச்சுடையாம்பட்டியில் இருந்து சாலையூருக்கு செல்லும் பிரதான சாலையில் வருகிற 19-ந் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ளது. அதற்காக அங்குள்ள சுமார் 10 ஏக்கர் நிலப்பரப்பில் மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது. போட்டி நாளன்று 500 காளைகள் பங்கேற்க விழா குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

News March 28, 2025

நாமக்கல்: கொளுத்தும் வெயிலில் செய்யக்கூடாதது என்ன?

image

நாமக்கல்லில் வெப்ப நிலை அதிகரித்து வருவதால் ▶️காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். ▶️வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும். ▶️தேநீர், காபி மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும். இதை உங்க உறவினர்களுக்கு Share பண்ணுங்க.

News March 28, 2025

நாமக்கல்: இன்று 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடக்கம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று தொடங்கும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை 19,342 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனர். இதற்காக 92 மையங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. இதற்கிடையே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் 94 முதன்மை கண்காணிப்பாளர்கள், 24 வழித்தட அலுவலர்கள், 6 வினாத்தாள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் மற்றும் 1,698 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட உள்ளனர்.

News March 28, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை, கறிக்கோழி விலை நிலவரம்

image

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக இருந்து வந்த நிலையில், நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புகுழு கூட் டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 425 காசுகளாக உயர்ந்துள்ளது. கறிக்கோழி ரூ.101-க்கும், முட்டைக்கோழி கிலோ ரூ.77-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை செய்யப்படவில்லை.

News March 28, 2025

டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி

image

கோனூர் அருகே கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் செங்கோட்டுவேலு (50).இவர் கடந்த 25-ந் தேதி தனது டூவீலரில் கோனூர் கந்தம்பாளையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி அவர் தவறி கீழே விழுந்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை, அருகில் இருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.பின்பு மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்

News March 27, 2025

நாமக்கல்லில்: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம் 

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் நான்கு காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிப்பார். அதன்படி இன்று இரவு வந்து பணி அலுவலர்கள் விவரம் நாமக்கல் – கோமதி (9498167680), ராசிபுரம் நடராஜன் (9442242611), திருச்செங்கோடு -மகாலட்சுமி (7708049200), வேலூர்- ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News March 27, 2025

நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் நாமக்கல் கிளையின் கூட்டம், நாமக்கல்லில் இன்று 27ஆம் தேதி நடைபெற்றது. இந்த குழு கூட்டத்தில் ஒரு முட்டைக்கு ரூ.10 காசுகள் உயர்த்தப்பட்டு ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ4.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று 26 ஆம் தேதி ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.15 ஆக இருந்து, தற்போது பத்து காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

News March 27, 2025

முட்டை கொள்முதல் விலையில் மாற்றமில்லை

image

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (27-03-2025) நிலவரப்படி முட்டை பண்ணை கொள்முதல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல் ரூ.4.15 காசுகளாக நீடித்து வருகிறது. கடந்த 20-ஆம் தேதி முட்டை கொள்முதல் விலை ரூ.4.15 ஆக நிர்ணயப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக முட்டை விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படாமல், அதே விலையில் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

News March 27, 2025

நாமக்கல்: கோடைகால நீச்சல் பயிற்சி முகாம்!

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் நாமக்கல் மாவட்ட  கிளை சார்பில், கோடை கால நீச்சல் பயிற்சி முகாம் வருகிற ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. நீச்சல் பயிற்சி 12 நாட்களுக்கு கட்டணம் ரூ.1,416. நீச்சல் கற்றுக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் நடைபெறும் 12 நாட்கள் பயிற்சி முகாம் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. விபரங்களுக்கு 8220310446 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News March 27, 2025

நாமக்கல் மாவட்ட வானிலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்றும் (வியாழக்கிழமை), நாளையும் (வெள்ளிக்கிழமை) நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், வானம் தெளிவான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்தவரையில் குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும், அதிகபட்சமாக 100.4 டிகிரியாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!