India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமகிரிப்பேட்டை பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது இதன் பேரில் விரைந்து சென்ற காவல்துறையினர். நாமகிரிப்பேட்டை ஆர் புதுப்பாளையம். வெள்ளகல்பட்டி ஆகிய பகுதியில் ஆய்வு செய்து புகையிலை பொருட்கள் விற்ற மூன்று கடைக்கு போலீசார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறையினர் சீல் வைத்து அந்த கடைகளுக்கு 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம பஞ்சாயத்துகளில் நாளை (அக்.2) காலை 10 மணிக்கு கிராம சபை கூட்டம் நடக்கிறது. இதில், கிராம பஞ். நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும், துாய்மையான குடிநீர் வினியோகத்தினை உறுதி செய்வது பற்றியும் விவாதிக்கப்படுகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு, இதர பொருட்கள் குதித்தும் விவாதிக்கப்படுகிறது” என நாமக்கல் கலெக்டர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதன்கிழமை இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் மூடப்பட வேண்டும். மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை திறந்தாலோ, மறைமுகமாக விற்பனை செய்தாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் – டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2-ம் ஆண்டு பிகாம் பாடப்பிரிவு மாணவி ஶ்ரீநிதி, 19-வயதுக்குட்பட்டோர் மகளிர் டி-20 கிரிக்கெட் அணியில் தமிழ்நாடு மாநிலத்தின் சார்பில் விளையாடுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அக்டோபர் 1 முதல் 8 வரை ஹரியானா மாநிலம் – குருகிராம் நகரில் நடைபெறும் தேசிய அளவிலான 19 வயதுக்குட்பட்டோர் மகளிர் டி 20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் மேட்டுப்பட்டியில் சிவ ஆலயம் அமைந்துள்ளது. இந்த சிவ ஆலயத்தில் இன்று காலை ஆறு முப்பதிலிருந்து ஆறு 45 வரை கால் மணி நேரம் மூலவர் சிவபெருமான் மீது சூரிய ஒளி படும் அற்புத நிகழ்வு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மூலவர் சிவனையும் இந்த அதிசய நிகழ்வினை தரிசனம் செய்தனர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
நாமக்கல் உழவர் சந்தையானது கோட்டை சாலையில் அமைந்துள்ளது இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம் தக்காளி 40 ரூபாய் கத்திரிக்காய் 60 வெண்டைக்காய் 24 ரூபாய் புடலங்காய் 24 பீர்க்கங்காய் 48 எலுமிச்சம்பழம் 100 ரூபாய் பெரிய வெங்காயம் 64 ரூபாய் சின்ன வெங்காயம் 40 ரூபாய் இஞ்சி 155 ரூபாய். என விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஏராளமான பொதுமக்கள் வாங்கி செல்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் காலாண்டு நுகர்வோர் குறைதீர் கூட்டம் இன்று 30/09/2024 திங்கட்கிழமை மாலை 4.30 மணிக்கு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் நடைபெறுகிறது. இதில் நுகர்வோர்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்து தீர்வு பெறலாம் என மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார் .
தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி தேர்வுகளுக்கு, நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் வியாழக்கிழமை (3/10/2024) காலை 10 மணி முதல் மதியம் 1:30 வரை இலவச பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது. இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04286-222260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த மூன்று நாட்கள் நிலவும் வானிலையில், இன்று 40 மி.மீட்டரும், நாளை (திங்கட்கிழமை) 18 மி.மீட்டரும், நாளைமறுநாள் (செவ்வாய்க்கிழமை) 14 மி.மீட்டரும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 95 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 75.2 டிகிரியாகவும் இருக்கும் என கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புரட்டாசி மாதம் பிறந்து இரண்டாவது சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டுள்ளது. நாமக்கல்லில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.05 என்ற அளவில் விற்பனை செய்யப்பட்டது. புரட்டாசி மாதத்தில் முட்டை நுகர்வு சற்று குறையும் இதனால் முட்டை விளையும் குறையும் என கருதப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களாகவே ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து ரூ 5.05 பைசா என்ற அளவில் மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
Sorry, no posts matched your criteria.