Namakkal

News October 7, 2024

அரசு ஊழியர்கள் தர்ணா போராட்டம்

image

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் நாளை 8ம் தேதி செவ்வாய்க்கிழமை மாலை நாமக்கல் பூங்கா சாலையில் தர்ணா போராட்டம் மாவட்டத் தலைவர் ராஜேந்திர பிரசாத் தலைமையில் நடைபெற உள்ளது. புதிய பென்ஷன் திட்டத்தை எடுத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த போராட்டத்தின் போது முன்வைக்கப்பட உள்ளது. சங்கத்தைச் சேர்ந்த பலர் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.

News October 7, 2024

நாமக்கல்லில் 5 வயது சிறுமி சாதனை

image

நாமக்கல்: குமாரபாளையம் அருகே, பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்த தம்பதியர் பிரவீன்குமார் – சுஜிதா. இவர்களது மகள் கிருஷ்மிதா (5) உலக சாதனைக்காக, யோகா நிகழ்ச்சி நடத்தினார். இதனை முன்னாள் அமைச்சர் தங்கமணி துவக்கி வைத்தார். இதையடுத்து, 15 நிமிடத்தில், 75 யோகாசனங்கள் செய்து சிறுமி உலக சாதனை படைத்தார். இது, ஹைரேன்ஜ் புக் அப் ரெக்கார்ட்ஸ் எனும் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது.

News October 6, 2024

நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் உள்ளது ஆட்சியர் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் பருவமழை காரணமாக நோய்தொற்று காணப்பட்டது. குறிப்பாக நாமக்கல் மாநகராட்சி இராசிபுரம் நாமகிரிப்பேட்டை திருச்செங்கோடு பகுதிகளில் நோய்தொற்று காணப்பட்டது. நோய்த்தொற்று காணப்பட்ட பகுதிகளில் குழு அமைக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் தொடர் நடவடிக்கையால் தற்போது நோய்தொற்று கட்டுக்குள் உள்ளது. பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.

News October 6, 2024

நாமக்கல்லில் முட்டை விலை நிலவரம்

image

புரட்டாசி மாதம் பிறந்து மூன்றாவது சனிக்கிழமை முடிவுற்றுள்ளது இந்நிலையில் நாமக்கல்லில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ5.05 என்ற அளவில் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது புரட்டாசி மாதத்தில் முட்டை நுகர்வு குறையும் என்பதால் அதன் விளையும் குறையும் என கருதப்பட்டது ஆனால் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தொடர்ந்து ரூ 5.05 என்ற அளவிலேயே மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.

News October 6, 2024

நாமக்கல் மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கிய ஆளுநர்

image

திரு அருட்பா உரைநடை நூல் வெளியீட்டு விழா தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையேற்று சிறப்பித்தார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக வள்ளலாரின் கொள்கைகள் மற்றும் நோக்கங்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது. இதில் நாமக்கல் கேஎஸ்ஆர் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவிகளுக்கு ஆளுநர் சான்றிதழ்களை வழங்கினார்.

News October 6, 2024

நாமக்கல்: கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்றைய (06-10-2024) நிலவரப்படி கறிக்கோழி கிலோ பண்ணை விலை (உயிருடன்) ரூ. 104க்கும், முட்டை கோழி கிலோ ரூ.107க்கும் விற்பனையாகி வருகின்றன. மேலும், முட்டை விலையை பொறுத்தவரையில் ஒரு முட்டை ரூ.5.05 காசுகளாக நீடித்து வருகிறது. புரட்டாசி மாதம் தொடக்கம் முதலே விலைகளில் மாற்றம் எதுவும் இன்றி நீடித்து வருகிறது.

News October 6, 2024

விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் ஆட்சியர் தகவல்

image

நாமக்கல் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிரில் இயற்கை முறையில் சாகுபடியில் சிறந்து விளங்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் 2023 – 24 ம் ஆண்டில் மாநில அளவில் சிறந்த விவசாயிகளை தேர்வு செய்து சான்றிதழுடன் ஊக்கத் தொகையாக முதல் பரிசு ரூ1,00,000, 2ம் பரிசு ரூ60,000, 3ம் பரிசு ரூ40,000 வழங்கப்பட உள்ளது என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள அறிக்கையின் வாயிலாக தெரிவித்துள்ளார்

News October 5, 2024

சட்ட விரோதமாக தங்கியிருந்த மூவர் கைது..!

image

நாமக்கல் அருகே சட்ட விரோதமாக தங்கி இருந்து பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் ஒருவருக்கு மட்டும் முறையான பாஸ்போர்ட் இருந்ததால், மற்ற 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். “சேந்தமங்கலம் சாலையில் விசாணம் என்ற பகுதியில் வாடகை வீடு எடுத்து தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். இவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

News October 5, 2024

விவசாயிகளுக்கு மண்வள அட்டை வழங்கல் முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் மண்பரிசோதனை செய்து மண் வள அட்டை வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா். முகாம் நடைபெறும் கிராமம் – அக்.9 நாமக்கல் – திண்டமங்கலம், அக். 16 எருமப்பட்டி- கோனாங்கிப்பட்டி, அக். 23 பரமத்தி-அா்த்தனாரிபாளையம், அக்.30 ராசிபுரம்-காக்காவேரி. விவசாயிகள் மண் மாதிரிகள், நீா் மாதிரிகளை நேரடியாக வழங்கி ஆய்வு செய்து மண்வள அட்டை பெறலாம் என குறிப்பிட்டார் ‌.

News October 5, 2024

நாமக்கல் மாவட்டத்தில் பலத்த மழை

image

நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை 6 மணி வரை பதிவான மழை அளவு விபரம். எருமப்பட்டி 40 மி.மீ, குமாரபாளையம் 1.20 மி.மீ, மங்களபுரம் 20.80 மி.மீ, மோகனூர் 31 மி.மீ, பரமத்திவேலூர் 65.50 மி.மீ, புதுச்சத்திரம் 17 மி.மீ, ராசிபுரம் 10 மி.மீ, சேந்தமங்கலம் 97 மி.மீ, திருச்செங்கோடு 74 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் 34 மி.மீ, கொல்லிமலை செம்மேடு 84 மி.மீ என மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 562.50 மிமீ மழை பதிவாகி உள்ளது.

error: Content is protected !!