Namakkal

News May 3, 2024

நாமக்கல்: வாடிக்கையாளர் நலனுக்காக நிழல் வலை 

image

அக்னி வெயில் 4ம் தேதி தொடங்குகிறது. அதிலிருந்து பாதுகாத்து கொள்ள நாமக்கல் நகர மக்கள் தயாராகி வருகின்றனர்.இதனை ஒட்டி நாமக்கல் கடை வீதியில் வணிகர்கள் தங்கள் கடைகளுக்கு முன்பாக தென்னை ஓலையில் வேயப்பட்ட படலங்கள் மற்றும் நிழல் விலைகளையும் அமைத்து வருகின்றனர்.இதனால் தங்கள் கடைக்கு வரும் பொதுமக்கள் வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதால் பொது மக்களும் வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

News May 3, 2024

நாமக்கல் எஸ்பி அறிக்கை வெளியீடு

image

சைபர் கிரைம் குற்றவாளிகளை பொதுமக்கள் அடையாளம் கண்டு கவனமாக செயல்பட வேண்டும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்.பி. ராஜேஷ்கண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார். மேலும், பரவலாக சைபர் கிரைம் குற்றங்கள் நடைபெறுகிறது. போதிய விழிப்புணர்வு இல்லாமல் இதுபோன்ற குற்றவாளிகளிடம் ஏமாந்து விடுகின்றனர். அவர்களை பொதுமக்கள் அடையாளம் கண்டு தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

News May 3, 2024

நாமக்கல்: 6,120 போ் நீட் தேர்வு எழுதுகின்றனா்!

image

நீட் தோ்வு மே 5 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுதுகின்றனா். தோ்வுக்காக 11 மையங்கள் தயாா் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மையத்திலும் 5 போலீசார் வீதம் கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. ஏற்பாடுகளை தேசிய தோ்வு முகமையின் நாமக்கல் மாவட்ட குழுவினா் செய்து வருகின்றனா்.

News May 3, 2024

இவர்கள் குறித்து தெரிந்தால் உடனே தெரிவிக்கலாம்!

image

சேந்தமங்கலத்தில் டாஸ்மாக் ஊழியர் பனரோஜா மற்றும் 3 பேரை, பைக்கில் முகத்தை மூடிக்கொண்டு வந்த மர்ம நபர்கள் 6 பேர் அரிவாளால் தாக்கினர். இந்த சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 6 குழுக்களை அமைக்கப்பட்டது. இந்நிலையில் குற்றவாளிகளின் போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர். தகவல் தெரிந்தால் போலீசாருக்கு உடனடியாக தெரிவிக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

News May 3, 2024

நாமக்கல்லில் நடமாடும் மண் பரிசோதனை முகாம்

image

நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் மே 9ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. அந்த வகையில், முகாமானது, 9ஆம் தேதி மல்லசமுத்திரம் ஒன்றியம் செண்பகமாதேவி, 16ஆம் தேதி வெண்ணந்தூா் ஒன்றியம் அக்கரைப்பட்டி, 23ஆம் தேதி சேந்தமங்கலம் ஒன்றியம் பள்ளம்பாறை, 30ஆம் தேதி கபிலா்மலை ஒன்றியம் இருக்கூா் ஆகிய கிராமங்களில் நடைபெறவுள்ளது. விவசாயிகள் தங்களது நிலங்களின் மண், நீா் மாதிரிகளை ஆய்வு செய்து பயனடையலாம்.

News May 3, 2024

நாமக்கல் கலெக்டர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தலைமையில் நேற்று(மே 2) மாவட்ட கூட்டரங்கில் முதலமைச்சரின் நான் முதல்வன் திட்டம் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இத்திட்டத்தில் வளர்ந்துவரும் தொழில்துறையில் மாணவர்கள் தங்களது தனித்திறமைகளை வளர்த்துக்கொள்வது எப்படி, இலவச திறன் பயிற்சிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

News May 2, 2024

நாமக்கல்: பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம்

image

நாமக்கல் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று மாலை மாவட்ட அளவிலான தீத்தடுப்பு மற்றும் தொழிற்சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.தொடர்ந்து கோடை வெயிலால் மாவட்டத்தில் சில இடங்களில் வெயிலின் தாக்கத்தின் காரணமாக தீ விபத்தும் நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ளும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

News May 2, 2024

நாமக்கல் மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பேற்பு

image

நாமக்கல் மாவட்ட கல்வி பொறுப்பு அலுவலராக மரகதம் இன்று நாமக்கலில் தனது அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாவட்ட கல்வி அலுவலர் மரகதத்திற்கு நாமக்கல்லைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் தன்னார்வலரும் பசுமை தில்லை சிவக்குமார் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது துறை அலுவலர்கள் தன்னார்வலர்கள் பலர் உடனிருந்தனர்.

News May 2, 2024

நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ,வருவாய் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News May 2, 2024

நாமக்கல் மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

வடமாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த வெப்ப அலைக்கான ஆரஞ்சு அலர்ட் தற்போது முதன்முதலாக தமிழகத்தில் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி நாமக்கலுக்கு இன்று (மே.02) ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றனர்.