Namakkal

News May 6, 2024

நாமக்கல்லில் 60 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி

image

நாமக்கல் மாவட்டத்தில் மார்ச் 2024 -ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வில் 197 பள்ளிகளை சார்ந்த 8, 413 மாணவர்களும், 8, 847 மாணவிகளும் என மொத்தம் 17, 260 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் 16, 586 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இவ்வாண்டு 60 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. இதில் அரசுப் பள்ளிகளில் 14 பள்ளிகள் நூற்றுக்கு நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

News May 6, 2024

நாமக்கல் அருகே கோவிலில் பிரதோஷ வழிபாடு

image

ராசிபுரம் அடுத்துள்ள அண்ணாமலை பட்டி ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவிலில் சித்திரை மாத பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பகுதிகளைச் செல்ல ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

News May 5, 2024

நாமக்கல்லில் சுட்டரிக்கும் வெயில்

image

தமிழ்நாட்டில் கோடை வெயிலின் உச்சமான அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் நேற்று தொடங்கியது. கத்திரி வெயில் வரும் 28ஆம் தேதி வரை நீடிக்கும் நிலையில், வரும் நாட்களிலும் வெயில் வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் 40.5 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

News May 5, 2024

நாமக்கல்: ஈஷா யோகா மையம் சார்பில் பயிற்சி முகாம் 

image

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் “ஈஷா யோகா மையம் சார்பில், யோகா பயிற்சி முகாம் மே.8ல் துவங்கி ஏழு நாட்களுக்கு ராசிபுரத்தில் நடைபெறுகிறது. ராசிபுரம் பட்டணம் சாலை சரவண மஹால் திருமண மண்டபத்தில் நடைபெறும் இம்முகாம் காலை 6 மணி முதல் 8.30 மணிவரையும் , பின்னர் மாலை 6 மணி முதல் 8.30 மணிவரையும் இரு பிரிவுகளாக இப்பயிற்சி முகாம் மே.14 வரை நடைபெறுகிறது.

News May 5, 2024

நாமக்கல்: டயர் ரீட்ரேடிங் விலை உயர்வு

image

ரீட்ரேடிங் தொழிலுக்கு தேவையான இயற்கை ரப்பர் மூலப்பொருட்கள் விலை உயர்ந்துள்ளது இந்த விலை உயர்வு காரணமாக டயர் ரீட்ரேடிங் தொகை சுமார் 15% அதிகரித்துள்ளது இந்த விலை உயர்வை கருத்தில் கொண்டு லாரி உரிமையாளர் ரீட்ரேடிங் விலை உயர்வுக்கு ஆதரவு தர தமிழ்நாடு டயர் ரீட்ரேடிங் உரிமையாளர் சங்கம் சார்பாக சங்கத்தின் நிர்வாகிகள் ராஜ்குமார் வரதராஜ் உள்ளிட்டோர் கேட்டு கொண்டுள்ளனர்

News May 5, 2024

நாமக்கல் ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

24-25ம் வருடத்தில் மே மாதத்திற்கு நடமாடும் மண் பரிசோதனை நிலையத்தின் மூலம் சிறப்பு மண் நீர் பரி சோதனை முகாம் நடைபெற உள்ளது. 9.5.24 மல்லசமுத்திரம், 16.05.24 வெண்ணந்தூர், 23.05.24 சேந்தமங்கலம், 30.05.24 கபிலர்மலை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. அதனைப் பயன்படுத்தி விவசாயிகள் தங்களது நிலங்களின் மண் மற்றும் நீர் மாதிரிகளை ஆய்வு செய்து பயனடையுமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் ச.உமா கேட்டுக் கொண்டுள்ளார்

News May 4, 2024

நாமக்கல்லில் பக்தர்கள் தரிசனம்

image

நாமக்கல் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயத்தில் சித்திரை மாத சனிக்கிழமை தினத்தை முன்னிட்டு அதிகாலை நடைதிறக்கப்பட்டு 10 மணியளவில் 1008 வடைமாலை, பின்னர் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரமாக தங்ககவசம் சாற்றப்பட்டு மகாதீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.

News May 4, 2024

கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.3 உயர்வு

image

நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ( உயிருடன்) கிலோ ரூ.124-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.3 உயர்த்தப்பட்டு, ஒரு கிலோ கறி கோழியின் விலை ரூ.127 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனிடையே நாமக்கல் மண்டலத்தில் ஒரு கிலோ முட்டை கோழி ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவற்றின் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

News May 3, 2024

நாமக்கல் மாவட்டத்தில் மழை

image

மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி அடுத்த 3 மணி நேரத்தில் (இரவு 10 மணி வரை) நாமக்கல் மாவட்டத்தில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News May 3, 2024

நாமக்கல்: தந்தையை தொடர்ந்து மகளும் பலி

image

நாமக்கல்லில் கடந்த 30 ஆம் தேதி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட முதியவர் சண்முகநாதன் மற்றும் அவரது மகள் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையில் நதியாவின் மகன் பகவதி விஷம் வைத்தது தெரியவந்தது. இதில் முதியவர் சண்முக நாதன் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது நதியாவும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பெற்ற மகனே தாய்க்கு விஷம் வைத்து கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.