Namakkal

News December 29, 2024

நாமக்கல் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

image

தமிழ்நாடு அரசால் Naan Mudhalvan Finishing School என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் நோக்கமானது 18-35 வயது வரை உள்ள வேலையில்லாத இளைஞர்களின் வேலைவாய்ப்பு மற்றும் திறன்களை மேம்படுத்துவதே ஆகும். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்கள், ]மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தில் நேரிலோ 7904111101, 9080242036, 948774509 தொடர்பு கொள்ளலாம்.

News December 29, 2024

முத்தங்கியில் காட்சி தந்த நாமக்கல் ஆஞ்சிநேயர்

image

நாமக்கல் நகர் மையப் பகுதியில் உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மார்கழி மாத ஞாயிற்க்கிழமை தினத்தை முன்னிட்டு இன்று அதிகாலை நடைதிறக்கப்பட்டு 11 மணி அளவில் பஞ்சாமிர்தம், தேன், பால், தயிர், மஞ்சள், சந்தனம், சொர்ணம் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபம் காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் பெற்றனர்.

News December 29, 2024

நாமக்கல் மாவட்டத்தில் 8000 ஹெக்டரில் நெற்பயிர் சாகுபடி

image

நாமக்கல் மாவட்டத்தில் 2024 ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் வரை நெல் 8219 எக்டர், சிறுதானியங்கள் 77791 எக்டர், பயறு வகைகள் 11226 எக்டர், எண்ணெய் வித்துக்கள் 29376 எக்டர், பருத்தி 1759 எக்டர் மற்றும் கரும்பு 8378 எக்டர் என மொத்தம் 136749 எக்டரில் வேளாண் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. என நாமக்கல் மாவட்டம் நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 29, 2024

நாமக்கல் மாவட்டத்தில் கூடுதல் மழை

image

நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு இயல்பு மழை அளவு 716.54 மி.மீ. தற்போது வரை (24.12.2024) 889.2 மி.மீ.மழை பெறப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் முடிய இயல்பு மழையளவை விட 172.66 மி.மீ. அதிகமாக மழை பெறப்பட்டுள்ளது என நாமக்கல் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பின் வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

News December 29, 2024

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் முக்கிய தகவல்

image

குழந்தை திருமணம் இல்லாத மாவட்டமாக நாமக்கல்லை உருவாக்க பொதுமக்கள் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆட்சியர் உமா அறிவுறுத்தி உள்ளார். குழந்தை திருமணம் நடைபெறுவது தெரிய வந்தால் உடனடியாக சைல்டுலைன் எண்ணான 1098 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். மேலும் மாவட்டத்தில் குழந்தை திருமணங்கள் நடைபெறாமல் தடுக்க அனைவரும் உறுதி ஏற்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News December 29, 2024

நாமக்கல்லில் பொது மக்கள் குறைதீர் நாள் கூட்டம்

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக நாளை 30ம் தேதி திங்கட்கிழமை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர். ஆட்சியர் உமா பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற உள்ளார்.

News December 29, 2024

நாளைய மின்தடை பகுதிகள் அறிவிப்பு

image

நாமகிரிப்பேட்டை துணை மின் நிலையத்தில் நாளை (திங்கட்கிழமை) மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது. மின்தடை செய்யப்படும் பகுதிகள்: நாமகிரிப்பேட்டை, குரங்காத்துப்பள்ளம், கோரையாறு, மூலப்பள்ளிப்பட்டி, தண்ணீர் பந்தல்காடு, அரியாக்கவுண்டம்பட்டி, பழனியப்பனூர், பச்சடையாம்பாளையம், தொ.ஜேடர்பாளையம், வெள்ளக்கல்பட்டி, புதுப்பட்டி

News December 29, 2024

கொல்லிமலையில் மர்ம விலங்கு நடமாட்டம்

image

கொல்லிமலையில், 200க்கும் மேற் பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில், ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்கள் விவசாயம், கால் நடைகளை வளர்த்து பிழைப்பு நடத்தி வருகின்றனர்.மேலும் அடிக்கடி மர்ம விலங்கு கடித்து ஆடுகள் பலியாவது வாடிக்கையாக இருந்து வருகிறது.வனத்துறையினர் ஆடுகளை கடித்து வரும் மர்ம விலங்கை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

News December 29, 2024

நாமக்கல் உழவர் சந்தை நிலவரம்

image

நாமக்கல் உழவர் சந்தையில் இன்று 29ம் தேதி காய் கனி பூ விலை நிலவரம் கத்தரி ரூ 48 தக்காளி ரூ 24 முருங்கை ரூ 150 வெண்டை ரூ 24 தேங்காய் ரூ 54 சின்னவெங்காயம் ரூ 60 பெரியவெங்காயம் ரூ 42 பீன்ஸ் ரூ 66 கேரட் ரூ 65 பீட்ரூட் ரூ 80 உருளை ரூ 50 இதனிடையே கடந்த 21ம் தேதி ஒரு கிலோ அவரை ரூ100க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த ஒரு வாரத்தை தாண்டி இன்று 29ந் தேதி வரை ஒரு கிலோ அவரை ரூ110க்கு விற்பனை செய்யப்பட்டது.

News December 28, 2024

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று 28ஆம் தேதி நடைபெற்றது இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆக விலை நிர்ணயிக்கப்பட்டது. ரூ 5.50 ஆக இருந்த முட்டை இக்கூட்டத்தில் 20 காசுகள் குறைக்கப்பட்டது. குளிர் பனி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 5.30 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

error: Content is protected !!