Namakkal

News February 25, 2026

நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை kardvac.tnpol@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க

News February 25, 2026

நாமக்கல்லில் லஞ்சம் கேட்டால்.. உடனே CALL!

image

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் குறித்து பொதுமக்கள் எந்தவித தயக்கமும் இன்றி புகார் அளிக்கலாம். லஞ்சம் தொடர்பான புகார்களை kardvac.tnpol@tn.gov.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விரிவாக எழுதி அனுப்பலாம். அல்லது 04286- 281331 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டு உங்கள் புகாரைப் பதிவு செய்யலாம். ஊழலற்ற நிர்வாகத்தை உறுதி செய்ய அனைவருக்கும் இதை ஷேர் பண்ணுங்க

News February 25, 2026

நாமக்கல்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

image

நாமக்கல்லில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)

News February 25, 2026

நாமக்கல்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 வேண்டுமா?

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 25, 2026

நாமக்கல்லில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்

image

நாமக்கல் மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர்கள் நலன் கருதி அனைத்து எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவன மேலாளர்கள், எரிவாயு முகவர்கள், விநியோகஸ்தர்கள், எரிவாயுநுகர்வோர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர்களுடன் எரிவாயு நுகர்வோர்கள் குறைதீர் கூட்டம் நாளை 26.02.2026 வியாழன் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாமக்கல் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் பிற்பகல் 4.00 மணிக்கு நடைபெற உள்ளது.

News February 25, 2026

நாமக்கல்: இனி உங்க Whatsapp-ல் ஆதார் அட்டை!

image

நாமக்கல் மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது இங்கே <>கிளிக்<<>> செய்து உங்களது டிஜிட்டல் ஆதார் கார்டை ஈசியாக டவுன்லோட் செய்யலாம். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News February 25, 2026

நாமக்கல்: ரத்த வெள்ளத்தில் மூதாட்டி சடலம் மீட்பு

image

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் ரத்தினம்மாள் (87). அப்பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை கதவு வெளிப்புறமாக பூட்டி இருப்பதை பார்த்த உறவினர்கள் கதவை உடைத்து பார்த்த போது கட்டிலுக்கு அடியில் ரத்தினம்மாள் ரத்தவெள்ளத்தில் சடலமாக கிடந்தார். அவரது கழுத்து பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் குத்தப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து திருச்செங்கோடு போலீசார் விசாரனை நடத்துகின்றனர்.

News February 25, 2026

நள்ளிரவில் வீடுகளின் கதவுகளை தட்டிய நபர் கைது

image

பள்ளிபாளையம் ஒன்றியம், ஆலம்பாளையம் டீச்சர்ஸ் காலனி பகுதியில் நேற்று நள்ளிரவில் வீடுகளின் கதவுகளை தட்டி மர்ம நபர் தொல்லை கொடுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது குறித்து எஸ்ஐ ரஞ்சித்குமார் விசாரணை நடத்தி, ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (38) என்ற வாலிபரை கைது செய்தார். விசாரணையில் அவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என தெரிந்ததையடுத்து, சென்னையில் உள்ள அவரது அண்ணனை வரவழைத்து ஒப்படைத்தனர்.

News February 25, 2026

நாமக்கல் மாவட்ட கலெக்டர் முக்கிய அறிவிப்பு!

image

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் பிப்ரவரி 27-ம் தேதி காலை 10 மணியளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் துர்கா மூர்த்தி தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் வேளாண் வல்லுநர்களின் தொழில்நுட்ப விளக்க உரைகள் இடம்பெறவுள்ளன. விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதுடன், அது தொடர்பான மனுக்களையும் ஆட்சியரிடம் வழங்கிப் பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

News February 25, 2026

நாமக்கல்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

image

நாமக்கல் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இரவு நேர காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்று (பிப்ரவரி 24) இரவு முதல் இன்று காலை வரை பணியில் உள்ள அதிகாரிகளின் தொடர்பு எண்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவசர காலங்களில் பொதுமக்கள் அந்தந்த பகுதி ரோந்து அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

error: Content is protected !!