Namakkal

News January 2, 2025

நாமக்கல்: TNPSC தேர்வுக்கு பயிற்சி

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு, தமிழ்நாடு அரசுபணியாளர் தேர்வாணையம் நடத்தும் TNPSC Group-II & IIA தேர்வுகளுக்கு, தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பயன்பெற விருப்பமுள்ளவர்கள் www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மருத்துவர் உமா தெரிவித்துள்ளார்.

News January 2, 2025

பொங்கலுக்கு தயாராகும் நாமக்கல் சந்தை

image

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாமக்கல் உழவர் சந்தையில் பொங்கலுக்கு தேவையான கரும்பு, விரளிமஞ்சல் போன்றவற்றை விவசாயிகள் தயார்படுத்தி வருகின்றனர். கரும்பு கட்டை வண்டியில் வைத்து கொண்டுவந்து அவற்றை வெட்டி விற்பனைக்கு தயார் செய்கின்றனர். அதேபோல மண்பானையும் விற்பனைக்காக வர்ணம் பூசி தயார் செய்து வருகின்றனர். இப்போதே உழவர்சந்தை களைகட்ட தொடங்கிவிட்டது.

News January 2, 2025

நாமக்கல்  இரயில் பயணிகள் கவனத்திற்கு

image

நாமக்கல் மாவட்டம், நாமக்கல், 01.01.2025 புதன்கிழமை முதல் நாமக்கல் இரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரயில்களின் கால அட்டவணையை இரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது. எனவே இப்பகுதி ரயில் பயணிகள் இந்த கால அட்டவணையை பயன்படுத்தி தங்களின் ரயில் பயணம் சிறப்பாக அமைத்துக் கொள்ள ரயில்வே நிர்வாகம் மூலம் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

News January 2, 2025

நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு

image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து போடிநாயக்கனூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில் நாமக்கல்லில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு போடிக்கு புறப்படும் விரைவு ரயில்(20601) அதிகாலை 3.54 மணிக்கு நாமக்கல்லில் நிற்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 2, 2025

நாமக்கல் மாணவ மாணவிகளுக்கு முக்கிய அறிவிப்பு

image

தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளினை சிறப்பிக்கும் வகையில் 4ஆம் தேதி காலை 6 மணிக்கு அண்ணா மிதிவண்டி போட்டிகள் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக நுழைவுவாயில் முன் துவங்கி பள்ளி மாணவ மாணவியர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நாமக்கல் மாவட்டப் பிரிவு மூலமாக மிதிவண்டி போட்டிகள் நடத்தப்படவுள்ளது. நாமக்கல் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News January 2, 2025

மோகனூரை நகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை

image

மோகனூா் பேரூராட்சி (ம) நான்கு கிராம ஊராட்சிகளை இணைத்து, மோகனூா் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மோகனூா் பேரூராட்சி, குமாரபாளையம், பேட்டபாளையம், ராசிபாளையம், மணப்பள்ளி ஊராட்சி ஆகியவை இணைந்து மோகனூா் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. குறைந்த விளைநிலங்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டும், குடியிருப்புகளின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாலும் நகராட்சி அந்தஸ்து வழங்கப்பட்டது

News January 2, 2025

நாமக்கல்லில் இன்றைய முட்டை விலை நிலவரம்

image

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கல்லில் இன்று நடைபெற்றது. இக்குழு கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. மழை, பனி, குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது இருப்பினும், முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல், தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ.5.30 ஆகவே நீடிக்கிறது.

News January 1, 2025

நாமக்கல்: இன்றைய தலைப்புச் செய்திகள்!

image

➤ நாமக்கல் எஸ்பி கேக் வெட்டி கொண்டாட்டம் ➤ நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தங்க கவச அலங்காரம் ➤ நாமக்கல் எம்பி புத்தாண்டு வாழ்த்து ➤ பெருமாள் கோவிலில் 1008 தீபம் ஏற்றி வழிபாடு ➤ பொதுமக்களுடன் புத்தாண்டை கொண்டாடிய போலீசார் ➤ நாமகிரிப்பேட்டையில் மஞ்சள் ஏலம் ரத்து ➤ நாமக்கல்லில் பருத்தி ரூ.110 லட்சம் ஏலம் ➤ பள்ளிபாளையம் காவேரி ஆற்றில் சாயக்கழிவுகள்

News January 1, 2025

நாமக்கல்: இன்றைய இரவு ரோந்து அதிகாரிகள் விவரம்

image

நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவலர்களை இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (01/01/2025) இரவு ரோந்து பணி அலுவலர்கள் விவரம்: நாமக்கல் – லக்ஷ்மணதாஸ் (9443286911), ராசிபுரம் – நடராஜன் (9442242611), திருச்செங்கோடு – ரங்கசாமி (9487539119), வேலூர் – சீனிவாசன் (9498176551) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.

News January 1, 2025

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புத்தாண்டு வாழ்த்து 

image

நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா, இஆப தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணா, பாராளுமன்ற மக்களவை உறுப்பினர்கள் மாதேஸ்வன், .பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் .பெ.இராமலிங்கம், .கே.பொன்னுசாமி, மாநகராட்சி மேயர் து.கலாநிதி, துணை மேயர் செ.பூபதி ஆகியோர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு உயர் அதிகாரிகளுடன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் இன்று தெரிவித்துக்கொண்டனர்.

error: Content is protected !!