India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே.., தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் கீழ் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து நாமக்கல்லில் 37 நாட்கள் கொண்ட இலவச கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி ஆகஸ்ட் 3 ஆம் வாரம் முதல் தொடங்கியுள்ளது. இந்த இலவச பயிற்சிக்கு <

நாமக்கல்லில் இன்று (ஆகஸ்ட் 12) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுக்கூட்டத்தில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டது. இதன்படி, ஒரு முட்டையின் விலை ரூ.4.90 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நேற்று (ஆகஸ்ட் 11) இதன் விலை ரூ.4.85 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நாமக்கல், கொல்லிமலை அருகே வாழவந்திநாடு காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாரளாக மோகன் (வயது 54) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் மீது கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்தார். இதையடுத்து நாமக்கல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மோகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் அவரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாமக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், வருகிற ஆகஸ்ட் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஆர்வமுள்ள அனைவரும் இந்த முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் துர்கா மூர்த்தி தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு 04286 222260 எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வேலை தேடும் அனைவருக்கும் இதை SHARE செய்து உதவுங்க!

நாமக்கல் மாவட்டத்திலுள்ள 310 கிராம பஞ்சாயத்துக்களிலும், வருகிற ஆக.15ஆம் தேதி சுதந்திர தினத்தன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், கிராம பஞ்சாயத்து நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம பஞ்சாயத்து அறிக்கை வாசித்தல், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் உள்ளிட்டவை ஆலோசிக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

நாமக்கல் வழியாக செல்லும் 20671/20672 மதுரை – பெங்களூரூ – மதுரை வந்தேபாரத் ரயிலில் நாளை(ஆக.13) புதன்கிழமை முதல் திங்கள்கிழமை வரை இந்த ரயில்கள் நாமக்கலில் புறப்படும் நேரம் (செவ்வாய் தவிர மற்ற நாட்கள்) காலை 8:30 மணிக்கு 20671 பெங்களூரூ வந்தேபாரத் ரயிலும், மாலை 5:25 மணிக்கு 20672 மதுரை வந்தேபாரத் ரயிலும் செல்லும் என்பதால் மக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

நாமக்கல் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் மொத்தம் 238 சிறப்பு முகாம்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு முதல் கட்டமாக ஜீலை 15 முதல் ஆக 14 வரை 102 முகாம்கள் நடத்த தீர்மானிக்கப்பட்டு 90 முகாம் நடத்தப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் பட்டியலிடப்பட்ட சேவைகள் தொடர்பாக 23,563 மனுக்களும் பட்டியலிடப்படாத சேவைகள் தொடர்பாக 14,114 மனுக்கள் என மொத்தம் 37,677 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

திருச்செங்கோடு அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில்(ஐடிஐ) 2025-26 ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 31.08.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.எனவே 8 (ம)10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற தகுதியுள்ள மாணவ / மாணவியர்கள் மாவட்ட ஆட்சியரக வளாகம்,மூன்றாம் தளம், அறை எண் 304-ல் உள்ள மாவட்ட திறன் பயிற்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பித்து பயன்பெறலாம். மேலும் விபரங்களுக்கு:79041 11101, 82201 10112 எண்களை தொடர்பு கொள்ளலாம்.

நாமக்கல் வழியாக ஹூப்ளி – காரைக்குடி இடையே வரும் 14ஆம் தேதி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயிலானது ஹூப்ளி ரயில் நிலையத்திலிருந்து 14ஆம் தேதி மாலை 4:00 மணிக்கு புறப்பட்டு சேலம், நாமக்கல், கரூர் வழியாக காரைக்குடிக்கு செல்கிறது. இதேபோல் காரைக்குடியிலிருந்து மறுநாள் 15ஆம் தேதி புறப்பட்டு நாமக்கல் வழியாக ஹூப்ளி செல்கிறது.

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 475 காசுகளாக இருந்து வந்தது. இதற்கிடையே நேற்று(ஆக.11) நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் அதன் விலையை 10 காசுகள் உயர்த்த முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 485 காசுகளாக அதிகரித்துள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 25 காசுகள் அதிகரித்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.