India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக எம்.பி. ராஜேஷ்குமார் தனது X பக்கத்தில் பொங்கல் வாழ்த்துக்களை கூறினார். அதில் அவர், உள்ளத்தில் அன்பு பொங்கட்டும், இல்லத்தில் மகிழ்வு பொங்கட்டும் அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் நல்வாழ்த்துகள் என்று குறிப்பிட்டு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
நாமக்கல் நகர் மையப்பகுதியில் அமைந்துள்ளது உலக பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் ஆலயம். இந்த ஆலயத்தில் இன்று அதிகாலை நடைத்திருக்கபட்டு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார் .10:30 மணிக்கு அபிஷேகம் பின்னர் 3.30 மணிக்கு நடை சாத்தப்பட்டு வெண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மாலை 7 மணி அளவில் பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளார்.
பரமத்திவேலூா் வாழைத்தாா் ஏலச் சந்தையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாழைத்தாரின் விலை உயர்வடைந்தது. நேற்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற ஏலத்தில் பூவன் வாழைத்தார் ரூ. 700, பச்சைநாடன் தார் ரூ. 500, ரஸ்தாளி தார் ரூ. 400, கற்பூரவல்லி தார் ரூ. 400, மொந்தன் வாழைக்காய் ஒன்று ரூ. 7-க்கும் ஏலம் போனது. வாழைத்தாரின் விலை உயர்வடைந்துள்ளதால் வாழை பயிர் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் ஜனவரி (20-01-2025) முதல் (24-01-2025) வரை 5 நாட்கள் சிறப்பு பயிற்சியாக, காளான் வளர்ப்பு தொழில் தொடங்க உள்ள பட்டியலின நபர்களுக்கு, 5நாட்கள் காளான் வளர்ப்பு இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வமுள்ள பட்டியலினத்தவர்கள் முன்பதிவு செய்து கொள்ள 04286-266345, 266650, 9943008802, 959746373 (ம) 7010580683 தொலைபேசி எண்களை அணுகவும்.
தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவின் கூட்டம் நாமக்கலில் இன்று 12ந் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. மழை பனி குளிர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை நுகர்வு அதிகரித்தது. இருப்பினும் முட்டை விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை ரூ 4.80 ஆகவே நீடிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் தினமும் 4 காவல் அதிகாரிகள் இரவு ரோந்து பணிக்காக எஸ்பி நியமிக்கிறார். அதன்படி இன்று (12/01/2025) இரவு ரோந்து பணி அதிகாரிகள் விவரம்: நாமக்கல் – கோவிந்தராசன் (9498170004), ராசிபுரம் – அம்பிகா (9498106528), திருச்செங்கோடு – முருகேசன்(9498133890), வேலூர் – ஷாஜகான் (9498167357) ஆகியோர் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடுவார்கள் என மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிஷியன் பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் www.tahdco.com மூலம் பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உமா தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் வளையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நான்காம் வகுப்பு பயிலும் ஜவகர் சிறுவர் மன்ற சிலம்ப மாணவி மேஹா அய்யன் திருவள்ளுவர் வெள்ளி விழா ஆண்டு போட்டிகளில் சுயமி பிரிவில் தேர்வாகி வெற்றி பெற்றுள்ளார். 10ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதனிடம் விருதும் பாராட்டு சான்றிதழும் பெற்றார்.
அல்லாள இளைய நாயக்கர் பிறந்த நாள் விழா ஜன-14ந் தேதி காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற உள்ள நிலையில், விழா நாளன்று ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால் போலீசார் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்விழாவில், அமைச்சர், எம்பி, எம்எல்ஏக்கள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில் எஸ்பி ராஜேஸ்கண்ணன், விழா நடைபெறும் அணைக்கட்டு பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ள நிலையில், பள்ளி கல்லூரிகளுக்கு 6 நாள் தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதனால் நேற்று இரவு முதலே பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். குறிப்பாக நாமக்கல் பேருந்து நிலையத்திலும் நேற்று இரவு சேலம், ஈரோடு, மதுரை போன்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் கூட்டம் அலைமோதியது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.