India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

நாமக்கல் மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனத்தில் உள்ள, 63 சீனியர் மற்றும் ஜூனியர் சூப்பர்வைசர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. இதற்கு B.E/B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளமாக ரூ.45,000 முதல் ரூ.1,15,000 வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<

நாமக்கல்லில் நாமகிரி தாயாரையும் நரசிம்ம பெருமாளையும் இரு கைகளை கூப்பி வணங்கி நின்ற கோலத்தில் ஆஞ்சநேயர் சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆகஸ்ட் 22ஆம் தேதி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது தொடர்ந்து வெற்றிலை துளசி மாலை அணிவிக்கப்பட்டு சொர்ணாபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாதாரணை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் மாநகராட்சியில் உள்ள வார்டு எண்.38, 39 ஆகிய பகுதிகளில் கொண்டிசெட்டிபட்டி நகராட்சி நடுநிலைப்பள்ளி, வெங்கரை பேரூராட்சி வார்டு எண் 3.4,8,10,11, 12,14,15 ஆகிய பகுதிகளில் வெங்கரை சமுதாயகூடம், ஆர்.புதுப்பட்டி பேரூராட்சி வார்டு எண் 1 முதல் 15 வரை ஆகிய பகுதிகளில் பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளி , ’உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நாளை (23.08.2025) சனிக்கிழமை நடைபெறுகின்றது.

நாமக்கல் மக்களே NTPC நிறுவனத்தில் காலியாக Executive Trainee பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.40,000 முதல் 1,40,000 வரை வழங்கப்படும். இது குறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க இங்கு <

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (22-08-2025) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ. 90-க்கும், முட்டை கோழி விலை கிலோ ரூ.99-க்கும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல் முட்டை கொள்முதல் விலை ரூ.5.00 ஆக நீடித்து வருகிறது. கடந்த நான்கு நாட்களாக முட்டை விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.

புதிதாக வீடு அல்லது நிலம் வாங்கினால் பத்திரம் முடிப்பதை போல, பட்டா வாங்குவதும் மிக முக்கியமான ஒன்றாகும். இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பட்டாவை ஒரு ரூபாய் கூட லஞ்சம் கொடுக்காமல் பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், <

நாமக்கல் மாவட்டத்தில் நாளை ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்:
♦️நாமக்கல், நகராட்சி நடுநிலைப்பள்ளி கொண்டுசெட்டிபட்டி.
♦️வெங்கரை, சமுதாயகூடம் வெங்கரை.
♦️ஆர்.புதுப்பட்டி, அரசு உயர்நிலைப்பள்ளி ஆர்.புதுப்பட்டி.
♦️பள்ளிபாளையம், அரசினர் மேல்நிலைப்பள்ளி, குள்ளநயக்கன்பாளையம்.
♦️புதுச்சத்திரம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கரைக்குறிச்சி.
♦️சேந்தமங்கலம், KPS திருமணமஹால் அக்கியம்பட்டி. SHARE பண்ணுங்க மக்களே.!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையில் சாமி கும்பிட்டு விட்டு ஒரு வேனில் மீண்டும் சேலம் நோக்கி மோகன், சுசீலா, கமலம், சுகுமார், புவனேஸ்வரி ஆகிய ஐவர் இன்று குமாரபாளையம் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது நின்றுகொண்டிருந்த ஈச்சர் வாகனத்தின் பின்புற பகுதியில் மோதியதில், ஆம்னி வேன் ஓட்டிய சுகுமார், மோகன், கமலம் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். புவனேஸ்வரி, சுசிலா ஆகியோர் படுகாயமடைந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு 4 சக்கர வாகன ரோந்து பணிக்காக காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் நாமக்கலில் ராஜமோகன் ( 9442256423), வேலூர் – ரவி ( 9498168482), ராசிபுரம் – கோவிந்தசாமி ( 9498169110), திருச்செங்கோடு – டேவிட் பாலு ( 9486540373), திம்மநாயக்கன்பட்டி – ரவி ( 9498168665), குமாரபாளையம் – செல்வராஜூ ( 9994497140), ஆகியோர் இரவு ரோந்து பணியில் உள்ளனர் .

நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை அருகே மிகவும் பிரசித்தி பெற்ற நைனாமலை வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் சுமார் 2600 அடி உயரம் உள்ள மலையில் அமைத்துள்ளது. இங்கு உள்ள மூலவரை தரிசித்தால் கடன் சுமை நீங்கும். மேலும், திருப்பதி பெருமானை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இதை கடன் சுமையில் இருக்கும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.