Nagapattinam

News April 14, 2024

கீழ்வேளூர்: காலில் விழுந்து வாக்கு சேகரிப்பு

image

கீழ்வேளூர் அடுத்த தேவூர் பகுதியில் ஒன்றிய தலைவர் ஆர்.நிஜந்தன் தலைமையில் தொண்டர்கள் நேற்று வீடு வீடாக சென்று தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர். மேலும் இந்த ஒரு முறை மட்டும் பாஜகவிற்கு வாக்களித்து பாருங்கள் நாடாளுமன்றத்தில் உங்களுக்காக வேட்பாளர் குரல் கொடுப்பார். மேலும் கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் ஆர்.நிஜந்தன் வாக்காளர்கள் காலிலேயே விழுந்து வேட்பாளருக்காக ஆதரவு திரட்டினார்.

News April 13, 2024

நாகப்பட்டினம்: வாக்களிப்பதின் அவசியம் குறித்து விழிப்புணர்வு

image

கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் சாட்டியக்குடி மற்றும் வலிவலம் ஊராட்சியில் நேற்று பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்வரும் மக்களவை பொதுத்தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடத்தினார்.

News April 13, 2024

நாகை அருகே 66 ஆண்டுகளாக தொடரும் மத நல்லிணக்கம்

image

நாகை மாவட்டம் வலிவலம் கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன்
சுவாமி ஊர்வலம் நேற்றிரவு கோலாகலமாக நடைபெற்றது. இக்கோயிலில் திருவிழா கடந்த ஏப்ரல் 11ம் தேதி பூச்சொரிதலுடன் துவங்கியது. இவ்விழாவினை 66 ஆண்டுகளாக மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் இந்து,கிறிஸ்டின், முஸ்லிம், என மூன்று மதத்தை சேர்ந்தவரும் உபயதாரர்களாக பங்கு கொண்டு நடத்தி வருவது மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் உள்ளது.

News April 13, 2024

நாகையில் காலை 10 மணிக்குள் மழை

image

நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

தேர்தல் அன்று கடைகள் வர்த்தக நிறுவனங்கள் முழு அடைப்பு

image

நாகை தேர்தல் (ஏப்ரல்.19) அன்று நடைபெறவிருக்கும் மக்களவை பொது தேர்தலில் 100% வாக்களிக்கும் பொருட்டு கடைகள், வர்த்தக மற்றும் உணவு நிறுவனங்கள், மற்றும் மோட்டார் போக்குவரத்து துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 135 கீழ் பொது விடுமுறை அளிக்கப்பட வேண்டும். அதனை மீறி செயல்படுபவர்கள் புகார் அளிக்க 9442912527 என்ற நம்பரை தொடர்பு கொள்ளலாம் ஆட்சியர் அறிவித்தனர்.

News April 12, 2024

நாகை: 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

image

நாகை மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமானது வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மணிக்கு 30-40 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 12, 2024

கூரை வீடு எரிந்த விவகாரம்; வெடிக்கடைக்கு சீல்

image

பாஜகவினர் வெடி வைத்து நேற்று குடிசை வீடுகள் எரிந்த விவகாரம் தொடர்பாக பாஜகவினர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வீட்டின் உரிமையாளர்கள் மற்றும் விஏஓ வீரமணி கொடுத்த புகார் என இரண்டு வழக்குகள் வெளிப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, தடை செய்யப்பட்ட இரட்டை சரம் வெடியை விற்பனை செய்த வெடிக்கடையினை வருவாய் துறையினர் இன்று பூட்டி சீல் வைத்தனர்.

News April 12, 2024

ரயில்வே பாலம் அமைக்க கோரி பொதுமக்கள் மறியல்

image

நாகை கீரை கொல்லை தெருவில் ரயில்வே கீழ் பாலம் அமைக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக பொதுமக்கள் போராடி வருகின்றனர். இது சம்பந்தமாக ஆய்வு செய்ய வந்த ரயில்வே துறை கீரை கொல்லை தெருவில் ஆய்வு செய்து, கீழ் பாலம் அமைப்பதற்கு போதிய சாத்திய கூறுகள் இல்லை என்று தெரிவித்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திடீர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News April 12, 2024

நாகையில் மழைக்கு வாய்ப்பு

image

நாகை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் பரவலான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News April 11, 2024

தேர்தலுக்குப் பிறகு கச்சத்தீவை மீட்பது உறுதி

image

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ள நிலையில் வேட்பாளர்கள் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை வாரி இறைத்து வாக்கு சேகரித்து வருகின்றனர். அதன்படி, நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகூர் பட்டினச்சேரியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் இன்று வாக்கு சேகரித்தார். அப்போது தேர்தல் முடிந்த பிறகு கச்சத்தீவை மீட்பது உறுதியெனவும், மக்கள் அனைவரும் தாமரை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.