India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை EGS பிள்ளை பொறியியல் கல்லூரியில் 71 வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நாளை 15 ந்தேதி காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் நடக்கிறது. பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயங்களை வழங்கியும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகளை வழங்கியும் பேசுகிறார் மேற்கண்ட தகவலை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை இன்று தெரிவித்துள்ளது
வேளாங்கண்ணிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதால் நகருக்குள் வாகன நெரிசல் ஏற்படுகிறது. நகர்புறத்திற்கு வாகனங்கள் வர மாற்றுவழி ஏற்படுத்த திட்ட மதிப்பீடு செய்து நில எடுப்பு பணிக்கு ரூ.9 கோடி 78 லட்சம் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுத்து பணிகள் துவங்கப்படாமல் உள்ளதால் விரைவில் பணிகளை துவக்க சட்டமன்ற மதிப்பீட்டு குழு தலைவர் காந்திராஜனிடம் பேருராட்சி துணை தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன் நேரில் மனு அளித்தார்.
அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவை ஒட்டி இன்று தொடங்கி வரும் 20ஆம் தேதி வரை மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நாகூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது. இதில் மாணவர்கள் திரளாக பங்கேற்க கூட்டுறவு இணை பதிவாளர் தயாள விநாயகன் அமல்ராஜ் தெரிவித்துள்ளார்.
நாகையில் பாஜக மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உடல்நலக்குறைவால் காலமானார். இந்நிலையில், அரசியல் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது சொந்த ஊரான செம்போடையில் இறுதி ஊர்வலம் இன்று பிற்பகல் நடக்கிறது. இதனிடையே அதிமுக முன்னாள் மாவட்ட செயலாளரும் முன்னாள் மீன்வளத்துறை அமைச்சருமான ஜெயபால் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
தமிழகத்தில் 19 மாவட்டங்களுக்கு அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், காலை 10 மணி வரை நாகப்பட்டினம் மாவட்டத்தில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாகை மக்களே உங்கள் பகுதியில் மழை பெய்து இருந்தால் கீழே கமெண்ட் செய்யவும்.
தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் இன்று நாகை மாவட்டம் வந்திருந்தார். அப்போது திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரி மாணவர் விடுதிக்கு சென்ற அவர் மாணவர்களுக்கான சமையலறை, கழிவறை குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் உடனிருந்தார்.
வங்கக்கடலில் உருவாக்கியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இதனை தொடர்ந்து, நாகை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி வரை நாகை மாவட்டத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW.
நாகப்பட்டினம் மாவட்டம் அக்கரைப்பேட்டையை சேர்ந்த செல்வநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகு மற்றும் 12 மீனவர்களை இலங்கை கடற்படை இன்று காலை கைது செய்தது. முல்லைத்தீவு கடல் பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட நிலையில் 12 மீனவர்களையும் வரும் 20ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க பருத்தித் துறை ஊர்காவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாகையில் இருந்து அக்கரை பேட்டை டாட்டா நகரை சேர்ந்த செல்வநாதன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் ஒரு விசைப்படகிலிருந்து 12 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறை பிடித்து சென்றனர்.
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களுக்கு பட்டய கணக்காளர் இடைநிலை, நிறுவன செயலாளர் இடைநிலை மற்றும் செலவு மற்றும் மேலாண்மை கணக்காளர் இடைநிலை ஆகிய போட்டி தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் ஒரு வருட இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதுகுறித்த விவரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளரை தொடர்பு கொள்ள ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.