Nagapattinam

News April 17, 2024

பட்டா வழங்காததை கண்டித்து தேர்தல் புறக்கணிப்பு

image

நாகை அருகே தென்மருதூரில் மூன்று தலைமுறைகளாக 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு பட்டா வழங்க பலமுறை மனு அளித்துள்ளனர். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்காததால் தேர்தலை புறக்கணிக்க போவதாக அதிரடி முடிவெடுத்து பூத் ஸ்லிப்பை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பி நேற்று போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

News April 17, 2024

இந்தியா கூட்டணிக்கு, சிவசேனா கட்சி ஆதரவு

image

நாகப்பட்டினம், நாயுடு அரங்கத்தில் இன்று, சிவசேனா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சுந்தர் வடிவேலன் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார், அதில் ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு சுமைகளை மக்கள் மீது சுமத்தி இருக்கும் பாஜகவை எதிர்த்தும், ராகுல் காந்தி பிரதமராக வரவேண்டும் என்று கூறி இந்திய கூட்டணிக்கு தங்களுடைய முழு ஆதரவு இருப்பதாக அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

News April 17, 2024

நாகை: உடனே வெளியேற மாவட்ட ஆட்சியர் உத்தரவு

image

நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரங்கள் அனைத்தும் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது.
எனவே தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி 6 மணிக்கு மேல் வேட்பாளர்கள் உள்ளிட்ட யாரும் எவ்வித பிரச்சாரத்திலும் ஈடுபட கூடாது என்றும் தொகுதிக்கு சம்பந்தம் இல்லாத அனைவரும் நாகை மாவட்டத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் உத்தரவிட்டுள்ளார்

News April 17, 2024

நாகை: 5 நாட்கள் டாஸ்மாக் அடைப்பு

image

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை நாகை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடியிருக்க வேண்டும். வரும் 21 ஆம் தேதி மகாவீரர் ஜெயந்தி என்பதால் அன்றைய தினமும், மே. 1 தேதியும் மதுபான கடைகளை மூடியிருக்க வேண்டும். இந்த நாட்களில் மதுபான கடைகள் மற்றும் பார்கள் திறந்து இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

News April 17, 2024

மூன்று மதத்தினரும் பாஜகவிற்கு ஆதரவு: நாகை வேட்பாளர் பேச்சு

image

கீழ்வேளூர் பாஜக ஒன்றிய தலைவர் நிஜந்தன் தலைமையில், நாகை மக்களவை தொகுதியில் போட்டியிடும் எஸ்.ஜி.எம் ரமேஷ் நேற்று தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். கீழ்வேளூர் அடுத்த செருநல்லூர், குருமனாங்குடி, குருக்கத்தி, கூத்தூர், தேவூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், “ இந்து மட்டுமின்றி இஸ்லாமியர், கிருஸ்தவர் மக்களிடையே பாஜகவிற்கு மிகுந்த வரவேற்பும் ஆதரவும் உள்ளது” எனக் கூறி வாக்கு சேகரித்தார்.

News April 16, 2024

தேர்தல் செலவினம் குறித்த ஆய்வு கூட்டம்

image

நாகை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் நாகை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்களின் செலவினம் குறித்த ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நாகப்பட்டினம் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் ரிஷிகேஷ் ஹேமந்த் பட்கி தலைமை தாங்கினார்
திருவாரூர் மாவட்ட தேர்தல் செலவின பார்வையாளர் வருண் சோனி முன்னிலை வகித்தார். இதில், மாவட்டத்தின் அனைத்து தேர்தல் பொறுப்பு அதிகாரிகள் பங்கேற்றனர்.

News April 16, 2024

நாகையில் திடீர் மின்வெட்டு-மக்கள் அவதி

image

நாகை நகராட்சிக்கு உட்பட்ட பாரதி மார்க்கெட் அருகே மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட ட்ரான்ஸ்பார்மில் ஓவர் லோடு காரணமாக இன்று திடீர் மின்வெட்டு ஏற்பட்டது‌. இதனால் இந்த பகுதியைச் சுற்றியுள்ள அரியபத்திரப்பிள்ளை தெரு உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டனர். உடனடியாக தகவறித்து வந்த மின்வாரியத்துறையினர் விரைந்து பழுதை நீக்கியதால் மீண்டும் மின் விநியோகம் சீரானது.

News April 16, 2024

தேர்தலுக்குப் பிறகு பாஜக கட்சியே இருக்காது: அமைச்சர்

image

நாகை மக்களவைத் தொகுதியில் I.N.D.I.A கூட்டணி சார்பில் போட்டியிடும் சிபிஐ வேட்பாளர் வை.செல்வராஜ் ஆதரித்து, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை நாடி வரும் பாஜக கட்சி தேர்தலுக்குப் பிறகு காணாமல் போய்விடும் என்றார். பின்னர், அப்பகுதி மக்களிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

News April 16, 2024

போலீசாருக்கு நாகை எஸ்.பி. உத்தரவு 

image

நாகை: தேர்தலின் போது வாக்குசாவடிகளில் பணியாற்றும் போலீசார் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட விழிப்புணர்வுடன் பணியாற்ற வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு வரும் வாக்காளர்களிடம் கடுமையான வார்த்தைகளை பேசகூடாது,
வாக்காளர்கள் கேட்கும் கேள்விகளுக்கு கனிவுடன் பதில் கூற வேண்டும். கோபமான வார்த்தைகளால் வாக்கு மையத்தில் பிரச்சனை எழுந்து விடாமல் போலீசார் பணியாற்ற வேண்டுமென நாகை போலீஸ் எஸ்.பி ஹர்சிங் தெரிவித்துள்ளார். 

News April 16, 2024

தேர்தல் பறக்கும் படையினரால் பணம் பறிமுதல்

image

வேதாரண்யம் அருகே டிஎஸ்ஓ ரமேஷ் தலைமையிலான பறக்கும் படை அதிகாரிகள் நேற்று தீவிர வாகன சோதனை ஈடுபட்டனர். அப்போது வேதாரண்யம்- நாகை பிரதான சாலையில் வந்த வாகனம் ஒன்றை மடக்கி சோதனை செய்ததில், கணக்கில் வராத ரூ.1,78,200 இருப்பது தெரிய வந்தது. இப்பணத்தை தேர்தல் பறக்கும் படையினரால் வரும் முதல் செய்யப்பட்ட அரசு கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.