Nagapattinam

News November 19, 2024

டைடல் பார்க் அமையும்இடத்தை மாற்ற கோரிக்கை

image

நாகை அருகே செல்லூர் பகுதியில் தமிழக அரசு சார்பில் தொழில் பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தரப்பில் ஆதரவு தெரிவிக்கும் நிலையில் மாவட்ட வளர்ச்சி குழுமத்தினர் விளை நிலங்களில் டைடல் பார்க் அமைவதை கைவிட்டு நகரின் மத்தியில் ஆர்.டி.ஒ. அலுவலகம் அருகே அமைக்க வலியுறுத்தி நேற்று மனுநீதி நாளில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்

News November 19, 2024

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 200 மனுக்கள் 

image

நாகப்பட்டினம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு வங்கி கடன் உதவி தொகை போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சுமார் 200 மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அணுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

News November 19, 2024

நோபல் சாதனை படைத்த 4 மாத குழந்தை

image

நாகப்பட்டினம் மாவட்டம் திருப்பூண்டி ஊராட்சி, காரைநகரை சேர்ந்த சதீஷ்குமார் – சுபஸ்ரீ தம்பதியரின் 4 மாத பெண் குழந்தை தலைவர்களின் புகைப்படங்கள், பழங்கள் ஃபிளாஸ் கார்டு மூலம் அடையாளம் காட்டுதலில் நோபல் சாதனை படைத்துள்ளார். இன்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் மாவட்ட ஆட்சியர் ஆகாஷை குடும்பத்தினர்கள் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

News November 19, 2024

கலைஞர் கடன் உதவி பெறலாம்

image

நாகை மாவட்டத்தில் குறுந்தொழில் முனைவோர்கள் மற்றும் குறு நிறுவனங்கள் கலைஞர் கடனுதவி திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம். ஆர்வமுள்ளவர்கள் மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் அல்லது தாய்கோ வங்கி கிளை மேலாளரை அணுகி 7 சதவிகித வட்டியில் ரூ.20 லட்சம் வரை நடைமுறை கடன் மற்றும் மூலதன கடன்களை இத்திட்டத்தில் பெறலாம் என ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

News November 19, 2024

நாகையில் பள்ளிகளுக்கு விடுமுறை

image

நாகை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து ஆட்சியர் ஆகாஷ் உத்தரவிட்டுள்ளார். காரைக்கால் மாவட்டத்தை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் தொடர் கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, தஞ்சையில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே முடிவெடுக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 18, 2024

போலி பொருட்களா? புகார் தரலாம் காவல் துறை தகவல்

image

நாகை தஞ்சை மாவட்டங்களை உள்ளடக்கிய திருச்சி மண்டல அறிவுசார் சொத்துரிமை அமலாக்க பிரிவு போலீசார் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில், பொதுமக்கள் தினமும் வாங்கும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் ஆடைகள் காபி, டீ தூள் சோப்பு தூள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் போலியானது என தெரியவந்தால் திருச்சி காவல் ஆய்வாளர் 9994111820 என்ற எண்ணில் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

News November 18, 2024

நாகையில் மக்கள் குறைதீர் கூட்டம்

image

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் வங்கிக் கடன் மற்றும் உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து மொத்தம் 200 மனுக்களை அதிகாரிகள் பெற்றனர்.

News November 17, 2024

வேதாரண்யத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

image

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் சுமார் 18 செ.மீ. மற்றும் கோடியக்கரையில் 14 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்நிலையில் நாகை மாவட்ட ஆட்சியர் பா.ஆகாஷ் இரவில் நேரடியாக களஆய்வு மேற்கொண்டார்.இந்நிகழ்வில் வேதாரண்யம் வட்டாட்சியர் திலகா உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். மேலும் தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நீரை விரைந்து வெளியேற்ற ஆட்சியர் அறிவுறுத்தினார். 

News November 17, 2024

கீழையூர் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

image

நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிரை அடுத்த அருந்தவன்புலத்தை சேர்ந்தவர் அருள்தாஸ் (59). இவர் கீழையூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் திடீரென காலை நெஞ்சு வலிப்பதாக தனது மனைவி அந்தோணி மேரியிடம் கூறியுள்ளார். அதனைத் தொடர்ந்து ஒரத்தூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதித்து சிகிச்சையில் இருந்தவர் உயிரிழந்தார். அவருக்கு சக காவலர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

News November 17, 2024

நாகை உணவு பாதுகாப்பு அதிகாரி எச்சரிக்கை

image

நாகை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் புஷ்பராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாகை நகராட்சி நாகூர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு நகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு துறை உரிமம் அல்லது பதிவு சான்று இல்லாமல் உணவு வணிகம் செய்யும் நிறுவனங்கள் மற்றும் உணவு பண்டங்கள் விற்பவர்கள் மீது தர நிர்ணய சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!