India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருக்குவளை அருகே வலிவலம் அருள்மிகு இருதய கமலநாத சுவாமி திருக்கோயில் சித்திரை பெருவிழா விடையாற்றி உற்சவத்துடன் நேற்று நிறைவு பெற்றது. இதனை முன்னிட்டு மூலவரான மனத்துணை நாதர் மற்றும் மாழையொண்கண்ணி அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
மணல்மேடை சேர்ந்த சண்முகம் மனைவி ஜானகி (70) ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 2020ஆம் ஆண்டு வீட்டில் ரத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என ஜானகியின் 2வது மகன் பாரதிதாசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து அவரின் முதல் மகன் பாரிராஜன் தான் தாயை அடித்து கொலை செய்ததாக சிபிசிஐடி போலீசார் நேற்று அவரை கைது செய்தனர்.
வடக்குபொய்கைநல்லூரை சேர்ந்த ரோகிஸ்வரன் இவர் வேட்டைக்காரன்இருப்பு கிராமத்தில் உள்ள பிஎஸ்என்எல் எக்ஸ்சேஞ்சில் உரிமம் பெற்று இணையதள சேவை வழங்கி வருகிறார். இந்த நிலையில், நாலு வேதபதியை சேர்ந்த அன்பழகன் என்பவர் தொழில் போட்டி காரணமாக ஆப்டிகல் இணையதள ஒயரை துண்டித்து சேதப்படுத்தியுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் ரோகிஸ்வரன் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைகவசம் அணிய வேண்டும் என்பது நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் நாகை மாவட்டத்தை பொருத்தவரை பலர் அதனை காற்றில் பறக்க விட்டு தலைக்கவசம் அணியாமல் சென்று வருகின்றனர். தற்பொழுது கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் இருசக்கர வாகனத்தில் செல்லும் அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும் என டிஎஸ்பி பாலகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார்.
நாகை வேளாண்துணை இயக்குனர் தெய்வேந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் விளைநிலங்களை கோடை உழவு செய்வதன் மூலம் வயல்வெளிகளில் உள்ள பூச்சிகளின் புழுக்கள், முட்டைகள் அனைத்தும் மண்ணின் மேல் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுகிறது . இதனால் பயிர்களில் பூச்சிகளின் தாக்குதல் குறைந்து விளைச்சல் அதிகரிக்கும். எனவே கோடை உழவு செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொடியாலத்தூர் ஊராட்சிக்குட்பட்ட கோவில் பத்து கிராமத்தில் உள்ள தூண்டி வீரன் கோயிலில் ஆண்டு பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக பக்தர்கள் வாகனங்களில் குதிரை, சுவாமி சிலைகளை ஏற்றி வரும்போது பட்டாசு வெடிக்கப்பட்டது. அப்போது அதிக சத்தத்தோடு பட்டாசு வெடித்ததில் முதியவர் பயந்து ஓடியதில் கீழே விழுந்து படுகாயம் அடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
எட்டுக்குடி முருகன் கோயிலில் சித்திரை பெருவிழாவின் 13 ஆம் நாளான நேற்று இரவு சர்வ பிராயச்சித்தா அபிஷேகம் நடைபெற்றது. சித்திரா பௌர்ணமி முன்னிட்டு இரண்டரை தினங்கள் தொடர்ந்து பாலபிஷேகம் செய்யப்பட்ட நிலையில், முருகனின் திருமேனியில் படிந்த பாலாடைகள் அனைத்தும் அபிஷேக திரவியங்கள் கொண்டு எடுக்கப்பட்டு தற்போது விபூதி காப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வேளாங்கண்ணி வெள்ளையாற்றின் முகத்துவாரத்தில் செருதூர் மீனவ கிராம கடற்கரையோரம் 45 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கிடப்பதாக வேளாங்கண்ணி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகையில் செயல்பட்டு வந்த அரசு தலைமை மருத்துவமனை தற்போது ஒரத்தூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதனால் ரத்ததானம் அளிக்க முன் வருவோர் 15கி.மீ சென்று ரத்ததானம் அளிக்க வேண்டியுள்ளதால் ஒரு சிலர் தயக்கம் காட்டுகின்றனர். எனவே பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனையில் ரத்ததானம் அளிக்க மருத்துவமனை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகை மாவட்டத்தில் சமுதாய வளர்ச்சிக்கு சேவை புரிந்த 15 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்கிஸ் தெரிவித்துள்ளார். ரூ.1 லட்சம், பாராட்டு பத்திரம், பதக்கம் கொண்ட விருதினை பெற தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் சென்று மே.15க்குள் விண்ணப்பிக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.