India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகை மாவட்ட கலெக்டர் ஆகாஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், நாகை கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற டிச.03 ஆம் தேதி நடைபெறுகிறது. கலெக்டர் ஆகாஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டம் அன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. இந்த கூட்டத்தில் நாகை மாவட்ட விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்தார்.
தென்கிழக்கு வங்ககடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, 12 மணி நேரத்தில் தற்காலிக புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இந்த புயலானது நாகையில் இருந்து 320 கீ.மி தொலைவில் நிலைகொண்டுள்ளதாகவும், மணிக்கு 3 கீ.மி வேகத்தில் நகர்ந்து காரைக்கால்-மாமல்லபுரம் இடையே வலுவிழந்து நவ.30 அன்று கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.29) நாகை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் அதி தீவிர மழை மற்றும் நாளை மறுநாள் (நவ.30) மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்!
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் தங்கி இருந்த மக்களை அதிகாரிகள் பள்ளிகளில் தங்க வைத்தனர். மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள காரணத்தால் நாகை நகராட்சி மேல்நிலை பள்ளி, அரசு மேல்நிலை பள்ளி உள்ளிட்ட 5 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. SHARE IT
நாகை மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை. வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வந்தது. நாகை மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டிருந்த ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கையை திரும்ப பெறுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனால் நாகை மாவட்ட பள்ளி, கல்லுரிகளுக்கு இன்று விடுமுறை இல்லை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலோர டெல்டா மாவட்டங்களில் பரவலாக பெய்து வந்தது. அதிலும் குறிப்பாக இன்று (நவ.27) முதல் நாளை (நவ.28) காலை 8.30 மணி வரை நாகை மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காற்றின் வேக மாறுபாடு காரணமாக ரெட் அலெர்ட் எச்சரிக்கையை திரும்ப பெறுவதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் புயல் சின்னம் காரணமாக திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில் நாளை (நவ.28) காலை 8 மணி வரை நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் அதி தீவிர மழை (ரெட் அலெர்ட்) பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இப்போதே பகிரவும்!
வங்க கடலில் நிலவும் புயல் சின்னம் காரணமாக நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் இன்று (நவ.27) காலை 8 மணி நிலவரப்படி, கோடியக்கரையில் 18 செ.மீ (சென்டிமீட்டர்), நாகை 17 செ.மீ, வேளாங்கண்ணி 17 செ.மீ, திருப்பூண்டி 14.5 செ.மீ, திருக்குவளை 12 செ.மீ, வேதாரண்யம் 12 செ.மீ, தலைஞாயிறு 11 செ.மீ மழை பதிவாகி உள்ளது.
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.அந்த வகையில் நாகப்பட்டினம் மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக ஜானி டாம் வர்கிஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே நாகை மாவட்ட ஆட்சியராக சிறப்பாக பணிபுரிந்து மாவட்டத்தின் அனைத்து பகுதிகளையும் அறிந்தவர் என்பது குறிப்பிடதக்கது.
வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்திற்குள் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நாகையில் இருந்து 400 கி.மீ. தென்கிழக்கு திசையில் ஆழ்ந்த காற்றழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.