India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024 – 25 ராஷ்ட்ரிய க்ரிஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வேளாண் காடு வளர்ப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் தங்கள் வயல் வரப்புகளில் மரக்கன்றுகள் சாகுபடி செய்ய ஏதுவாக தேக்கு கொய்யா, மருது, இலுப்பை, நாவல் போன்ற மரக்கன்றுகள் 100 சதவிகித மானியத்தில் வழங்கப்படுகின்றன. எனவே இதில் பயன்பெற விவசாயிகள் உழவன் செயலி மூலம் பதிவு செய்ய ஆட்சியர் ஆகாஷ் கேட்டு கொண்டுள்ளார்.
நாகூர் ஆண்டவர் தர்கா கந்தூரி விழாவை முன்னிட்டு வருகின்ற 12 ந்தேதி வியாழக்கிழமை நாகை மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்தும், அதனை ஈடு செய்யும் விதமாக 21-12-2024 சனிக்கிழமை அன்று வேலை நாளாக நாகை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
நாகை மாவட்ட குறு,சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் (udyamregistration.gov.in) என்ற இணையதளத்தில் உத்யம் சான்றிதழ் விண்ணப்பித்து கொள்ளலாம். இது ஒன்றிய மற்றும் மாநில அரசின் சலுகைகள் மற்றும் திட்டங்களைப் பெற உதவியாக இருக்கும். எனவே குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உத்யம் சான்றிதழுக்கு பதிவு செய்து சான்றிதழ் பெற்று வைத்துக் கொள்ளுமாறு நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
நாகப்பட்டினம் கடைவீதியில் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட சீன பூண்டுகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் புஷ்பராஜ் தலைமையில், நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அன்பழகன், ஆண்டனிபிரபு, பாலகுரு, சீனிவாசன், திலீப், சஞ்சய் ஆகியோர் வணிக நிறுவனங்களில் நேற்று அதிரடி ஆய்வு நடத்தினர். இதில் பத்து கடைகளில் 100 கிலோ சீன பூண்டு பறிமுதல் செய்தனர்.
நாகப்பட்டினம் மாவட்ட பாஜக தலைவர் கார்த்திகேயன் கடந்த மாதம் உயிரிழந்தார். இந்த நிலையில் அவரது படத் திறப்பு விழா நாகப்பட்டினம் தனியார் மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது. இதில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், பாஜக மாநில குழு ஒருங்கிணைப்பாளர், மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் மாவட்ட ஆட்சியர் நாளை (03.12.2024) காலை 9:30 மணி அளவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இந்நிகழ்வில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகள் உரிய நேரத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை (03.12.2024) காலை 10.00 மணி அளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இதில் நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை முன்வைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம் அபிராமி அம்மன் சன்னதி அருகில் 11ம் தேதி நாகூர் தர்கா சந்தனக்கூடு ஊர்வலம் தொடங்க உள்ள இடத்தில் இருந்த பழைய தீயணைப்பு துறை தண்ணீர் தொட்டியில் இருந்த ஐந்து டன் அளவிற்கான குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் இன்று ஜேசிபி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர். பணிகளை நகர மன்ற தலைவர் மாரிமுத்து நகராட்சி ஆணையர் லீமா சைமன் ஆகியோர் பார்வையிட்டனர்.
நாகை மாவட்டம், கீழ்வேளூர் பகுதியை சேர்ந்தவர் நீலமேகம் (51). இவர் பாலக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் மாவட்ட குழந்தைகள் நலக்குழு பாலக்குறிச்சி பள்ளியில் மாணவிகளுக்கு ஆலோசனை அளிக்க சென்றனர். அப்போது பள்ளியின் முன்னாள் த.ஆசிரியர் நீலமேகம், தங்களிடம் இரட்டை அர்த்தத்தில் பேசியதாக மாணவிகள் புகாரளித்தனர். அதன்பேரில் அவர் போக்ஸோவில் கைது செய்யப்பட்டார்.
நாகப்பட்டினம் பாலக்குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தவர் நீலமேகம். இவர் தற்போது அம்பல் அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், பாலக்குறிச்சி பள்ளி மாணவிகளிடம் இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக குழந்தைகள் நலக்குழு அளித்த புகாரின் பேரில் நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்தது.
Sorry, no posts matched your criteria.